புதுடில்லி: விரைவில்நடைபெற உள்ள உ.பி. தேர்தலில் எந்த ஒரு கட்சிக்கும் ஆதரவு அளிக்கப்போவதில்லை என்றும் வரும் 17 ம் தேதி தமிழகத்திற்கு வருகை தர உள்ளதாகவும் விவசாயிகள் சங்க தலைவர் ராகேஷ் திகாயத் தெரிவித்து உள்ளார்.
![]()
|
மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் மசோதா சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துடன் சட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தி கடந்த 15 மாதங்களுக்கும் மேலாக பஞ்சாப், உ.பி., உள்ளிட்ட பல்வேறு மாநிலத்தை சேர்ந்த விவசாயிகள் தலைநகர் டில்லியில் போராட்டம் நடத்தி வந்தனர். இந்த போராட்டத்திற்கு பாரதிய விவசாய சங்கம் முன்னெடுத்து நடத்தி வந்தது. இதன் தலைவராக ராகேஷ் திகாயத் இருந்து வருகிறார். குறிப்பிட்ட சட்டங்களை வாபஸ் பெறுவதாக பார்லி.,யின் குளிர் காலகூட்டத்தொடரின் துவக்க நாளில்மத்திய அரசு அறிவித்தது. இதனையடுத்து விவசாய சங்கத்தினர் போராட்டத்தை வாபஸ் பெற்று தங்களது சொந்த மாநிலங்களுக்கு திரும்பி சென்றனர்
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ராகேஷ்திகாயத் விவசாயிகளின் போராட்டத்தை ஊடகங்கள் முன்னிலைப்படுத்தியதால் தான் மத்திய அரசுக்கு அழுத்தம் ஏற்பட்டது. இதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் கிசான் அந்தோலன் மேளா நடத்தப்படும். விவசாயிகளின் பிரச்னைகள் குறித்து விவாதிக்க அவ்வப்போது மகா பஞ்சாய்த்து நடத்தப்படும்.
மேலும் மக்கள் எங்களை எங்கு அழைத்தாலும் அங்கு சென்று கூட்டங்களை நடத்த உள்ளோம். வரும் 17ம் தேதி தமிழ்நாட்டிற்கும், 19 ம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் வார்தாவிற்கும் செல்ல உள்ளோம்.
![]()
|
தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை
விரைவில் நடைபெற உள்ள உ.பி.,மாநில தேர்தலில் யாருக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை. பாரதிய கிசான் சங்கம் அரசியல் கட்சியாக மாறாது. தேர்தலில் யாரையும் ஆதரிக்காது. அரசியலில் இருந்து பிகேயு(பாரதிய கிசான் சங்கம்) ஒதுங்கி இருக்கும் என கூறினார்.