என்னதான் நடந்தது: துயர களம் 'சீல்' :விமானப்படை அதிகாரிகள் விசாரணை

Updated : டிச 13, 2021 | Added : டிச 11, 2021 | கருத்துகள் (3) | |
Advertisement
குன்னுார் : குன்னுார் நஞ்சப்பா சத்திரம் 'சீல்' செய்யப்பட்டு ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தில் உயிரிழந்தவர்களின் மொபைல் போன் உட்பட பிற தடயங்களை சேகரிக்கும் பணியும் தீயணைப்பு துறையினரிடம் விசாரணையும் நடந்தது.நீலகிரி மாவட்டம் குன்னுார் நஞ்சப்பா சத்திரம் பகுதியில் கடந்த 8ம் தேதி நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.
துயர களம்,சீல்,விமானப்படை அதிகாரிகள், விசாரணை

குன்னுார் : குன்னுார் நஞ்சப்பா சத்திரம் 'சீல்' செய்யப்பட்டு ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தில் உயிரிழந்தவர்களின் மொபைல் போன் உட்பட பிற தடயங்களை சேகரிக்கும் பணியும் தீயணைப்பு துறையினரிடம் விசாரணையும் நடந்தது.


நீலகிரி மாவட்டம் குன்னுார் நஞ்சப்பா சத்திரம் பகுதியில் கடந்த 8ம் தேதி நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். விமானபடை தளபதி வருண் பெங்களூரு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார்.


நஞ்சப்பா சத்திரம் 'சீல்'ஏர் மார்ஷல் மன்வேந்திரா சிங் தலைமையில் மூன்றாவது நாளாக விசாரணை நடந்து வருகிறது. நஞ்சப்பா சத்திரம் பகுதி நேற்று முழுமையாக விமானபடை ராணுவம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு 'சீல்' வைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள 50 குடும்பங்களை சேர்ந்தவர்களில் பணிக்கு செல்வோர் மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர்.ஹெலிகாப்டர் விழுந்த இடத்தில் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் கமாண்டென்ட் ராஜேஸ்வர் சிங் உட்பட ராணுவ உயர் அதிகாரிகள் நேரடி ஆய்வு செய்தனர்.


தொடர்ந்து ஏர் மார்ஷல் மன்வேந்திரா சிங் நீலகிரி எஸ்.பி. ஆசிஷ் ராவத் அங்கு சென்றனர். எரிந்த நிலையில் உள்ள ஹெலிகாப்டர் பாகங்களை பாதுகாப்புடன் உடைக்க நேற்று 'வெல்டிங்' உபகரணங்கள் கொண்டு செல்லப்பட்டன. விமானத்தில் பயணத்தவர்களின் மொபைல் போன் என பிற தடயங்கள் தேடும் பணியில் ஈடுபட்டனர். வரைபடம் துணையுடன் அதிகாரிகள் வந்த பயணம் குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர்.


தீயணைப்பு துறையிடம் விசாரணைநீலகிரி மாவட்ட தீயணைப்பு துறை உதவி மாவட்ட அலுவலர் நாகராஜன் குன்னுார் தீயணைப்பு அலுவலர் மோகன் ஆகியோரிடம் அங்கு முதலில் வந்த தீயணைப்பு படை வீரர்கள் தன்னார்வலர்கள் தீ காயத்துடன் மீட்கப்பட்டவர்கள் இறந்த நிலையில் மீட்கப்பட்ட உடல்கள் குறித்து முதன் முறையாக விசாரணை நடத்தி பதிவு செய்தனர்.
ஹெலிகாப்டர் சிதைந்த இடத்தில் பிற சிதறிய பொருட்கள் தடயங்கள் மட்டும் எடுக்கப்பட்டுள்ளன. ஹெலிகாப்டரின் பிற பாகங்கள் அப்பகுதியில் வைக்கப்பட்டுள்ளன. நாளை மீண்டும் ராணுவ உயர் அதிகாரிகள் சிலர் அங்கு வரவுள்ளனர். அதன்பின் இறுதி ஆலோசனை செய்யப்பட்டு கறுப்பு பெட்டியில் உள்ள தகவல்களை தெரிந்த பின்பு அந்த பாகங்களை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.


ஹெலிகாப்டர் விழுந்து வீடு சேதம்ஜெயசீலன்,56, நஞ்சப்பா சத்திரம்: எங்கள் வீடு அருகேதான் ஹெலிகாப்டர் விபத்து நடந்தது. அப்போது, நான்வீட்டினுள் இருந்தேன். வெளியே வந்து பார்த்தால் புகை மண்டலம். உடனடியாக, மின் துறை, போலீஸ், தீயணைப்பு துறைக்கு நான் தான் போன் செய்தேன். எனது தம்பி ஜெயசங்கரின் வீடு இந்த விபத்தில் சேதமடைந்தது. அதனை, வருவாய் துறையினர், ராணுவ அதிகாரிகள் பார்வையிட்டனர். சீரமைத்து தருவதாக உறுதி அளித்துள்ளனர்.


'ஹெல்ப் மீ' என்றார்கருணாநிதி,50, ஒன்றிய கவுன்சிலர்: விபத்து நடந்த போது, உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்தோம். அப்போது, இருவர் உயிருடன் இருந்தனர். அதில், ஒருவரான விமானபடை தளபதி வருண் பேசுவது கேட்டது; 'ஹெல்ப் மீ' என்றார். உடனடியாக, காயமடைந்த இருவரையும் ஆம்புலன்சுக்கு கொண்டு சென்றோம். இப்பகுதி மக்கள், கம்பளி, பெட்சீட்களை வழங்கி உதவினர். தண்ணீர் பிடித்து பள்ளத்துக்கு கொண்டு வந்து உதவினர். இதனை, விசாரணை குழுவிடம் தெரிவித்தோம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vijay - coimbatore,இந்தியா
14-டிச-202115:56:59 IST Report Abuse
vijay //...அய்யர் சொல்லிட்டாரு...// மார்க்க நபரே இதை ஒப்புதல் வழங்கி அறிவித்துவிட்டார். எனவே நாமும்....
Rate this:
Cancel
Sundararaman Iyer - Bangalore,யூ.எஸ்.ஏ
12-டிச-202107:01:21 IST Report Abuse
Sundararaman Iyer It is mandatory for any air crash to be investigated by IAF authorities and it is a regular exercise - nothing new in it. They will submit a detailed report to IAF at the end of investigation giving the reason for the crash and steps to avoid recurrence of such accidents.
Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
12-டிச-202120:47:04 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்அய்யர் சொல்லிட்டாரு. அப்பீலே கிடையாது.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X