
அப்போது பேசிய பிரதமர், 'வாழ்க்கையில் எனக்கு நெருக்கமானவர்கள் பலரை இழந்துவிட்டேன். அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ், கோபிநாத் முண்டே ஆகியோர் நெருக்கமாக இருந்ததுடன் அறிவுரைகளையும் அளித்தனர். அவர்களை இழந்து விட்டேன். இப்போது முப்படை தளபதி பிபின் ராவத்' என கூறிய அவர் கண் கலங்கினார். ஒரு நிமிடம் தன் பேச்சை நிறுத்தி அழுது விட்டார். சக அமைச்சர்களும் கலங்கி விட்டனர்.

பின் கண்ணீரைத் துடைத்தபடி பிரதமர் பேச்சை தொடர்ந்தார். ஜெனரல் பிபின் ராவத், பிரதமருக்கு நெருக்கமானவர். இவரது வீர மரணம் நாட்டிற்கு இழப்பு என்பது ஒரு பக்கம்; அதே நேரத்தில் பிரதமருக்கு பெரும் இழப்பு என்கின்றனர் மூத்த அதிகாரிகள். -விபத்து நடந்ததும் தமிழக முதல்வர் ஸ்டாலினை அங்கு செல்லும்படி டில்லியிருந்து சொல்லப்பட்டதாகவும், புதுச்சேரி துணை நிலை கவர்னர் தமிழிசையையும் விபத்து நடந்த இடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்த டில்லியிருந்து உத்தரவு போனதாகவும் கூறப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE