முகவரி இல்லா முகங்களை தேடும் 'பப்பூன்கள்'

Added : டிச 12, 2021 | |
Advertisement
சினிமாவில் எளியவர்கள் வாழ்வியலை பதிவு செய்து, அவர்களுக்காக ஹீரோ போராடினால் அவரை, அந்தபடத்தை நாம் தலையில் துாக்கி கொண்டாடுகிறோம். சினிமாவை தாண்டி ஏழை, எளிய மக்களுக்காக குறிப்பாக பழங்குடி, நாடோடிகள்நலனுக்காக போராடும் நிஜ ஹீரோக்களை நாம் அடையாளம் கண்டு கொண்டாடுவதில்லை.அப்படி அடையாளம் காணப்பாடாதவர்கள் வரிசையில் உள்ளனர் மதுரை அமெரிக்கன் கல்லுாரி பேராசிரியர்கள்
 முகவரி இல்லா முகங்களை தேடும் 'பப்பூன்கள்'

சினிமாவில் எளியவர்கள் வாழ்வியலை பதிவு செய்து, அவர்களுக்காக ஹீரோ போராடினால் அவரை, அந்தபடத்தை நாம் தலையில் துாக்கி கொண்டாடுகிறோம். சினிமாவை தாண்டி ஏழை, எளிய மக்களுக்காக குறிப்பாக பழங்குடி, நாடோடிகள்நலனுக்காக போராடும் நிஜ ஹீரோக்களை நாம் அடையாளம் கண்டு கொண்டாடுவதில்லை.


அப்படி அடையாளம் காணப்பாடாதவர்கள் வரிசையில் உள்ளனர் மதுரை அமெரிக்கன் கல்லுாரி பேராசிரியர்கள் அரிபாபு, கிதியோன்.இவர்கள் பப்பூன்' என்ற யூ டியூப் தளத்தில், முகவரி தொலைத்த மண்ணின் மனிதர்களை தேடி அடையாளப்படுத்தி வருகிறார்கள்...
இனி பப்பூன்கள் நம்மிடம்...

நம்மை சுற்றி உள்ள சமூகத்தில் அதிகம் வெளிப்படாத, வெளியே தெரியாத பழங்குடிகள், நாடோடிகள் வாழ்வியலை டிஜிட்டல் ஆயுதமான யூ டியூப் வழி பதிவு செய்து, அவர்களை முன்னேற்ற பாதையில் பயணிக்க செய்யவே இரண்டு ஆண்டுகளுக்கு முன் பப்பூன்' துவங்கினோம்.

பளியர்கள், நரிகுறவர்கள், பாம்பாட்டிகள், தோல்பாவை, நாட்டுப்புற கலைஞர்கள், குடுகுடுப்பைகாரர்கள், பூம்பூம் மாட்டுக்காரர்கள், இருளர்கள் எனத்தேடி பயணித்து அவர்களின் ஒரு நாள் வாழ்வியல், தொழில், உணவு, பழக்க வழக்கங்கள், சந்திக்கும் பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்து, கலந்துரையாடி 76 ஆவணப்படங்களை பப்பூன் வழி பதிவு செய்துள்ளோம்.

எளியவர்களான இவர்களுக்கு ஜாதி சான்றிதழ் உள்ளிட்ட அரசு ஆவணங்கள், உதவி கிடைப்பதில் பிரச்னைகள் உள்ளன. எங்கள் வீடியோ பதிவு வெளியான பின் அவர்கள் பிரச்னை பேசு பொருளாக மாறி இருப்பது எங்கள் முயற்சிக்கு கிடைத்த சிறு வெற்றி.ஆனால் நாடோடிகள் பலருக்கு வீடு கிடைப்பதே இல்லை. கல்வியை தொட ஜாதி சான்றிதழ் தடையாக இருக்கிறது.

இப்படி நிஜங்கள் தேடி அலையும் நாங்கள் எங்கள் நிழல்களை கூட வெளியே காட்டியதில்லை. ஆனால், ஏதோ ஒரு ஜெய் பீம்' படம் எளியவர்களை பற்றி பேசிவிட்டது என்பதற்காக அதை இச்சமூகம் தலையில் துாக்கி கொண்டாடுகிறது. சதா சர்வமும் எளியவர்களை பற்றி சிந்திக்கும், பேசும் எங்களை போன்றவர்களை இச்சமூகம் கொண்டாட வேண்டாம், கை கொடுத்து துாக்கி விட்டாலே போதும்... என்ற ஆதங்க குரலுடன் பயணிக்க தொடங்கினர் பப்பூன்கள்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X