புதுடில்லி: முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், உயிரிழப்பதற்கு ஒரு நாள் முன்பு பேசிய வீடியோவை ராணுவம் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில், ஆயுதப்படைகளை நினைத்து பெருமிதம் கொள்வதாக கூறியுள்ளார்.
கடந்த 1971 ம் ஆண்டு வங்கதேசத்தில் நடந்த போரில் இந்தியா வெற்றி பெற்றதன் பொன்விழா தினம் டில்லியில் உள்ள இந்தியா கேட் பகுதியில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு பேசினார்.
இதன் பின்னர், இந்த பொன் விழாவை முன்னிட்டு, முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் பேசிய வீடியோவை ராணுவம் வெளியிட்டுள்ளது. அவர் தமிழகத்திற்கு புறப்படுவதற்கு முதல் நாள் இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த வீடியோவில் பிபின் ராவத் பேசியுள்ளதாவது:நமது ஆயுதப்படைகளை கண்டு பெருமிதம் கொள்வோம். அனைவரும் இணைந்து வெற்றியை கொண்டாடுவோம். இந்திய ஆயுதப்படையின் துணிச்சல் மிகுந்த வீரர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். 1971ம் ஆண்டு நடந்த போரில் கிடைத்த வெற்றியின் 50வது ஆண்டு விழாவை விஜய் பார்வ் என்ற பெயரில் நாம் கொண்டாடுவோம்.
வங்கதேசத்தில் நடந்த போரில் கிடைத்த வெற்றிக்கு, இந்திய பாதுகாப்பு படை வீரர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். அமர் ஜவான் ஜோதி அருகே இவ்விழா கொண்டாடப்படுவது சிறப்பானது என்று அந்த வீடியோவில் பிபின் ராவத் பேசியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE