இது உங்கள் இடம்: எல்லாத்துக்கும் ஈ.வெ.ரா., தான் காரணமா?

Updated : டிச 12, 2021 | Added : டிச 12, 2021 | கருத்துகள் (148)
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:முனைவர் மீனாட்சி பட்டாபிராமன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:'தமிழகத்தில் இன்று பெண்கள் அதிகளவில் உயர் கல்வி பட்டங்கள் பெறுவதற்கு, ஈ.வெ.ராமசாமி தான் காரணம். அவரின் கனவு தான், இன்று நிறைவேறியுள்ளது...' இப்படி சொன்னவர், தமிழக உயர் கல்வி அமைச்சர் பொன்முடி.நமக்குத்


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:முனைவர் மீனாட்சி பட்டாபிராமன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

'தமிழகத்தில் இன்று பெண்கள் அதிகளவில் உயர் கல்வி பட்டங்கள் பெறுவதற்கு, ஈ.வெ.ராமசாமி தான் காரணம். அவரின் கனவு தான், இன்று நிறைவேறியுள்ளது...' இப்படி சொன்னவர், தமிழக உயர் கல்வி அமைச்சர் பொன்முடி.latest tamil news


நமக்குத் தெரிந்து, இந்த ஈரோட்டுக்காரர் கனவு காண்பதற்கு முன்னாலேயே, எட்டயபுரத்து முண்டாசுக்காரன் பெண் கல்வி, பெண் விடுதலை என்று கனவு கண்டதோடு, கவிதையிலும் சொல்லிச் சென்றான்.'பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்...' என்றும், 'ஆணுக்குப் பெண் இளைப்பில்லைக் காண்' என்றும் பாடிச் சென்றான். காக்கைபாடினியார், அவ்வையார் போன்ற பல பெண்பாற்புலவர்கள் முன்பே இருந்துள்ளனர்.

ஆனாலும், இந்த திராவிடக்காரர்களுக்கு சம்பந்தம் இருந்தாலும், இல்லாவிட்டாலும், ஈ.வெ.ரா.,வை எல்லாவற்றிலும் முன்னிறுத்த வேண்டும் என்பது எழுதப்படாத விதி.அந்த பகுத்தறிவு துதியை அவ்வப்போது பாடினால் தான், திராவிடக் கொள்கையை மக்கள் மறக்க மாட்டார்கள் என்பது, அவர்கள் நம்பிக்கை.ஆட்சியில் இல்லாத போதே, இந்த துதிபாடிகள் எதற்கு எடுத்தாலும், ஈ.வெ.ரா., என்று தான் சொல்வர்.இப்போது தமிழக ராஜ்யமே, இவர்கள் கையில்... கேட்கவா வேண்டும்?

தி.மு.க., ஆட்சியில் உள்ள வரை, ஹிந்து விரோதம் மட்டுமே பகுத்தறிவாக பஜனை பாடப்படும்.தமிழகத்திற்கு பெரும் தொண்டாற்றிய காமராஜர் போன்றோரை மறந்து, 'ஈ.வெ.ரா., அண்ணாதுரை, கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி, இன்பநிதி...' ஆகியோர் பெயர்களை அவ்வப்போது உச்சரித்து, அமைச்சர்கள் தங்கள் இருப்பை காட்டி கொள்ள வேண்டும்; அவ்வளவு தான்.இந்த ஈ.வெ.ரா.,வின் கொள்கை பிடிக்காமல், தி.க.,வில் இருந்து வெளியேறிய அண்ணாதுரை, தி.மு.க.,வை துவக்கினார் என்பது பழங்கதை


latest tamil news


.'தமிழ் எங்கள் மூச்சு, பேச்சு' என்று கூறித் திரியும் இந்த கும்பல், 'தமிழை காட்டுமிராண்டி பாஷை' என்று சொன்ன ஈ.வெ.ரா.,வை அடிக்கடி நினைவுகூருவது ஒரு விளம்பரத்திற்காகத் தான்.பெண்கள் கல்வி அறிவு பெறுவதில் முன்னேறியதற்கு, ஈ.வெ.ரா., கண்ட கனவு தான் காரணம் என்ற பொன்முடியின் கூற்று வேடிக்கையாய் உள்ளது.

இவ்விஷயத்தில், ஈ.வெ.ரா.,வின் பங்கும் இருக்கலாமே ஒழிய, அவரது கனவு தான் இன்று மெய்ப்பட்டுள்ளது என்று எப்படிச் சொல்ல முடியும்?தி.மு.க.,வினரே... உங்கள் தலைமையை, 'குஷி'ப்படுத்துங்கள்; திராவிடத்தைப் போற்றுங்கள்; ஈ.வெ.ரா.,வைக் கொண்டாடுங்கள்...ஆனால், நாட்டில் மழை பொழிவது முதல் வெயில் அடிப்பது வரை அனைத்திற்கும் ஈ.வெ.ரா., தான் காரணம் என்று கூறுவதை ஏற்க முடியாது.

Advertisement
வாசகர் கருத்து (148)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
18-டிச-202110:05:17 IST Report Abuse
Thiagarajan Kodandaraman வெங்காயங்களின் பேச்சை கண்டுகொள்ளாமல் இருப்பதே நல்லது ...இல்லாவிட்டால் சுருட்டமுடியாது அவ்வப்போது அந்த பெயரை சொல்லிக் கொண்டு கொள்ளை அடிப்பதே நோக்கம் ...இந்து விரோத கும்பலிடம் பலன்களை பெற்றுக்கொண்டு நாட்டுக்குக்கும் இந்துவுக்கும் எதிராய் அரசியல் செய்வதே இந்த கும்பலின் மூச்சாகும்
Rate this:
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
17-டிச-202116:00:00 IST Report Abuse
meenakshisundaram ராமசாமி நாய்க்கர் சின்ன வயசிலே செஞ்ச சாகசங்களும் (?) பின்னர் பணம் சேர்த்த விதமும் ஊரே அறியும் அவரை பெண் விடுதலைக்கு போராடியவர் னு சொல்றவன் அதே முறையிலேதானே செல்வான் ?எப்படியோ ஆட்சியாளர்களின் அரை சுவர்களில் இவரு மாத்திரமில்லே அண்ணாதுரை மற்றும் முக வின் படங்களே தொங்குகின்றன இவர்களுக்கும் பெண் விடுதலைக்கும் ஏதாவது சம்பந்தம் உள்ளதா ?
Rate this:
Cancel
Krishna -  ( Posted via: Dinamalar Android App )
13-டிச-202100:15:33 IST Report Abuse
Krishna Please don't repeat the same comment
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X