எக்ஸ்குளுசிவ் செய்தி

நிலக்கரி மாயமான விவகாரம்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

Updated : டிச 12, 2021 | Added : டிச 11, 2021 | கருத்துகள் (3) | |
Advertisement
சென்னை:அனல் மின் நிலையங்களில் 3.09 லட்சம் டன் நிலக்கரி மாயமானது தொடர்பான விசாரணை முடிந்த நிலையில், தவறு செய்தவர்கள் மீது எப்போது நடவடிக்கை பாயும் என்ற எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது.தமிழக மின் வாரிய அனல் மின் நிலையங்களில், தினமும் மின் உற்பத்திக்கு தேவைப்படும் 72 ஆயிரம் டன் நிலக்கரியில், 60 ஆயிரம் டன், மத்திய தொகுப்பில் இருந்து பெறப்படுகிறது. மீதி தனியாரிடம் இருந்து
நிலக்கரி ,மாயம்  ,நடவடிக்கை,கோரிக்கை

சென்னை:அனல் மின் நிலையங்களில் 3.09 லட்சம் டன் நிலக்கரி மாயமானது தொடர்பான விசாரணை முடிந்த நிலையில், தவறு செய்தவர்கள் மீது எப்போது நடவடிக்கை பாயும் என்ற எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது.
தமிழக மின் வாரிய அனல் மின் நிலையங்களில், தினமும் மின் உற்பத்திக்கு தேவைப்படும் 72 ஆயிரம் டன் நிலக்கரியில், 60 ஆயிரம் டன், மத்திய தொகுப்பில் இருந்து பெறப்படுகிறது. மீதி தனியாரிடம் இருந்து வாங்கப்படுகிறது.
இரு ஆண்டுகளாக தனியாரிடம் வாங்கப்படவில்லை. ஒடிசா, மேற்கு வங்க மாநிலங்களில் இருந்து கப்பல்களில் துாத்துக்குடி, எண்ணுார் துறைமுகங்களுக்கு நிலக்கரி எடுத்து வரப்படுகிறது. அங்கிருந்து, வட சென்னை, துாத்துக்குடி மின் நிலையங்களுக்கு நிலக்கரி அனுப்பப்படுகிறது.
வடசென்னை மின் நிலையத்தில் பதிவேட்டில் உள்ள இருப்பிற்கும், அங்கு கொட்டி வைக்கப்பட்டிருந்த இருப்பிற்கும் 2.38 லட்சம் டன் நிலக்கரி குறைவாக இருந்தது. அதேபோல, துாத்துக்குடி மின் நிலையத்தில், 71 ஆயிரத்து 857 டன் இருப்பு குறைவாக இருந்தது.ஆக., -- செப்., மாதங்களில், இந்த தகவலை தெரிவித்த மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, நிலக்கரி மாயம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டார்.
அதன்படி, உயரதிகாரிகள் அடங்கிய குழு விசாரணை நடத்தியது.தற்போது, விசாரணை முடிவடைந்துள்ளதாக தெரிகிறது. எனவே, தவறு செய்வதவர்கள் மீது எப்போது நடவடிக்கை பாயும் என்ற எதிர்பார்ப்பு, மின் வாரிய ஊழியர்களிடம் எழுந்துள்ளது.
இதுகுறித்து, மின்ஊழியர்கள் கூறியதாவது:ஏற்கனவே மின்வாரியம் கடும் நிதி நெருக்கடியில் உள்ளது. இரு அனல் மின் நிலையங்களில் மட்டும் 100 கோடி ரூபாய் அளவுக்கு நிலக்கரி மாயமாகி இருப்பது தொடர்பாக விசாரணை நடத்த, தனிக்குழு அமைக்கப்பட்டது.
விசாரணையில் கிடைத்துள்ள தகவல் அடிப்படையில், நிலக்கரி மாயமானதற்கு காரணமானவர்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுப்பதுடன், அவர்களிடம் இருந்து நிலக்கரிக்கான பணத்தை வசூலிக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
amuthan - kanyakumari,இந்தியா
12-டிச-202119:28:11 IST Report Abuse
amuthan ஹாஹா ஹாஹா என்ன சொல்ல. கன்டெய்னர் பணம் மயம், பொள்ளாச்சி சம்பவம் மாயம் நிலக்கரி மாயம் இரண்டு இட்லி மாயம். கொடநாடு மர்மம். கடவுள் தான் காப்பாத்தனும்
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
12-டிச-202109:01:12 IST Report Abuse
RajanRajan இவனுக்கு இனி என்ன புதுசா விருது கொடுக்க போவுறானுங்களோ. அணில் மன்னர் மன்னன் என அழைப்பரோ.
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
12-டிச-202101:16:01 IST Report Abuse
Kasimani Baskaran நிலக்கரியை அணில் திண்றதா அல்லது எறுப்பு தின்றதா என்று கண்டு பிடிக்க வேண்டும். அணில் இராஜாவின் காலடியில் மறைந்து இருப்பதால் அதை அவ்வளவு எளிதில் பிடிக்க முடியாது. வேறு ஒரு பலியாடுதான் கண்டுபிடிக்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X