சிறப்பு பகுதிகள்

சிந்தனைக் களம்

நெருப்புக்கு முன் வைக்கோல் போர்!

Updated : டிச 14, 2021 | Added : டிச 12, 2021 | கருத்துகள் (5) | |
Advertisement
நெருப்புக்கு முன் வைக்கோல் போர் பற்றக்கூடிய துாரத்தில் இருந்தால் என்ன ஆகும்... எல்லாருக்கும் தெரிந்தது தான்; எரிந்து விடும். இதை தான் வள்ளுவர் சொன்னார்.வரும் முன்னால் காக்கத் தெரியாதவன் வாழ்க்கையும் இதுவும் ஒன்று என்று!முன்பெல்லாம் வானிலை அறிக்கையை ரமணன் சொல்லும் போது, ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். அதனால் முன்கூட்டியே பாதுகாக்கும் உணர்வு ஏற்படும். இப்போது வானிலை
நெருப்புக்கு முன் வைக்கோல் போர்!

நெருப்புக்கு முன் வைக்கோல் போர் பற்றக்கூடிய துாரத்தில் இருந்தால் என்ன ஆகும்... எல்லாருக்கும் தெரிந்தது தான்; எரிந்து விடும். இதை தான் வள்ளுவர் சொன்னார்.
வரும் முன்னால் காக்கத் தெரியாதவன் வாழ்க்கையும் இதுவும் ஒன்று என்று!
முன்பெல்லாம் வானிலை அறிக்கையை ரமணன் சொல்லும் போது, ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். அதனால் முன்கூட்டியே பாதுகாக்கும் உணர்வு ஏற்படும். இப்போது வானிலை அறிக்கையை பாலச்சந்திரன் கூறும் போது, பெரும் பதைபதைப்பு உருவாகிறது, 'சுனாமி' போல ஏன்?
மழையின் சீற்றம் முன்பை காட்டிலும் கூடி வருகிறது என்பது ஒரு பக்கம் இருந்தாலும், வடிகால் அமைப்புகளை இனியாவது ஊர் கூடி தேர் இழுக்க வேண்டும் என்பது எச்சரிக்கை மணியாக ஒலிக்கிறது.
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் தான் பருவ மழையின் சீற்றம் கூடுதல் என்பதும் வரலாறு. இப்போது அது, இரண்டு மடங்கு ஆகி விட்டதற்கு என்ன காரணம்; கலி காலம். சென்னை மிதக்கிறது என்று ஆறு ஆண்டுகள் முன் சொன்னது போலவே, இப்போதும் மிதக்கிறது என்று சொல்லும் நிலையில், மழையின் அளவு கூடியது மட்டுமல்ல; எச்சரிக்கையும், முன் யோசனையும் இல்லாத மெத்தனமும் தெரிகிறது.
கோவில்களுக்குள் மழை வெள்ளம். அநியாயங்கள் நடப்பது ஆண்டவனுக்கே பொறுக்க வில்லை. திருப்பதி மலையில் வெள்ளப்பெருக்கு என்பதை பார்க்கும் போதும், படிக்கும் போதும் நம்பி தான் ஆக வேண்டி இருக்கிறது.சித்துார் மாவட்டத்தில் கட்டப்பட்ட கல்யாணி அணை, கொள்ளளவு நிரம்பியதில் மதகுகள் திறந்தே ஆக வேண்டிய கட்டாயம்.
வெள்ளம், சொர்ணமுகி ஆற்றில் பெருக்கெடுத்தால், திருமலை, திருப்பதி வெள்ளக்காடு. காடு என்பதற்கு அடர்த்தி என்று அர்த்தம். வெள்ளத்தின் அடர்த்தி கூடினால் என்ன ஆகும்?திருமலை, ஸ்ரீவாரி மெட்டில் மலைகள், பாறைகள் துண்டாகி, அங்கு அருவிகள் உருவாகி விட்டன. கண்ணுக்கு எட்டிய துாரம் வரை வெள்ளம் என்றால், அதற்கு அப்புறமும் வெ ள்ளம் தானே இருக்க முடியும்?இயற்கையை மனிதன் வென்று விட்டான் என்று மார் தட்டியதற்கு, இயற்கை கொடுத்த தண்டனை என சொல்லலாமா?
திருச்செந்துார் மூலவர் சன்னதியை தேடி வந்திருக்கிறது மழை வெள்ளம். திருச்செந்துாரில், 21.7 செ.மீ., மழை, 10 மணி நேரத்தில் பொழிந்தது என்பது புதிய வரலாறு. காயல்பட்டினத்தில், 24.6 செ.மீ., என்பது உச்சம்.சுனாமியில் கடல் சீற்றம் கூட செந்துாரானை தீண்டவில்லை என்பதை கண்டோம். கடலுக்குள் ஒரு கடல் மைல் தொலைவில், கற்பாறை அடுக்குகளை இயற்கை கட்டிக் கொடுத்து இருக்கிறது. ஆனால், அக்கிரமங்கள் பெருகும் போது, இயற்கையின் ஆர்ப்பரிப்புகள் கூடுவதில் ஆச்சரியம் ஏதும் இல்லை.
பெரிய கோவில்கள் நிலையே இப்படி எனில், சிறிய ஆலயங்கள், கிராமத்து தேவதைகள் நிலைமையை எண்ணும் போது ரத்தக்கண்ணீர் வருகிறது. ஆட்சியாளர்களை குறை சொல்லுவதில் பயனில்லை. வந்த பின் தடுப்பதை விட, வரும் முன் தடுப்பது தான் நமக்கு ஆரோக்கியம்.


