கடலுார் : கடலுார் மாவட்டம் முழுவதும் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 3,053 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு, ரூ. 20.38 கோடிக்கு தீர்வு காணப்பட்டது
தேசிய மக்கள் நீதிமன்றம் கடலுார் சமரச தீர்வு மையத்தில் நடந்தது. முதன்மை மாவட்ட நீதிபதி ஜவஹர் தலைமை தாங்கினார்.நீதிபதிகள் செந்தில்குமார், புவனேஸ்வரி, சுபா அன்புமணி, எழிலரசி, பாலகிருஷ்ணன், உத்தமராஜ், பிரபாகர், மோகன் ராஜ், ஜெனிபர், இருதயராணி, சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் பஷீர் முன்னிலை வகித்தனர்.
மக்கள் நீதிமன்றத்தில் மோட்டார் வாகன விபத்து வழக்குகள், சிவில் வழக்குகள், தொழிலாளர் நல வழக்குகள், சமரசம் செய்து கொள்ளக்கூடிய குற்றவியல் வழக்குகள், பண மோசடி வழக்குகள், நில எடுப்பு வழக்குகள் மற்றும் குடும்ப நல வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.மாவட்டம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் 16 அமர்வுகளில் 6,897 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 3,053 வழக்குகள் முடித்து வைத்து ரூ. 20 கோடியே 38 லட்சத்து 6 ஆயிரத்து 512 மதிப்பில் தீர்வு காணப்பட்டது.மாவட்டத்தில் உள்ள தாலுகா நீதிமன்றங்களான பண்ருட்டி, நெய்வேலி, சிதம்பரம், விருத்தாசலம், திட்டக்குடி, பரங்கிப்பேட்டை, மற்றும் காட்டுமன்னார்கோவில் நீதிமன்றங்களிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement