ஹிந்துக்கள் யார்? ராகுல் விளக்கம்

Updated : டிச 12, 2021 | Added : டிச 12, 2021 | கருத்துகள் (76)
Advertisement
ஜெய்ப்பூர்: '' அனைவரையும் அரவணைத்து, யாருக்கும் பயப்படாமல், அனைத்து மதங்களையும் மதித்து நடப்பவரே ஹிந்துக்கள்,'' என காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறியுள்ளார்.நாட்டில் அதிகரித்து வரும் பணவீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில், நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் பேசியதாவது: இந்திய அரசியலில், இன்று ஹிந்து மற்றும் ஹிந்துத்வவாதி என்ற இரண்டு
Congress,Rahul,Rahul Gandhi,காங்கிரஸ்,ராகுல்,ராகுல் காந்தி, priyanka, priyankagandhi, பிரியங்கா, பிரியங்காகாந்தி, பிரியங்காவாத்ரா,

ஜெய்ப்பூர்: '' அனைவரையும் அரவணைத்து, யாருக்கும் பயப்படாமல், அனைத்து மதங்களையும் மதித்து நடப்பவரே ஹிந்துக்கள்,'' என காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறியுள்ளார்.

நாட்டில் அதிகரித்து வரும் பணவீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில், நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் பேசியதாவது: இந்திய அரசியலில், இன்று ஹிந்து மற்றும் ஹிந்துத்வவாதி என்ற இரண்டு உலகங்களுக்கு இடையே போட்டி உள்ளது. நான் ஹிந்து. ஆனால், ஹிந்துத்வவாதி இல்லை. மஹாத்மா காந்தி ஹிந்து. ஆனால், கோட்சே ஹிந்துத்வவாதி.


latest tamil news


ஹிந்துத்வவாதிகள், தங்களது வாழ்க்கை முழுவதும் அதிகாரத்தை தேடுவதிலேயே குறியாக உள்ளனர். அவர்களுக்கு அதிகாரத்தை தவிர வேறு ஒன்றும் தேவையில்லை. அவர்கள் சத்யாகிரக பாதையை பின்பற்ற மாட்டார்கள். அவர்கள் தான் கடந்த 2014 முதல் அதிகாரத்தில் உள்ளனர். அவர்களை நாம்,அதிகாரத்தில் இருந்து அகற்றிவிட்டு ஹிந்துக்களை அமர வைக்க வேண்டும். இந்தியா ஹிந்துக்களின் நாடு. ஹிந்துவவாதி நாடு அல்ல. ஹிந்து என்பவர் யார்? அனைவரையும் அரவணைத்து, யாருக்கும் பயப்படாமல், அனைத்து மதங்களையும் மதித்து யார் நடக்கிறாரோ அவரே ஹிந்து. ஹிந்துத்வவாதிகளால், பணவீக்கம் உயர்ந்துள்ளது. அதனால், அனைவரும் அவதிப்படுகின்றனர். பல ஆண்டுகளாக, பிரதமர் மோடியும், அவரது நண்பர்களும் சேர்ந்து நாட்டை சீரழித்து வருகின்றனர். இவ்வாறு ராகுல் பேசினார்.


latest tamil news


முன்னதாக, அக்கட்சி பொதுச்செயலர் பிரியங்கா பேசியதாவது: நாட்டில், கடந்த 70 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்டமைத்த அனைத்தையும் தனது தொழிலதிபர்களிடம் விற்க பா.ஜ., முயற்சி செய்கிறது. தேர்தல் வரும் காலங்களில் பா.ஜ., தலைவர்கள் சீனா பற்றியோ , மற்ற நாடுகளை பற்றியோ, ஜாதி குறித்து பேசுவார்கள். ஆனால், மக்களின் பிரச்னைகளை பற்றி பேச மாட்டார்கள். கடந்த 7 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் மோடி அரசு என்ன செய்துள்ளது. மத்திய அரசை பொறுப்பாக்க வேண்டியது உங்களது கடமை. பணவீக்கம் அதிகரித்துள்ளது குறித்து கேள்வி எழுப்ப வேண்டியது உங்களது கடமை. மத்திய அரசு, மக்கள், விவசாயிகளின் நலனுக்காக உழைக்கவில்லை. மாறாக, குறிப்பிட்ட தொழிலதிபர்களுக்காக மட்டுமே உழைக்கிறது. கடந்த 70 ஆண்டுகளாக காங்கிரஸ் செய்தது என்ன என மோடி அரசு தொடர்ச்சியாக கேள்வி எழுப்புகிறது. இந்த 70 ஆண்டுகளை விட்டு, கடந்த 7 ஆண்டுகளில் என்ன செய்துள்ளீர்கள் என்பதை விளக்க வேண்டும். இவ்வாறு பிரியங்கா பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (76)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா
15-டிச-202114:56:13 IST Report Abuse
Swaminathan Chandramouli ஹிந்து என்றால் என்ன ? ராகுல் கட்டாயம் ஹிந்து இல்லை
Rate this:
Cancel
S.Viswanathan - Chennai,இந்தியா
13-டிச-202113:09:51 IST Report Abuse
S.Viswanathan உச்ச நீதி மன்றம் பெஞ்ச் ஒன்று பல வருடங்களுக்கு முன்பே ஹிந்துத்வம் என்பது ஹிந்து மதத்திலிருந்து வேறுபட்டதில்லை என்று தீர்ப்பு அளித்தது. சில வருடங்களுக்கு முன்பு அந்ததீர்ப்பை மறு பரிசீலனை செய்யவும் மறுத்துவிட்டது. இந்நிலையில் ராகுல் இவ்வாறு பேசியது நீதி மன்ற அவமதிப்பு அல்லவா?
Rate this:
RAMAKRISHNAN NATESAN - LAKE VIEW DR, TROY 48084,யூ.எஸ்.ஏ
13-டிச-202115:20:43 IST Report Abuse
RAMAKRISHNAN NATESANநிச்சயம் நீதிமன்ற அவமதிப்புதான் அதனால் இவன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரலாம் யாரும் செய்ய மாட்டார்கள்...
Rate this:
Cancel
13-டிச-202109:07:25 IST Report Abuse
பேசும் தமிழன் மாற்று மதத்தை சேர்ந்தவர்கள் எவ்வளவு அடித்தாலும் தாங்கி கொள்ள வேண்டும்.. அவனே உண்மையான இந்து என்று ஒரே வரியில் சொல்லி விட்டு போக வேண்டியது தானே????
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X