வாடகை தராவிட்டால் வவ்வாலாக பிறப்பீர்கள்: மதுரை ஆதினம் 'அட்வைஸ்'

Updated : டிச 11, 2021 | Added : டிச 11, 2021 | கருத்துகள் (52) | |
Advertisement
மானாமதுரை: ''கோயிலுக்கு உண்டான கடனை செலுத்தாதவர்கள், வாடகை கொடுக்காதவர்கள் உடனடியாக கொடுத்துவிடுங்கள் அப்படி இல்லை என்றால் அடுத்த ஜென்மத்தில் வவ்வாலாகவோ , பெருச்சாளியாகவோ பிறக்க நேரிடும்'' என மதுரை ஆதினம் ஞானசம்பந்த பராமாச்சாரிய சுவாமிகள் கூறினார்.கோயில்களுக்குச் சென்று வழிபாடு . செய்தால் உடலுக்கு புத்துணர்ச்சி ஏற்படும் என்று மதுரை ஆதீனம் தஞ்சாக்கூரில்
கோயில், கடன், வவ்வால், மதுரை ஆதினம், அட்வைஸ்

மானாமதுரை: ''கோயிலுக்கு உண்டான கடனை செலுத்தாதவர்கள், வாடகை கொடுக்காதவர்கள் உடனடியாக கொடுத்துவிடுங்கள் அப்படி இல்லை என்றால் அடுத்த ஜென்மத்தில் வவ்வாலாகவோ , பெருச்சாளியாகவோ பிறக்க நேரிடும்'' என மதுரை ஆதினம் ஞானசம்பந்த பராமாச்சாரிய சுவாமிகள் கூறினார்.


கோயில்களுக்குச் சென்று வழிபாடு . செய்தால் உடலுக்கு புத்துணர்ச்சி ஏற்படும் என்று மதுரை ஆதீனம் தஞ்சாக்கூரில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் பேசினார் .சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள தஞ்சாக்கூரில் ஜெகதீஸ்வரர் சமேத திரிபுரசுந்தரி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவில் கலந்துகொண்டு மதுரை ஆதீனம் பேசியதாவது: தமிழகத்தில் நமது முன்னோர்கள் தினந்தோறும் கோயில்களுக்குச் சென்று தங்களது உடலை புத்துணர்ச்சியாக வைத்திருந்தனர். அதேபோல் தற்போது நாமும் தினந்தோறும் கோயில்களுக்குச் சென்று உடலை புத்துணர்ச்சியாக வைத்திருக்க முயற்சிக்க வேண்டும் . ஆனால் தற்போது பலர் தினந்தோறும் அலைபேசிக்கு தான் சார்ஜ் ஏற்றுகின்றனர். உடலுக்கு சார்ஜ் ஏற்ற கோயில்களுக்கு செல்வதில்லை . தற்போது டி.வி. , அலைபேசி மற்றும் மின்சார பொருள்களுக்கு கியாரண்டி உண்டு . அதேபோல் ஒரு வேட்டி சேலை வாங்கினால் கூடுதலாக இலவசமாக நான்கு வேட்டி சேலைகள் கூட கொடுக்கின்றனர் .


கும்பாபிஷேக விழாவில் மதுரை ஆதீனம் பேச்சு


latest tamil news


ஆனால் இந்த மனித உடலுக்கு நிரந்தரம் என்று எதுவும் உள்ளதா . ஆகவே மனிதர்கள் இருக்கின்ற காலத்தில் நல்ல செயல்களை செய்ய வேண்டும். மனிதர்கள் தற்போது தங்களது உடலை அழகுபடுத்த அழகு நிலையங்களில் அதிக நேரம் ஒதுக்குகின்றனர்.ஆனால் இறை வழிபாட்டுக்கு என்று நேரம் ஒதுக்குவது கிடையாது .தமிழகத்தில் பண்பாடு , கலாச்சாரம் போன்றவை கிராமங்களில்தான் உள்ளது . கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள் கடைகளை குத்தகைக்கு எடுத்து வாடகை கொடுக்காதவர்கள் அல்லது கோயிலுக்கு உண்டான கடனை செலுத்தாதவர்கள் உடனடியாக கொடுத்துவிடுங்கள் அப்படி இல்லை என்றால் அடுத்த ஜென்மத்தில் வவ்வாலாகவோ , பெருச்சாளியாகவோ , மூஞ்சூறுவாகவோ பிறக்க நேரிடும். அதைப்போல சிவன் சொத்து குலநாசம் என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும். இவ்வாறு அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (52)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Priyan Vadanad - Madurai,இந்தியா
12-டிச-202101:24:15 IST Report Abuse
Priyan Vadanad அருமையான கருத்துக்கள். வவ்வாலாக பிறப்போமோ அல்லது பெருசாளியாக பிறப்போமோ அது முக்கியமல்ல. ஆனால் ஆதீனம் சொல்லும் ஆன்மிகம் எளிமையாய் உள்ளது. கோவில் பராமரிப்பில் எளிமையான ஆர்வத்தை நான் இவரிடம் பார்க்கிறேன்.
Rate this:
Cancel
srinivasan - stockholm,சுவீடன்
11-டிச-202119:27:39 IST Report Abuse
srinivasan Deep fry them in vadaichatti.
Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
11-டிச-202120:17:10 IST Report Abuse
Visu Iyerதர்ம காரியத்திற்கு கொடுத்த நிலத்தை வாடகைக்கு கொடுத்த்து வியாபாரமாக்கினால் ........... என்ன செய்ய...
Rate this:
Cancel
சாண்டில்யன் - Paris,பிரான்ஸ்
11-டிச-202119:23:24 IST Report Abuse
சாண்டில்யன் தவறுகள் செய்வோர் நாம் எவ்வாறு கடவுளால் தண்டிக்கப் படுகிறோம் என்பதை புரிந்து கொள்வதில்லை அதனாலேயே தொடர்ந்து குற்றம் / பாவம் செய்கிறார்கள் குடும்பத்தாரோடு தற்கொலை அல்லது சாலை விபத்தில் சாகிறார்கள்
Rate this:
sankar - Nellai,இந்தியா
11-டிச-202121:34:44 IST Report Abuse
sankarநீர் மறைமுகமாக சொல்வது புரிகிறது - உமக்கும் அதேதான் - படிப்பது இராமாயணம் என்கிற வகையை சேர்ந்த நீர் எழுதிவைத்து கொள்ளும் - நான் சொல்வது நடக்கிறதா இல்லையா என்று...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X