ஆவின்பால் முகவர்களுக்கு ஆளுங்கட்சியினர் தொல்லை... 'நஷ்டம்' எனக்கூறி டெப்போக்களை கைப்பற்ற திட்டம்

Added : டிச 11, 2021 | கருத்துகள் (3)
Advertisement
மதுரை : மதுரையில் ஆளும் கட்சி நிர்வாகிகள் கை காட்டும் நபர்களுக்கே ஆவின் டெப்போக்கள் மாற்றும் நடவடிக்கைகள் துவங்கியுள்ளதாக முகவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்..ஆவின் பால் பாக்கெட்டுகள், தயிர் விற்பனை செய்ய நகரில் 1020க்கும் மேற்பட்ட சிறிய வகை டெப்போக்கள் உள்ளன. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு 1.80 லட்சம் லிட்., பால் பாக்கெட்டுகள் விற்கப்படுகின்றன. இதை நடத்தும் 80 சதவீதம்
 ஆவின்பால் முகவர்களுக்கு ஆளுங்கட்சியினர் தொல்லை...   'நஷ்டம்' எனக்கூறி டெப்போக்களை கைப்பற்ற திட்டம்

மதுரை : மதுரையில் ஆளும் கட்சி நிர்வாகிகள் கை காட்டும் நபர்களுக்கே ஆவின் டெப்போக்கள் மாற்றும் நடவடிக்கைகள் துவங்கியுள்ளதாக முகவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்..


ஆவின் பால் பாக்கெட்டுகள், தயிர் விற்பனை செய்ய நகரில் 1020க்கும் மேற்பட்ட சிறிய வகை டெப்போக்கள் உள்ளன. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு 1.80 லட்சம் லிட்., பால் பாக்கெட்டுகள் விற்கப்படுகின்றன.

இதை நடத்தும் 80 சதவீதம் முகவர்கள் பல ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்கள். லாபமான முறையில் இயங்கி வரும் 50க்கும் மேற்பட்ட டெப்போக்களை ஆளுங்கட்சியினருக்கு மாற்ற விண்ணப்பங்கள் அளித்துள்ளது சர்ச்சை எழுந்துள்ளது.

முகவர்கள் கூறியதாவது:அதிக எண்ணிக்கையில் பால் பாக்கெட்டுகள் விற்பனை செய்யும் டெப்போக்களை குறிவைத்து ஆளும் கட்சி நிர்வாகிகள் சிலருக்கு மாற்றி விடும் வேலையில் இறங்கியுள்ளனர்.

இதற்கு அதிகாரிகள் சிலரும் துணைபோகின்றனர். அவர்கள் வேண்டுமென்றே 'குறிப்பிட்ட டெப்போக்களில் சரியாக விற்பனை இல்லை. நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதை வேறு ஒருவருக்கு மாற்றினால் விற்பனையை அதிகரிக்கலாம்' என பொய்யாக சிபாரிசு செய்யும் பணியை துவங்கியுள்ளனர்.

டெப்போக்கள் மாற்றம் குறித்து பொது மேலாளர் சாந்தி முழுமையான விசாரணை நடத்திய பின் முடிவு எடுக்க வேண்டும் என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jit Onet - New York,யூ.எஸ்.ஏ
11-டிச-202122:01:00 IST Report Abuse
Jit Onet திருட்டு கழகம், அதிக திருட்டு கழகம் இரண்டும் நமது நாட்டிற்கு வந்த சனியன்கள். ராமசாமி நாயக்கன், மூக்குப்பொடி அண்ணாதுரை, புனை சுருட்டி கருணாநிதி, ஏமாற்று வள்ளல் எம்ஜிஈயார், மதம் பிடித்த ஜெயலலிதா, அடிமை பிச்சை எடப்பாடி, மற்றும் தற்போது அடக்கத்தோடும் அறிவோடும் அராஜகம் நடத்தும் சுடாலின் ....
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
11-டிச-202119:54:20 IST Report Abuse
Bhaskaran இதுதான் விடியல்
Rate this:
Cancel
sridhar - Dar Es Salaam ,தான்சானியா
11-டிச-202112:06:06 IST Report Abuse
sridhar ஹாஹா இது காலம் காலமா நடக்குறது தானே ஒன்னும் புதுசு இல்லே எல்லா கட்சி செய்யும் வேலைதான் இது சும்மா ஆளும் கட்சி மட்டும் குறை சொல்ல கூடாது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X