குழந்தைகளுக்கு ஓமைக்ரான் பூஸ்டர் டோஸ் அவசியம்: உலக சுகாதார அமைப்பு மருத்துவர் தகவல்

Updated : டிச 12, 2021 | Added : டிச 12, 2021 | கருத்துகள் (2)
Advertisement
டில்லி: உலகம் முழுவதும் தற்போது ஓமைக்ரான் தாக்கம் அதிகரித்து வருகிறது. இது குறித்து உலக சுகாதார அமைப்பு தீவிர ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறது. தற்போதைய உலக சுகாதார அமைப்பின் தெற்காசிய தலைவர் டாக்டர் பூனம் கேட்ராபால் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.ஓமைக்ரான் தாக்கத்தின் அளவு மாறுபட்டாலும் பாதிக்கப்பட்டவர்களது எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக உலக

டில்லி: உலகம் முழுவதும் தற்போது ஓமைக்ரான் தாக்கம் அதிகரித்து வருகிறது. இது குறித்து உலக சுகாதார அமைப்பு தீவிர ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறது. தற்போதைய உலக சுகாதார அமைப்பின் தெற்காசிய தலைவர் டாக்டர் பூனம் கேட்ராபால் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
latest tamil news
ஓமைக்ரான் தாக்கத்தின் அளவு மாறுபட்டாலும் பாதிக்கப்பட்டவர்களது எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக உலக நாடுகளின் சுகாதார துறைக்கு அதிக சவால்கள் ஏற்படுகின்றன. இதனால் எதிர்காலத்தில் ஓமைக்ரான் தாக்கத்தால் உண்டாகும் மரணத்தின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

20 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு அதிக பாதுகாப்பு தேவை. ஓமைக்ரான் திரிபு நிலை குறித்து தற்போது தீவிர ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது. தற்போது உள்ள தடுப்பு மருந்து மைக்ரான் தாக்கத்தை சமாளிக்க ஏற்றதா என்று ஆராய்ச்சி மேற்கொள்ளப்படுகிறது.

தடுப்பு மருந்துகள் ஓரளவுக்குத் தான் பாதுகாப்பு அளிக்க முடியுமே தவிர முழுவதுமாக வைரஸ் தாக்கத்திலிருந்து தற்காக்க முடியாது. ஊட்டச்சத்து குறைபாடு கொண்ட குழந்தைகள் மற்றும் சத்து பற்றாக்குறை கொண்ட இளைஞர்கள் ஆகியோருக்கு மூன்றாவது பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.இவர்களை ஓமைக்ரான் தாகத்துக்கு அதிகமாக வாய்ப்பு உள்ளது.


latest tamil newsஓமைக்ரான் குறித்த மேலும் பல தகவல்கள் கிடைத்ததும் உலக சுகாதார அமைப்பு அதிகாரப் பூர்வமாக பல தகவல்களை வெளியிடும். ஓமைக்ரான் தாக்கம் குழந்தைகளை பாதிக்குமா என்று இன்னும் சரியாக தெரியவில்லை. இளைஞர்களை காட்டிலும் வைரஸ் தாக்கம் குழந்தைகளின் உடலில் மிதமாகவே பாதிக்கும் என தற்போது நம்பப்படுகிறது. ஆனால் எதிர்காலத்தில் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது ஓமைக்ரான் தாக்கத்தை மேலும் பரவாமல் தடுக்க உதவும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
LetsVALUE.org - Democracy,இந்தியா
12-டிச-202121:12:16 IST Report Abuse
LetsVALUE.org மருந்து விக்கணும்
Rate this:
Cancel
RAMAKRISHNAN NATESAN - LAKE VIEW DR, TROY 48084,யூ.எஸ்.ஏ
12-டிச-202120:29:26 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN ஒரு முறையாவது சாதாரண தடுப்பூசி போடப்பட வேண்டும் அதற்கு அடுத்ததாகப் போடப்படுவதைத்தான் பூஸ்டர் தடுப்பூசி என்பார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X