வெள்ளம் யார் தப்பு?

பஞ்சாபின் அனந்தபூர் மாவட்டம், கத்ரி நகரில், மூன்று மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் மூன்று குழந்தைகள், இரண்டு பெரியவர்கள் பலியாகி உள்ளனர். இதுமாதிரி நிறைய செய்திகள் வருகின்றன.ஆற்றங்கரையில் வீடு கட்டுகின்றனர். அது யார் தவறு?அதற்கு அனுமதி கொடுத்தது பெரும் தவறு. யாரை நோவது; பலி கடா அனுமதி கொடுத்தவர் அல்ல; அனுமதி கேட்டவர் தான்.
இதை எப்படி புரிய வைப்பது...இந்த வெள்ளத்தில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் அடித்து செல்லப்பட்டன. மனிதன் நடக்கவே பாதை இல்லாத போது, கோழிகளை காப்பாற்ற போராட முடியுமா... ரயில் பாதைகள் மேலே தண்ணீர் ஓடினால் போக்குவரத்து என்ன ஆவது? அதை விட மோசம் பாலங்கள் இடிவது, பரிதாபக் குரல் கேட்பது.நெருப்பணைக்கும் படையினர் நீரில் சிக்கியவர்களை காப்பாற்றுகின்றனர்.
தன்னார்வ மனம் உள்ள இளைஞர்கள் பெயருக்கு ஆசைபடாமல் பெரிய உதவிகள் செய்கின்றனர். அவர்களை மனம் விட்டு பாராட்டு மழையில் நனைத்தால் ஊருக்கு நல்லது. மாநிலம் முழுதும் அக்டோபர் 1 முதல் நவம்பர் 26 வரை, 58 செ.மீ., மழை என்கிறது வானிலை அறிக்கை. வழக்கமான மழை அளவு, 34 செ.மீ., தான் என்பது வரலாறு. சென்னையில் மட்டும், 98 செ.மீ., இது வழக்கமான அளவை விட, 59 செ.மீ., அதிகம். இதற்கான காரணங்கள் ஆராய்வதும் முக்கியம்.
அதை விட இனி பெரிய மழை வந்தால், என்ன செய்யலாம் என்று திட்டமிட்டு செயல்படுவது தான் முக்கியம்.இன்றைய காலகட்டத்தில் கணவன் -- மனைவி என்றால் சண்டை வரத் தான் செய்யும்; 'ஈகோ' தலை துாக்கும். நியாயம் என்பது யார் பக்கம் என்பதும் ஒவ்வொரு பிரச்னையிலும் மாறுபடும். அதை இருவரும் புரிந்து கொண்டால் அவர்களின் குழந்தைகளுக்கு நல்லது.
அது மாதிரி மழை வரும், பாதிப்பு சேரும் என்று தெரியும் போது ஆளும் கட்சியும் எதிர்க்கட்சிகளும், ஈகோ பார்க்காமல் ஒவ்வொரு பிரச்னையிலும் இணைந்து தீர்வு கண்டால் நாட்டுக்கு நல்லது.
கருவேல மரங்களின் வளர்ச்சியால், சிற்றாறுகளில் நீர் போக முடியாத நிலை. சிற்றாறுகளில் தடுப்பணை மதகுகள் இல்லாததால், கண்மாய்க்கு போகும் வாய்க்கால்கள், வழித்தடங்கள் மறைக்கப்பட்டதால், ஊருக்கும் புகுந்து சேதப்படுத்துவதுடன் நீரும் வீணாக்கப்படுகிறது.
வரத்துக் கால்வாய்கள் உடைப்பால், கண்மாய் இவ்வளவு அதிக மழைக்கும் நிரம்பவில்லையே என்பது, சில இடங்களில் விவசாயிகளின் ஏக்கம். இந்த கால்வாய்கள் பொதுப்பணித்துறை கட்டுமானமா அல்லது டெண்டர் கட்டுமானமா என்ற கேள்வி எழுகிறது.அரசு அலுவலக கட்டடங்கள் சரியான பராமரிப்பு இல்லாததால், கோப்புகளை காணாமல் போக்குவதும் ஒரு வசதி தானோ?


