வாஷிங்டன்:அமெரிக்காவில் புயல் தாக்கிய கென்டுகி மாகாணத்தில் கன மழையால் ஏற்பட்ட விபத்துகளில்சிக்கி 70 பேர் உயிரிழந்து உள்ளனர்.அமெரிக்காவின் பல மாகாணங்களில் புயல் காரணமாக கன மழை பெய்து வருகிறது. இதனால் பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.
இல்லினாய்ஸ் மாகாணத்தில் நேற்று முன்தினம் பலத்த காற்றுடன் பெய்த கன மழையால் அமேசான் நிறுவனத்தின் கிடங்கு இடிந்து விழுந்தது. அந்த கிடங்கில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிக்கி உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அவர்களை மீட்கும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.
இதற்கிடையே இந்த புயல் காரணமாக கென்டுகி மாகாணத்தில் சூறைக் காற்றுடன் மழை பெய்து வருகிறது. பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் தொடர் கன மழையால் ஏற்பட்ட விபத்துகளில் சிக்கி கென்டுகி மாகாணத்தில்70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக மாகாண கவர்னர் ஆண்டி பெஷியர் நேற்று தெரிவித்தார். பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE