சென்னை: இன்று(டிச.,12) 71வது பிறந்த நாள் கொண்டாடும் நடிகர் ரஜினிக்கு, பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
நடிகர் ரஜினிகாந்த்திற்கு இன்று (டிச.,12) 71 வது பிறந்த நாள். இதனை அவரது ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். ரஜினி வீடு முன்பு குவிந்த ரசிகர்கள் கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பல இடங்களில் அன்னதானம் நடக்கிறது.
இந்நிலையில், ரஜினிக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி
ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். தனது திறமையான நடிப்பு, படைப்பாற்றல் மூலம் மக்களை தொடர்ந்து அவர் ஊக்கப்படுத்தட்டும். அவருக்க நீண்ட வாழ்நாளையும், நல்ல உடல்நிலையையும் கடவுள் அளிக்கட்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின்
உள்ளார்ந்த அன்புடன் பழகிடும் இனிய நண்பர் ரஜினிகாந்திற்கு பிறந்த நாள் நல்வாழ்த்துகள். 72வது வயதில் அடியெடுத்து வைக்கும் அவர், இன்னும் பல ஆண்டுகள் தமிழ் மக்களை தன்னிகரற்ற தனது திரையாளுமையால் மகிழ்விக்கவும்;நல்ல உடல்நலத்துடன் திகழவும் விழைகிறேன்.
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி
ரஜினிகாந்த் நீண்ட ஆயுளுடன், ஆரோக்கியமான வாழ்வு வாழ எனது நெஞ்சம் நிறைந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை
இன்று பிறந்த நாள் கொண்டாடும் தாதாசாகெப் பால்கே ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். அவர் நல்ல ஆரோக்கியத்துடன் சீரும், சிறப்புமாக வாழ நான் அந்த இறைவனை வேண்டி கொள்கிறேன். மகாவதார் பாபாஜியின் கருணையும், அருளும் என்றும் கிடைக்கட்டும்!
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன்
இனிய நண்பர் ரஜினிகாந்திற்குபிறந்தநாள் நல்வாழ்த்துகள். அவர் நல்ல ஆரோக்யத்துடன் பல்லாண்டுகள் வாழ்ந்து ரசிகர்களை மகிழ்விக்க மனதார வாழ்த்துகிறேன்.
மேலும் பல அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள், நடிகர்கள் ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE