அமெரிக்க அதிபர் மாளிகை இயக்குனராக இந்தியர் நியமனம்

Added : டிச 11, 2021 | கருத்துகள் (7)
Advertisement
வாஷிங்டன்:அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை அலுவலக இயக்குனராக, இந்தியாவில் பிறந்த கவுதம் ராகவன் நியமிக்கப்பட்டுள்ளார்.இந்தியாவில் பிறந்து, அமெரிக்காவில் படித்து பட்டம் பெற்றவர் கவுதம் ராகவன். அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அரசியல் ஆலோசகராகவும்,அதிபரின் அலுவலக உதவி இயக்குனராகவும் பணியாற்றி வந்தார். அதிபர் அலுவலக இயக்குனராக இருந்த கேத்தி ருசல்லை, 'யூனிசெப்' அமைப்பின்
 அமெரிக்க அதிபர் மாளிகை இயக்குனராக இந்தியர் நியமனம்

வாஷிங்டன்:அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை அலுவலக இயக்குனராக, இந்தியாவில் பிறந்த கவுதம் ராகவன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவில் பிறந்து, அமெரிக்காவில் படித்து பட்டம் பெற்றவர் கவுதம் ராகவன். அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அரசியல் ஆலோசகராகவும்,அதிபரின் அலுவலக உதவி இயக்குனராகவும் பணியாற்றி வந்தார். அதிபர் அலுவலக இயக்குனராக இருந்த கேத்தி ருசல்லை, 'யூனிசெப்' அமைப்பின் செயல் இயக்குனராக நியமிக்க ஐ.நா., பொதுச் செயலர் அன்டோனியோ குட்டரஸ் விருப்பம் தெரிவித்திருந்தார்.
அதை ஜோ பைடன் ஏற்றுக் கொண்டார். இதைஅடுத்து அதிபர் அலுவலக இயக்குனராக, கவுதம் ராகவன் நியமிக்கப்பட்டுள்ளார்.அதிபர் அலுவலகத்தில் பணியாற்றுவதற்கு தகுதியுள்ளோரை தேர்ந்தெடுக்கும் பொறுப்பு இவருக்கு கிடைத்துள்ளது.ஓரினச் சேர்க்கையாளரான இவர், முன்னாள் அதிபர் பராக் ஒபாமா நிர்வாகத்திலும், முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
12-டிச-202117:12:17 IST Report Abuse
Gopalakrishnan S இப்படிப்பட்டவர்களை, வந்தேறி என்று விரட்டியது நம் தேசம். வாழவைத்த தேசத்திற்கு நாணயமாக உழைக்கிறார்கள். இதில் ஆச்சரியம் ஏதுமில்லை.
Rate this:
Cancel
vasan - doha,கத்தார்
12-டிச-202113:07:35 IST Report Abuse
vasan உன்னை வளர்த்த நாட்டிற்கு என்ன செய்தாய்...இங்கு கஷ்டப்படும் அடித்தட்டு மக்களுக்கு ஏதாவது செய்யமுடிந்ததா...வெறும் அரசியல் வியாதிகளை குறை சொல்ல வேண்டாம் அது எல்லோருக்குமே தெரியும் .........
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
13-டிச-202103:27:17 IST Report Abuse
meenakshisundaramஒதுக்கீடு கொள்கையால் திறமையுள்ள ஆட்களை இங்கேந்து விரட்டி விட்டு 'நீ என்ன செஞ்சேன்னு கேட்க வெட்கப்பட வேண்டிய சமூகம் .ஓடினவங்களை தவிர மற்ற ஆட்களால் அப்போ ஒண்ணுமே செய்ய முடியாதுன்னு நிரூபிக்கிறார்....
Rate this:
Cancel
vasan - doha,கத்தார்
12-டிச-202113:05:52 IST Report Abuse
vasan இவனால் என்ன நன்மை தாய் நாட்டிற்கு எந்த நல்லது இல்லை....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X