இனி என்ன செய்ய வேண்டும்

அரசையும், அதிகாரிகளையும், பெட்டிஷன்களையும், போராட்டங்களையும் மட்டும் நம்பாமல், அந்தந்த பகுதி மக்கள் தங்கள் தேவைகளை தாங்களே பூர்த்தி செய்து கொள்வதை தவிர, வேறு வழி இல்லை.ஆறுகளில் நீர் திறக்கப்பட போகிறது என்று அரசு எச்சரிக்கைக்கு முன்னரே ஒதுங்க வேண்டும். இனி, புதிதாக குடியிருப்புகள் அமைப்பவர்கள், ஆற்றங்கரை பக்கம் கட்டுவதை தவிர்க்க வேண்டும்.
புதிய நகரங்கள் உருவாகும் போது, கழிவு நீர் கால்வாய்கள் கட்டாயம் நல்ல முறையில் அமைக்கப்பட வேண்டும். தெருவை விட குறைந்தது, 3 அடி உயரத்தில் வீடுகள் கட்டப்பட வேண்டும். தாழ்வான பகுதிகளில் மற்றும் ஏரி குளங்கள் பக்கத்தில் வீடுகள் கட்ட அனுமதிக்க கூடாது. அப்படி அனுமதித்து இருந்தால் அவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் என்று நீதிமன்றங்கள் தானாகவே தலையிட்டு, தக்க தீர்ப்பு வழங்கலாம்.கிராமப்புறங்களில் கண்மாய்க்கரை அமைப்பு கண்காணிக்கப்பட வேண்டும்.
கண்மாய் கரைகளில் பனை மரங்கள் மிகுதியாக வளர்த்தால் உடைப்புகள் தடுக்கப்படும். அணைக்கட்டுகள் நிரம்பியதால் நீர்மின் உற்பத்தி கூடியது என்பது ஒரு மகிழ்ச்சி செய்தி. பெய்தும் கெடுக்கும்; பொய்த்தும் கெடுக்கும் மழை என்பர். இப்போது புது மொழி. 'டெல்டா மழை, பயிரை அழித்தும் கெடுக்கும்.
வானம் பார்த்த பூமி போன்ற இடங்களில் அளவாகக் கொடுத்தும் ௦வளர்க்கும்!' சிலருக்கு இதனால் மகிழ்ச்சி தான். வரி கேட்டு வரும்போதும், ஓட்டு கேட்டு வரும்போது, வாதிட்டுக் கொள்ளலாம் என்று நினைப்பதை விட, நம் வாரிசுகள் இந்த பூமியில் நல்ல விதம் வாழ வேண்டும் என்பதற்காக, நமக்கு நாமே தீர்க்கமாக முடிவுகள் எடுக்க வேண்டும்.வைக்கோல் போருக்கு முன் குளிர் காய வேண்டாம்!
- சீத்தலை சாத்தன்
சமூக ஆர்வலர்
98424 90447/ 93858 86315

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramanujam Veraswamy - Madurai,இந்தியா
13-டிச-202117:58:18 IST Report Abuse
Ramanujam Veraswamy Recently, in one pattimandrum, one orator said that Madras High Court and Madurai Bench advise Govt to restore water storage tanks, Canals encroached by social criminals. He also said that Madurai Bench of Madras High Court is built on Ullaganeri Tank. He also said Villupuram and Cuddlier Collectorates are constructed on water bodies. Who will bell the cat?
Rate this:
Cancel
Sethuraman Kozhiyur - Muscat,ஓமன்
13-டிச-202116:14:12 IST Report Abuse
Sethuraman Kozhiyur நல்ல வேலை DMK காரணம் இல்லை
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
13-டிச-202113:05:34 IST Report Abuse
duruvasar இலவசத்துக்கு பித்துபிடித்த மாக்கள் நிறைந்த இடத்தில் இவைகள் நடப்பது இயல்பே. இந்த கூத்திற்க்கு முத்தாய்ப்பு " கல்வியறிவில் முதன்மை மாநிலம்" என்ற தற்பெருமை வேறு‌. காலத்தின் கோலம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X