அமெரிக்க 'ஆர்டர்' குறைவதால் பின்னலாடை துறையினர் அதிர்ச்சி

Updated : டிச 11, 2021 | Added : டிச 11, 2021 | கருத்துகள் (5) | |
Advertisement
திருப்பூர்: அடுத்த மூன்று மாதங்களுக்கு, அமெரிக்காவிலிருந்து ஆடை தயாரிப்புக்கு புதிய ஆர்டர் வருகை குறையும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால், பின்னலாடை துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி துறைக்கு, அமெரிக்கா பாரம்பரிய சந்தையாக உள்ளது. அந்நாட்டு வர்த்தகர்களிடமிருந்து, திருப்பூர் நிறுவனங்களுக்கு, ஆடை தயாரிப்புக்கான ஆர்டர்கள்

திருப்பூர்: அடுத்த மூன்று மாதங்களுக்கு, அமெரிக்காவிலிருந்து ஆடை தயாரிப்புக்கு புதிய ஆர்டர் வருகை குறையும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால், பின்னலாடை துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.



latest tamil news




திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி துறைக்கு, அமெரிக்கா பாரம்பரிய சந்தையாக உள்ளது. அந்நாட்டு வர்த்தகர்களிடமிருந்து, திருப்பூர் நிறுவனங்களுக்கு, ஆடை தயாரிப்புக்கான ஆர்டர்கள் அதிகளவில் கிடைத்துவருகிறது. கொரோனா 2வது அலைக்குப்பின், அமெரிக்காவின் 'ரிவெஞ்ச் சேல்' துவங்கியது. அந்நாட்டு மக்கள், வழக்கத்துக்குமாறாக அதிக எண்ணிக்கையில் ஆடைகள் வாங்கினர். இதையடுத்து, அமெரிக்க வர்த்தகர்களும், ஆடை கொள்முதலை அதிகரித்தனர். இந்நிலையில் அடுத்த மூன்று மாதங்களுக்கு அமெரிக்காவிலிருந்து ஆடை தயாரிப்புக்கான புதிய ஆர்டர் வருகை குறையும் என, கணிக்கப்பட்டுள்ளது.


மந்த நிலை ஏன்?

திருப்பூர் பின்னலாடை துறை ஆலோசகர் சபரிகிரீஷ் கூறியதாவது:
கொரோனா இரண்டாவது அலைக்குப்பின், அமெரிக்காவில் 'ரிவெஞ்ச் சேல்' நடந்தது. ஊரடங்கால் ஆடை வாங்க முடியாத மக்கள், அதிக எண்ணிக்கையில் ஆடைகளை வாங்கினர். இதனால், அந்நாட்டு வர்த்தகர்கள், இந்தியா உட்பட பல்வேறு நாட்டு உற்பத்தியாளர்களுக்கு அதிகளவு ஆர்டர் வழங்கி, அபரிமிதமான எண்ணிக்கையில் ஆடை தயாரித்து பெற்றுள்ளனர். ஆனால் தற்போது, அமெரிக்காவில் ஆடை வர்த்தகம் வெகுவாக குறைந்துள்ளது.


latest tamil news




இறக்குமதி செய்த ஆடைகளை, வர்த்தகர்கள், தங்கள் குடோன்களில் இருப்புவைத்து வருகின்றனர்; அந்நாட்டு துறைமுகங்களிலும், தேக்கடைந்துள்ளது. கிறிஸ்மஸ் பண்டிகைக்குப்பின் அமெரிக்காவில் ஆடை வர்த்தகம் குறைவது வழக்கம். வரும் மார்ச் வரை மந்த நிலை தொடரும் என கணிக்கப்பட்டுள்ளது. ஏப்., மாதத்துக்கு பின்னரே, மீண்டும் ஆர்டர் வருகை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால், அமெரிக்க சந்தையை மட்டுமே சார்ந்து ஆடை தயாரிக்கும் ஏற்றுமதி நிறுவனங்கள் சற்று சிரமப்படவேண்டிவரும்.
ஜப்பான், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளின் புதிய சந்தை வாய்ப்புகளை வசப்படுத்த திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் முயற்சிக்க வேண்டும். இதன்மூலம், ஆண்டுமுழுவதும் தடையின்றி, ஆர்டர்களை பெற்று, ஆடை தயாரிப்பை தொடர முடியும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
spr - chennai,இந்தியா
11-டிச-202119:58:15 IST Report Abuse
spr "கிறிஸ்மஸ் பண்டிகைக்குப்பின் அமெரிக்காவில் ஆடை வர்த்தகம் குறைவது வழக்கம். வரும் மார்ச் வரை மந்த நிலை தொடரும் என கணிக்கப்பட்டுள்ளது. ஏப்., மாதத்துக்கு பின்னரே, மீண்டும் ஆர்டர் வருகை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் அமெரிக்க சந்தையை மட்டுமே சார்ந்து ஆடை தயாரிக்கும் ஏற்றுமதி நிறுவனங்கள் சற்று சிரமப்பட வேண்டிவரும்." இது இயல்பான ஒன்றாக இதனை எதிர்பார்க்காதவர்கள் வியாபாரம் செய்ய லாயக்கற்றவர்கள் ஆனால் இந்திய பொருட்களின் தரம் சீன கம்போடியா நாட்டு பொருட்கள் தரத்தைவிட குறைவாக இருப்பதுவே பிரச்சினை விலையில் அதிக வேறுபாடில்லை ஒரு இந்தியனாக இந்திய பொருட்களை ஆதரிப்போம் என்று அதனை வாங்கினாலும் ஒரு முறை துவைத்தால் சாயம் போகிறது துணி சுருங்குகிறது இந்தப் பிரச்சினை சீன கம்போடியா பொருட்களுக்கு குறைவே இந்த காலங்களில் இதர நாட்டுப் பொருட்கள் குறிப்பாக துணி வகைகள் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது ஆனால் இந்திய உற்பத்திப் பொருட்களின் விலை குறைவதில்லை உற்பத்தியாளர்கள் சிந்திக்க வேண்டும்
Rate this:
Cancel
Sanny - sydney,ஆஸ்திரேலியா
11-டிச-202116:51:50 IST Report Abuse
Sanny ஆஸ்திரேலியாவை பொறுத்த அளவில், சீனா, பங்களாதேஷ், தாய்லாந்து, தாய்வான் மார்க்கெட்டினால் கடும் போட்டியில் இருக்கு, அதை முறியடிக்கணும்.
Rate this:
Cancel
Neutral Umpire - Chennai ,இந்தியா
11-டிச-202115:52:55 IST Report Abuse
Neutral Umpire துணிகளுக்கு எக்ஸ்பயரி தேதி குறிப்பிடலாம் ...
Rate this:
Sanny - sydney,ஆஸ்திரேலியா
11-டிச-202116:56:21 IST Report Abuse
Sanny எக்ஸ்பயரி எதுக்கு சாப்பிடவாபோகிறோம், துணிகள் அவர், அவர் இஷ்டத்துக்கு எத்தனைகாலமானாலும் போட்டுடுவாங்க, ஆனால் டிசைன் மாடல் என்று இருக்கு காலத்துக்கு காலம் மாறும்போது சிலர் அதை வாங்காமல் புறக்கணிப்பார்கள்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X