புதுடில்லி : டில்லியில் உள்ள அக்பர் சாலைக்கு, சமீபத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் பெயரை வைக்க, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஆசிஷ் கோபால் கார்க் கோரிக்கை விடுத்துள்ளார்.
மத்திய நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரிக்கு உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஆசிஷ் கோபால் கார்க் எழுதியுள்ள கடிதம்: முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் சமீபத்தில் தமிழகத்தின் குன்னுாரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தார். இது நாட்டு மக்களிடையே அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தி உள்ளது.


நம் நாட்டுக்கு பிபின் ராவத் செய்த சேவையை கவுரவிக்கும் வகையில் டில்லியில் உள்ள அக்பர் சாலையின் பெயரை பிபின் ராவத் சாலை என மாற்றம் செய்ய வேண்டும். மத்திய டில்லி பகுதியில் முக்கியமான சாலையாக அக்பர் சாலை உள்ளது. அதனால் இந்த சாலைக்கு பிபின் ராவத் பெயரை வைப்பது மிகவும் பொருத்தமாகவும், சிறப்பானதாகவும் இருக்கும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE