புதுடில்லி: ஏறக்குறைய ஒரு ஆண்டுக்கும் மேலாக டில்லி எல்லையில் போராட்டம் நடத்திய விவசாயிகள் போராட்டம் முடிந்து தங்களின் டென்டுகளை காலி செய்து அவரவர் இல்லங்களுக்கு திரும்பி வருகின்றனர். விவசாயிகள் பேரணியாக டில்லியில் இருந்து புறப்பட்டனர்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி பல்வேறு விவசாய அமைப்பினர் வட மாநிலங்களில் போராட்டம் நடத்தினர். உச்சக்கட்டமாக ஜனாதிபதி மாளிகை, பார்லி., என முற்றுகையிட்ட போது பெரும் வன்முறை வெடித்தது. பின்னர் அமைதி போராட்டம் தொடர்ந்தது.

இந்நிலையில் 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். இதனை விவசாயிகள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். இந்நிலையில் ஒரு வருடம் 80 நாட்களாக நடந்த போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து டில்லி - அரியானா , சிங்கு எல்லை, காசியாபாத் எல்லையில் ஆங்காங்கே போட்டிருந்த டென்ட் களை விவசாயிகள் கலைத்தனர். அத்துடன் பேரணியாக டில்லியில் இருந்து பஞ்சாப், உபி., விவசாயிகள் புறப்பட்டனர்.