தமிழ்த்தாய் வாழ்த்து நேரடியாக பாட தமிழக அரசு உத்தரவு

Updated : டிச 11, 2021 | Added : டிச 11, 2021 | கருத்துகள் (25) | |
Advertisement
சென்னை : 'அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் பாடுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். பதிவு செய்யப்பட்ட கருவிகளை பயன்படுத்தக் கூடாது' என தமிழக அரசு தெரிவித்துள்ளது.சமீப காலமாக அரசு விழாக்களில், தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் ஆகியவை, பதிவு செய்யப்பட்ட கருவிகள் வாயிலாக இசைக்கப்படுகின்றன. இதனால், விழாவில் பங்கேற்போர், தமிழ்த்தாய் வாழ்த்து


சென்னை : 'அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் பாடுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். பதிவு செய்யப்பட்ட கருவிகளை பயன்படுத்தக் கூடாது' என தமிழக அரசு தெரிவித்துள்ளது.



latest tamil news


சமீப காலமாக அரசு விழாக்களில், தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் ஆகியவை, பதிவு செய்யப்பட்ட கருவிகள் வாயிலாக இசைக்கப்படுகின்றன. இதனால், விழாவில் பங்கேற்போர், தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கும் போது, உதட்டளவில் கூட பாடுவதில்லை.

எவ்வித தேசப்பற்றோ அல்லது தமிழ் உணர்வோ இல்லாமல், இயந்திரகதியில் எழுந்து நிற்கின்றனர். எந்த நோக்கத்திற்காக, தமிழ்த்தாய் வாழ்த்தும், தேசிய கீதமும் இசைக்கப்படுகிறதோ, அந்த நோக்கம் சிதைந்து போவதாக அறியப்படுகிறது.


latest tamil news



எனவே, இனி வரும் காலங்களில், பதிவு செய்யப்பட்ட தேசிய கீதத்திற்கு பதிலாக, விழாவை நடத்துவோர், இதற்கென பயிற்சி பெற்றவர்களை வைத்து, தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் பாட, ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து துறைக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raja - Cotonou,பெனின்
11-டிச-202112:49:36 IST Report Abuse
raja "இதற்கென பயிற்சி பெற்றவர்களை வைத்து"..... ஆமா சொல்லிபுட்டேன்... பயிற்சி பெற்றவர்கள் மட்டும் பாடினால் போதுமானது ...வேற யாரும் பாட வேண்டிய அவசியம் இல்லை.... ஆகையால் நான் பாட மாட்டேன்..ஏன்ன எனக்கு தெரியாது... விடியலு அறிக்கை.....
Rate this:
Cancel
sankar - சென்னை,இந்தியா
11-டிச-202112:49:05 IST Report Abuse
sankar எவ்வளவோ வேலை இருக்கிறது என்பதற்காக விழாக்காளில் ஒரு நிமிடம் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவது தவறாம் . அய்யா மோகனம் நீர் சுத்த தமிழன் தான். இந்திக்காரனோ, மராத்திக்காரனோ இல்லை. இதுபோல் தாய் மொழியை மட்டந்தட்டிம் பேசியிருந்தால் இந்நேரம் அடிக்க வந்திருப்பார்கள்.
Rate this:
Cancel
11-டிச-202109:58:11 IST Report Abuse
ஆரூர் ரங் மொழி என்பது வெறும் தொடர்பு கருவி மட்டுமே. தமிழில் ஒவ்வொரு🤔 பத்தாண்டுகளிலும் பல மாற்றங்கள் வந்துள்ளன. சங்க காலத் தமிழை இப்போது யாரும் பேசுவதில்லை. அதிலுள்ள பல சொற்கள் இப்போது வழக்கொழிந்துவிட்டன.ஆக அந்த மொழியே வேறு . சமஸ்கிருதத்தில் உள்ள வார்த்தைகளாவது பல்வேறு உருவங்களில் எல்லா பாரத மொழிகளிலும் விரவியுள்ளன . ஆக ஆரியம் போல வழக்கொழிந்நது என்று இப்பாடலில் உள்ள வரிகள் அபத்தம். தமிழ்த்தாய் வாழ்த்து ஒரு மோசமான😪 அரசியல் கருவி. அவ்வளவே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X