ஊட்டி : நீலகிரி மாவட்டம், குன்னுார் அருகே, 8ம் தேதி விபத்தில் சிக்கிய ராணுவ ஹெலிகாப்டரில், முப்படை தளபதி பிபின் ராவத், மனைவி மதுலிகா உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.
![]()
|
இந்த துயரமான சம்பவம், நீலகிரி மாவட்டத்தில் நடந்ததால், ராணுவ வீரர்கள், வியாபாரிகள் உட்பட அனைத்து தரப்பு மக்கள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.பிபின் ராவத்தின் இறுதிச் சடங்கு நேற்று டில்லியில் நடந்தது.
இதை முன்னிட்டு, ஊட்டி, குன்னுார், கோத்தகிரி, குந்தா, கூடலுார், பந்தலுார் என மாவட்டம் முழுதும் வணிக நிறுவனங்கள், சிறு வியாபாரிகள் என, அனைத்து தரப்பினரும் முழு கடை அடைப்பு நடத்தி அஞ்சலி செலுத்தினர்.
![]()
|
பல இடங்களில், ஆட்டோக்கள், சுற்றுலா வாகனங்கள் இயக்கப்படவில்லை. ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட முக்கிய சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement