சென்னை : 'குறவர் சமூகத்தை வன்கொடுமை செய்து விட்டார்' என, நடிகர் சூர்யா மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்தவர் முருகேசன். குறவன் மக்கள் நல சங்கத்தின் தலைவரான இவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று அளித்த புகார்:நடிகர் சூர்யா தயாரித்து நடித்த, 'ஜெய்பீம்' என்ற படத்தில், குறவர் சமூகத்தை பற்றி இழிவுப்படுத்தி காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதனால், எங்கள் சமூகத்தை சேர்ந்தவர்கள் மன உளைச்சலில் உள்ளனர்.கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள குறவர் சமூக மக்களை, 'ஜெய்பீம்' படத்தில் இடம் பெற்றுள்ள காட்சி மிகவும் வேதனையடைய செய்துள்ளது.

அந்தக் காட்சிகளை நீக்க வேண்டும். எங்கள் சமூகத்தின் மீது வன்கொடுமை செய்துள்ள நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் ஞானவேல் மீது, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE