பிபின் ராவத் அஸ்தி கங்கை நதியில் கரைப்பு

Updated : டிச 11, 2021 | Added : டிச 11, 2021 | கருத்துகள் (3)
Advertisement
டேராடூன்: குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் , அவரது மனைவி மதுலிகா ராவத் உடல் கங்கை நதியில் கரைக்கப்பட்டது.கடந்த 8 ம் தேதி குன்னூர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், மனைவி மதுலிகா ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர். டில்லி கொண்டு செல்லப்பட்ட அவர்களது உடலுக்கு பிரதமர் மோடி, பாதுகாப்பு
CDSGeneralBipinRawat, TamilNaduChopperCrash, ashes, parents, Haridwar, Uttarakhand

டேராடூன்: குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் , அவரது மனைவி மதுலிகா ராவத் உடல் கங்கை நதியில் கரைக்கப்பட்டது.

கடந்த 8 ம் தேதி குன்னூர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், மனைவி மதுலிகா ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர். டில்லி கொண்டு செல்லப்பட்ட அவர்களது உடலுக்கு பிரதமர் மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படை தளபதிகள் மரியாதை செலுத்தினர்.


latest tamil newsதொடர்ந்து, டில்லி காமராஜர் சாலையில் இருந்து 10 கி.மீ., தொலைவில் உள்ள கன்டோன்மென்ட் பகுதியின் பரார் சதுக்க மயானத்தில், முழு ராணுவ மரியாதையுடன் பீரங்கி குண்டுகள் முழங்க பிபின் ராவத் மற்றும் மதுலிகா உடல் தகனம் செய்யப்பட்டது. தங்கள் பெற்றோர் உடல்களுக்கு, மகள்கள் தீ மூட்டினர்.


latest tamil news


இதனை தொடர்ந்து அவர்களின் அஸ்தியை, மகள்கள் தாரணி மற்றும் கிருத்திகா பெற்று கொண்டனர். தொடர்ந்து, உத்தர்கண்ட் மாநிலம் ஹரித்வார் சென்றனர். அங்கு, மதச்சடங்குகளை செய்த இருவரும், பின்னர் அஸ்தியை கங்கை நதியில் கரைத்தனர்.


latest tamil news


Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
11-டிச-202122:13:32 IST Report Abuse
சம்பத் குமார் 1). வணங்குவோம் உங்கள் பாதம் தொட்டு.2). இலட்சம் கோடிகளில் பிபின் ராவத் உயிருடன் எழுந்து நம்ம தேசத்தை காப்பாற்றுவார். நன்றி வணக்கம் ஐயா. jai jawan jai bharat jai hind
Rate this:
Cancel
Nagarajan D - Coimbatore,இந்தியா
11-டிச-202117:16:41 IST Report Abuse
Nagarajan D அவர்கள் அஸ்தி கங்கையில் கரைக்கப்படவில்லை கங்கை கலக்கப்பட்டது... எத்தனை எத்தனை விவசாய நிலங்கள் கங்கையால் செழுமை பெறுகிறது அங்கெல்லாம் பல பல பிபின் ராவத் உருவாகி நாட்டை காக்க அவரை போலவே அதி தீவிர தேச பக்தியோடு வருவார்கள்....மீண்டும் நீங்கள் வரவேண்டும் பிபின் ராவத் அவர்களே இன்னும் பலம் கொண்டு வாருங்கள் நாட்டிற்கு உங்கள் தேச பக்தி மற்றும் வீரம் தேவை
Rate this:
Cancel
Apposthalan samlin - sulaymaniyah,ஈராக்
11-டிச-202116:32:15 IST Report Abuse
Apposthalan samlin அம்மா அப்பா இல்லாத உலகம் இந்த பிள்ளைகளுக்கு எவ்வளுவு வலிய கொடுக்கும் கடவுள் தான் ஆறுதலை கொடுக்க வேண்டும் . Rip
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X