ரியாத்: தப்லிகி ஜமாத் என்ற அமைப்புக்கு மேற்காசிய நாடான சவுதி அரேபியா தடை விதித்துள்ளது. . பயங்கரவாதத்தில் வாசலாக செயல்படுவதாக சவுதி அரேபியா குற்றம் சாட்டியுள்ளது.

தப்லிகி ஜமாத் என்ற அமைப்பு இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் இயங்கி வருகிறது. பழமைவாதத்தை பின்பற்றும் இந்த பிரிவினர் பல நாடுகளிலும் பரவி உள்ளனர். பயங்கரவாதத்தின் வாசலாக செயல்படுவதால் இந்த அமைப்புக்கு தடை விதிப்பதாக சவுதி அரேபியா தெரிவித்துள்ளது. இது குறித்து மசூதிகளில் அறிவிப்புகளை வெளியிடும்படி மேலும் உத்தரவிட்டுள்ளது.
சவுதி அரேபியா வழங்கி வரும் நிதியிலிருந்து இந்த அமைப்பு செயல்பட்டு வருவதால் இந்த தடை உத்தரவு மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. சவுதி அரேபியாவைத் தொடர்ந்து மற்ற நாடுகளும் இந்தஅமைப்புக்கு தடை விதிக்க முடிவு செய்துள்ளன.

அதே நேரத்தில் தப்லிகி ஜமாத் அமைப்பினர் அதிகம் வசிக்கும் மலேசியா, இந்தோனேசியா, வங்கதேசம், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இது சற்று கடினமான விஷயமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் நீண்ட காலமாக இந்த பிரவினர் இயங்கி வருகின்றனர். கடந்த 2020 ல் கோவிட் பரவல் தீவிரமாக இருந்த போது டில்லியில் இந்த அமைப்பினர் நடத்திய மாநாடு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்தே இந்த பிரிவினர் குறித்து அதிக தகவல்கள் வெளிவர துவங்கின
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE