உங்களின் கோரிக்கையால், முஸ்லிம்கள் ஓட்டு, வி.சி.,க்கு வந்து குவிந்து விடாது. அவர்களிலே பல கட்சிகள் இருக்கின்றன.

Updated : டிச 11, 2021 | Added : டிச 11, 2021 | கருத்துகள் (15) | |
Advertisement
விடுதலை சிறுத்தை கட்சித் தலைவர் திருமாவளவன் அறிக்கை: 'ஹஜ் பயணத்துக்கு ஆகும் செலவுக்கு, ஜி.எஸ்.டி., மற்றும் வருமான வரியிலிருந்து விலக்களிக்க வேண்டும். ஹஜ் பயணியர் மீண்டும் சென்னை விமானத்திலிருந்து செல்ல அனுமதிக்க வேண்டும்' என, மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்தேன்.உங்களின் கோரிக்கையால், முஸ்லிம்கள் ஓட்டு, வி.சி.,க்கு வந்து குவிந்து
விடுதலை சிறுத்தை கட்சித் தலைவர் திருமாவளவன்,  விசி, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர், பன்னீர்செல்வம், தி.மு.க.,  அதிமுக, திமுக, அ.தி.மு.க., கூட்டணி கட்சி, தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி,
பா.ஜ.,  ராஜ்யசபா எம்.பி., சுப்ரமணியசாமி, ஹெலிகாப்டர் விபத்து, முப்படை தலைமை தளபதி, பிபின் ராவத், சுப்ரீம் கோர்ட் நீதிபதி,  தமிழக பா.ஜ., பொதுச் செயலர், ராம ஸ்ரீனிவாசன்,  சாத்தான்குளம், காவல் நிலையம், எதிர்க்கட்சி, ஆளுங்கட்சி

விடுதலை சிறுத்தை கட்சித் தலைவர் திருமாவளவன் அறிக்கை: 'ஹஜ் பயணத்துக்கு ஆகும் செலவுக்கு, ஜி.எஸ்.டி., மற்றும் வருமான வரியிலிருந்து விலக்களிக்க வேண்டும். ஹஜ் பயணியர் மீண்டும் சென்னை விமானத்திலிருந்து செல்ல அனுமதிக்க வேண்டும்' என, மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்தேன்.


உங்களின் கோரிக்கையால், முஸ்லிம்கள் ஓட்டு, வி.சி.,க்கு வந்து குவிந்து விடாது. அவர்களிலே பல கட்சிகள் இருக்கின்றன; ஓட்டு சிதறி விட்டது. அதுபோல, முன் போல ஓட்டு வங்கிகளாக மாற்றும் எண்ணமெல்லாம் இப்போது பலிக்காது!


அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் அறிக்கை: மூன்று கோடிக்கும் அதிகமான மின் நுகர்வோரின் தரவுகள், ஊர் பெயர் தெரியாத, தி.மு.க.,வை சேர்ந்த ஒப்பந்ததாரரிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன. இது, பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.


இவ்வளவு பெரிய முறைகேடு நடந்துள்ளது. இதுவே, அ.தி.மு.க., ஆட்சியில் என்றால், தி.மு.க., வெகுண்டெழுந்திருக்கும். அ.தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சியினர் சத்தமே காட்டாமல் இருக்கின்றனரே!


தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி பேட்டி: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்கும். இடங்கள் பங்கீடு குறித்து தேர்தல் தேதி அறிவித்த பின் பேச்சு நடத்தப்படும்.


latest tamil news




இதை பெருமையாக அறிவிக்க வேண்டியது, தி.மு.க., தான். ஆனால், அக்கட்சி அமைதியாக இருக்கிறது. நீங்களாக சொல்லிக் கொள்ள வேண்டியது தான். அந்த அளவுக்குத் தான் உங்கள் கட்சிக்கு இருக்குது மரியாதை!


பா.ஜ., மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான சுப்ரமணியசாமி அறிக்கை: தமிழகத்தில் மர்மமான முறையில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மரணம் குறித்து, உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்பட வேண்டும்.


உண்மை தான். எனினும், ராணுவத்தினர் விசாரணை நடத்தினாலே போதுமே. சுப்ரீம் கோர்ட் நீதிபதி எதற்கு?


தமிழக பா.ஜ., பொதுச் செயலர் ராம ஸ்ரீனிவாசன் அறிக்கை: சாத்தான்குளம் காவல் நிலையம் மரணத்திற்கு சத்தம் போட்ட எதிர்க்கட்சிகளும், சில ஊடகங்களும் முதுகுளத்துாரில் மணிகண்டனின் சந்தேகத்திற்கு இடமான மரணத்திற்கு மவுனம் காப்பது ஏன்? தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்களேன்!


சாத்தான்குளம் படுகொலை நடந்த போது, அ.தி.மு.க., ஆட்சியில் இருந்தது; தி.மு.க., எதிர்க்கட்சியாக இருந்தது; அதனால் சத்தம் எழுந்தது. இப்போது ஆட்சி மாறி விட்டது; அ.தி.மு.க.,வோ 'தில்' இல்லாமல் அமைதி காக்கிறது.



Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
11-டிச-202119:59:20 IST Report Abuse
Bhaskaran இந்தியாவில் மானம்வெட்கம் சூடு சொரணையற்ற கட்சி தமிழ்நாடு காங்கிரஸ் மட்டுமே பதவிக்காக எந்த இழிவான காரியங்களும் செய்வார்
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
11-டிச-202119:58:06 IST Report Abuse
Bhaskaran விலைபோன ஊடகங்கள் இருக்கும்போது ( தமிழில் தினமலர் துக்ளக் தவிர ) அப்படிதான் நாடாகும்
Rate this:
Cancel
M.S.Jayagopal - Salem,இந்தியா
11-டிச-202118:14:56 IST Report Abuse
M.S.Jayagopal சமுதாயத்தில் நடமாட பதவி வேண்டும்.அந்த பதவிக்கு மரியாதையே இல்லை என்றாலும் பரவாயில்லை என்ற நிலையில்தான் காங்கிரஸ் தலைவர் அழகிரி உள்ளார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X