வாக்காளர் பட்டியலில் ஹிந்தியில் பெயர்!

Updated : டிச 13, 2021 | Added : டிச 13, 2021 | கருத்துகள் (18) | |
Advertisement
கோவை: கோவையில் இறுதி வாக்காளர் பட்டியலில் வாக்காளரின் பெயர், உறவினரின் பெயர் ஹிந்தியில் இருந்ததால் சர்ச்சை எழுந்துள்ளது.தமிழகத்தில் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. கோவை மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில், 15 லட்சத்து, 31 ஆயிரத்து, 448 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதேபோல், மாவட்டத்தில், 3 நகராட்சிகளில், 2


கோவை: கோவையில் இறுதி வாக்காளர் பட்டியலில் வாக்காளரின் பெயர், உறவினரின் பெயர் ஹிந்தியில் இருந்ததால் சர்ச்சை எழுந்துள்ளது.
தமிழகத்தில் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. கோவை மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில், 15 லட்சத்து, 31 ஆயிரத்து, 448 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதேபோல், மாவட்டத்தில், 3 நகராட்சிகளில், 2 லட்சத்து, 131 பேரும், 33 பேரூராட்சிகளில், 4 லட்சத்து, 73 ஆயிரத்து, 207 பேரும் சேர்க்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.



latest tamil news



இந்நிலையில், கோவை தெற்கு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட வார்டு எண், 69ல் புதிதாக வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் ஒரு வாக்காளரின் பெயரும், அவரது மனைவி பெயரும் ஹிந்தியில் வெளிவந்ததால் வாக்காளர்கள் குழம்பியுள்ளனர். குறிப்பிட்ட அந்த வாக்காளர் பட்டியலில் மட்டும் பெயர் என்று தமிழில் குறிப்பிட்டு இருக்கும் இடத்தில் ஹிந்தியில் உள்ளது.


latest tamil news




கோவை மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் என இரு தரப்பினரும், இது கம்ப்யூட்டர் தொடர்பான தவறுதலாக இருக்கலாம். தவறு எங்கு நிகழ்ந்தது என்று விசாரித்து விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். இறுதி வாக்காளர் பட்டியலில் ஹிந்தி இருப்பது குறித்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.
கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் கூறுகையில், ''கம்ப்யூட்டர் தொடர்பான பதிவேற்றத்தில் தவறு இருக்கலாம். இந்த தவறு விரைவில் சரி செய்யப்பட்டு புதுப்பிக்கப்பட்டு வெளியிடப்படும்,'' என்றார்.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Soumya - Trichy,இந்தியா
13-டிச-202123:34:14 IST Report Abuse
Soumya கொத்தடிமைங்களா நாலு மொழிகளை படிச்சி முன்னேர்ர வழிய பாருங்க இல்லன்னா துண்டுசீட்டு மாதிரி வனஸ் மோர் கேட்டுட்டு கைதட்டுங்க
Rate this:
Cancel
Sai - Paris,பிரான்ஸ்
13-டிச-202117:58:38 IST Report Abuse
Sai தமிழில் பெயர் போட விரும்பாதவர்க்கு "தமிழ்நாட்டில்" வாக்குரிமை எதர்க்காம்?
Rate this:
Soumya - Trichy,இந்தியா
13-டிச-202123:17:48 IST Report Abuse
Soumyaஅதை தமிழ் தமிழ்ன்னு கூவி வியாபாரம் செய்யும் டெழுங்கன் விடியலிடம் கேளு மிஸ்டர் அடிமை...
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
13-டிச-202116:48:58 IST Report Abuse
DVRR தமிழ் நாட்டின் முதல்வர் யார் தெலுங்கன் மலையாளி கன்னடம் இப்போ மீண்டும் தெலுங்கன் இவனுங்களுக்கு இந்தியில் இருக்காம் வோட்டர் ஐடி ......என்று அடிப்பது முதலில் நீ நல்லவனாக மாறு இன்னொருவனையே என்றுமே குறை சொல்லி உன் குறையை மறைக்காதே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X