பா.ஜ.,வுக்கு ரூ.100 கோடி தேர்தல் நிதி வழங்கிய லாட்டரி அதிபர் மார்ட்டின்

Updated : டிச 11, 2021 | Added : டிச 11, 2021 | கருத்துகள் (47)
Advertisement
சென்னை: பா.ஜ.,வுக்கு தேர்தல் நிதியாக, 100 கோடி ரூபாயை, கோவையைச் சேர்ந்த லாட்டரி அதிபர் மார்ட்டின் வழங்கி உள்ளார்.தேசிய மற்றும் மாநில கட்சிகளுக்கு, பெரு நிறுவனங்களிடம் இருந்து தேர்தல் நிதி பெற்று வழங்க, டில்லியைச் சேர்ந்த, 'புரூடெண்ட் எலக்ட்டோரல்' அறக்கட்டளைக்கு, மத்திய நேரடி வரிகள் வாரியம் அங்கீகாரம் அளித்துள்ளது. இந்த அறக்கட்டளை, இதுதொடர்பாக இந்திய தலைமை தேர்தல்
Martin, donation, BJP, Bharatiya Janata Party

சென்னை: பா.ஜ.,வுக்கு தேர்தல் நிதியாக, 100 கோடி ரூபாயை, கோவையைச் சேர்ந்த லாட்டரி அதிபர் மார்ட்டின் வழங்கி உள்ளார்.

தேசிய மற்றும் மாநில கட்சிகளுக்கு, பெரு நிறுவனங்களிடம் இருந்து தேர்தல் நிதி பெற்று வழங்க, டில்லியைச் சேர்ந்த, 'புரூடெண்ட் எலக்ட்டோரல்' அறக்கட்டளைக்கு, மத்திய நேரடி வரிகள் வாரியம் அங்கீகாரம் அளித்துள்ளது. இந்த அறக்கட்டளை, இதுதொடர்பாக இந்திய தலைமை தேர்தல் கமிஷனிடம், அக்டோபர் 20ம் தேதி கடிதம் சமர்ப்பித்தது.


latest tamil news


அதன் விபரம்: கடந்த 2020- - 21ம் நிதியாண்டில், தேர்தல் நிதியாக, 245.72 கோடி ரூபாய் பெறப்பட்டுள்ளது. அதில், 209 கோடி ரூபாய், பா.ஜ.,வுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதி, 19 பெரு நிறுவனங்களிடம் இருந்து பெறப்பட்டுள்ளது. இவற்றில் அதிகபட்ச தேர்தல் நிதியாக, 100 கோடி ரூபாயை, கோவையைச் சேர்ந்த லாட்டரி அதிபர் மார்ட்டின், அவருக்குச் சொந்தமான, 'பியூச்சர் கேமிங் மற்றும் ஓட்டல் சர்வீசஸ்' நிறுவனம் வாயிலாக வழங்கி உள்ளார்.

மேலும், காங்கிரஸ் கட்சிக்கு 2 கோடி ரூபாயும், பல்வேறு மாநில கட்சிகளுக்கு 34 கோடி ரூபாயும், மார்ட்டின் நிறுவனத்தால் வழங்கப்பட்டு உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.காங்., கோரிக்கை


இதற்கிடையில், 'சர்ச்சைக்குரிய லாட்டரி அதிபர் மார்ட்டின், பா.ஜ.,வுக்கு தேர்தல் நிதி வழங்கிய பின்னணி குறித்து விசாரணை நடத்த வேண்டும்' என்று தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (47)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மிளிர்வன் - AKL,நியூ சிலாந்து
12-டிச-202112:41:14 IST Report Abuse
மிளிர்வன் கான் கிராஸ் காரர்கள் கதறுவதை கேட்க ஆனந்தமாயிருக்கிறது..நிற்க. பிஜேபி தலைமைக்கு அரசியலும் தெரியும்.. அதன் சூட்சுமஙகளும் அத்துப்படி.. ஹி..ஹி..
Rate this:
Cancel
Sundararaman Iyer - Bangalore,யூ.எஸ்.ஏ
11-டிச-202122:46:55 IST Report Abuse
Sundararaman Iyer Viswapriya Financials Adyar Chennai was also a major donor to BJP. That is why EOW is not taking any action on R. Subramanian, MD of Viswapriya since 2014 though the case has been pending for so long.............
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
11-டிச-202120:04:00 IST Report Abuse
Bhaskaran உங்க கட்சி ஹாரூன் லாட்டரி கம்பெனி நடத்தலியா அழகிரியாரே எல்லாம் மறந்துபோச்சா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X