ராவத் உடலுக்கு ஜனாதிபதி அஞ்சலி செலுத்தாதது ஏன்?

Added : டிச 12, 2021 | கருத்துகள் (35)
Advertisement
ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உடலுக்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தாதது குறித்து அவரது செயலர் விளக்கம் அளித்துள்ளார்.ஹெலிகாப்டர் விபத்தில், மரணமடைந்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் ௧௧ வீரர்கள் உடல்கள் டில்லிக்கு விமானத்தில் ௯ம் தேதி இரவு எடுத்து வரப்பட்டன.பாலம்
ராவத் உடலுக்கு ஜனாதிபதி அஞ்சலி செலுத்தாதது ஏன்?

ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உடலுக்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தாதது குறித்து அவரது செயலர் விளக்கம் அளித்துள்ளார்.

ஹெலிகாப்டர் விபத்தில், மரணமடைந்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் ௧௧ வீரர்கள் உடல்கள் டில்லிக்கு விமானத்தில் ௯ம் தேதி இரவு எடுத்து வரப்பட்டன.பாலம் விமான நிலையத்தில் மலர் வளையம் வைத்து பிரதமர் மோடி, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் உட்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.


latest tamil news


முப்படைகளின் தலைமை கமாண்டரான ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், தளபதி பிபின் ராவத் உடலுக்கு அஞ்சலி செலுத்த வரவில்லை; இது சர்ச்சையை ஏற்படுத்தியது. 'டிவி' சேனல்களில் விவாதங்களும் நடந்தன. இது குறித்து ஜனாதிபதியின் ஊடக செயலர் அஜய் சிங் கூறிய தாவது:முப்படைகளின் சுப்ரீம் கமாண்டராக ஜனாதிபதி உள்ளார். அவருக்கு தலைமை தளபதி, வீரர் என எந்த பாகுபாடும் கிடையாது; அனைவரும் ஒன்று தான். இறந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதில் ஒரு நடைமுறை உள்ளது.இறந்த ராணுவ வீரர்கள் உடல் மீது மலர் வளையம் வைத்து ஜனாதிபதி அஞ்சலி செலுத்த மாட்டார்.


ஜனாதிபதிக்கு பதில் பிரதமரோ அல்லது ராணுவ அமைச்சரோ தான் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவது தான் நடைமுறை. அது தான் தற்போது பின்பற்றப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் விபத்து பற்றி அறிந்ததும் தன் அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்த ஜனாதிபதி, விபத்து பற்றிய விபரங்களை அதிகாரிகளிடம் தொடர்ந்து கேட்டறிந்தார்.இவ்வாறு அவர் கூறினார். -- புதுடில்லி நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vittal Anand - Chennai,இந்தியா
17-டிச-202119:48:10 IST Report Abuse
Vittal Anand மிக்க சரி. அரசியல் அமைப்பின் சாரத்தின் படி ஜனாதிபதியே முப்படைகளின் தலைவர். திரு பிபின் ராவத் முப்படைகளின் தலைவராக பியமித்தது மோடியின் வரன்பு மீறிய செயல். திரு ராவத்தை முப்படைகளின் துணை தலைவராக நியமித்திருக்க வேண்டும். ஏத்தி அரசியாக ஜாரணங்களால் திரு ராவத் முப்படைகளின் தலைவராக பியமித்தது தவறு.
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
15-டிச-202106:37:09 IST Report Abuse
Bhaskaran ராஜீவ் பிரதமராக இருந்தபோது இலங்கையில் அவரை தாக்க முயற்சி நடந்து பின் அவர் இந்தியா திரும்பியதும் ப்ரோடோகால் மீறி குடியரசுத்தலைவர் அவரை சந்தித்து நலம் விசாரித்தார் ..நாட்டின் தளபதிக்கு அஞ்சலி செலுத்துவதில் என்ன ப்ரோடோகால் வேண்டியுள்ளது
Rate this:
selva - Chennai,இந்தியா
18-டிச-202110:35:05 IST Report Abuse
selvaஎல்லாம் சட்டப்படிதான் அ வா எல்லாம் செய்வா ... அவ்வாளுக்கு தெரியாதது ஏதாவது உண்டோ...
Rate this:
Cancel
Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா
14-டிச-202107:00:36 IST Report Abuse
Swaminathan Chandramouli சில வேலை இல்லாத திண்ணை தூங்கி பேர்வழிகள் தேவை இல்லாத விஷயங்களுக்கு பூனையை சிரைத்து கொண்டிருக்கிறார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X