ஹெலிகாப்டர் விபத்தின் வீடியோ: அலைபேசி தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைப்பு!

Updated : டிச 13, 2021 | Added : டிச 13, 2021 | கருத்துகள் (6) | |
Advertisement
கோவை: முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாவதற்கு சில விநாடிகளுக்கு முன் கோவையைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி வீடியோ ஒன்றை எடுத்திருந்தார். அவரது அலைபேசி தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டம், குன்னூர் காட்டேரி அருகே நஞ்சப்பாசத்திரம் பகுதியில் கடந்த டிச., 8-ம் தேதி முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின்

கோவை: முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாவதற்கு சில விநாடிகளுக்கு முன் கோவையைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி வீடியோ ஒன்றை எடுத்திருந்தார். அவரது அலைபேசி தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.



latest tamil news


நீலகிரி மாவட்டம், குன்னூர் காட்டேரி அருகே நஞ்சப்பாசத்திரம் பகுதியில் கடந்த டிச., 8-ம் தேதி முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் சென்ற விமானம் விபத்தில் சிக்கியது. அதில் அவர், அவரது மனைவி மற்றும் ராணுவ அதிகாரிகள் என 13 பேர் உயிரிழந்தனர். குரூப் கேப்டன் வரூண் சிங் 80% தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

விபத்து குறித்து விமானப் படையின் ஏர் மார்ஷல் மன்வேந்திர சிங் தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து நடந்த அன்று காட்டேரி பகுதியில் கோவையைச் சேர்ந்த திருமண விழாக்களுக்கு புகைப்படம் எடுக்கும் ஜோ பால் என்பவர் படம் எடுத்துக்கொண்டிருந்துள்ளார். அதிக சத்தத்துடன் ஹெலிகாப்டர் பறப்பதை கண்டதும் அதனை வீடியோ எடுத்தார். பனி சூழ்ந்த பகுதிக்குள் ஹெலிகாப்டர் நுழைந்த சில விநாடிகளில் அது கீழே விழுந்து நொறுங்கியதாக அவர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.


latest tamil news


இந்நிலையில் விசாரணையின் ஒரு பகுதியாக, ஜோவின் அலைபேசியை மாவட்ட போலீசார் சேகரித்து கோவையில் உள்ள தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். வன விலங்குகள் நடமாட்டம் இருக்கு அடர்ந்த வனப்பகுதிக்குள் நுழைய தடை இருப்பதால் அங்கு ஏன் சென்றார்கள் என விசாரணை நடந்து வருகிறது. மேலும் விபத்து நடந்த நாளின் வானிலை விபரங்களை சென்னை வானிலை ஆய்வு மையத்திடம் காவல் துறை கேட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilan - NA,இந்தியா
13-டிச-202114:55:17 IST Report Abuse
Tamilan நாட்டுக்கும் , மோடிக்கும், அரசுக்கும் முதல் முக்கிய தேவை வருண் காந்தி . வருண் சிங்கு அப்புறம்தான் என்பதை இப்போதாவது மோடியும் , மோடி கும்பலும் புரிந்துகொள்ளவேண்டும் .
Rate this:
Cancel
David DS - kayathar,இந்தியா
13-டிச-202111:59:19 IST Report Abuse
David DS விசாரிக்கப்பட வேண்டிய விஷயம் தான். ஒடஞ்சிருச்சா என்று கேட்டவுடன் அடுத்த நொடியே ஆமாம் என்று ஒருவர் சொல்கிறார். இவருக்கு அது உடைந்தது என்று எப்படி தெரியும். அதுவும் அவர் சொல்லும் 'ஆமாம்' என்ற வார்த்தையை பொதுவாக இந்திய தமிழர்கள் 'ஆமா' என்று தான் சொல்வார்கள். ஆமாம் என்று சொல்வது வெளி நாட்டில் வாழும் தமிழர்கள், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் காரர்கள் மற்றும் முஸ்லீம்கள் மட்டுமே.
Rate this:
Cancel
David DS - kayathar,இந்தியா
13-டிச-202111:56:07 IST Report Abuse
David DS santhEkamillamal
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X