தமிழகத்தில் மீண்டும் தலைதூக்கும் போதை சாக்லேட்; திருப்பூரில் 33 கிலோ பறிமுதல்

Updated : டிச 13, 2021 | Added : டிச 13, 2021 | கருத்துகள் (35) | |
Advertisement
திருப்பூர்: திருப்பூரில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த, 6,670 போதை சாக்லேட்களை போலீசார் பறிமுதல் செய்து மளிகை கடைக்காரரை கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி அருகே முதலிபாளையம் - சிட்கோ பகுதியில், குட்கா, போதை சாக்லேட் விற்பனை செய்யப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று சிட்கோ பகுதியில் உள்ள மளிகை கடையில், போதை சாக்லேட் விற்பனையை

திருப்பூர்: திருப்பூரில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த, 6,670 போதை சாக்லேட்களை போலீசார் பறிமுதல் செய்து மளிகை கடைக்காரரை கைது செய்தனர்.



latest tamil news



திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி அருகே முதலிபாளையம் - சிட்கோ பகுதியில், குட்கா, போதை சாக்லேட் விற்பனை செய்யப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று சிட்கோ பகுதியில் உள்ள மளிகை கடையில், போதை சாக்லேட் விற்பனையை கண்டறிந்தனர். அங்கு சென்று ஒரு கடையில் சோதனை செய்ததில், குட்கா மற்றும் போதை சாக்லேட்கள் இருந்தன.


latest tamil news




இது தொடர்பாக, கடையின் உரிமையாளர் சொக்கலிங்கம், 55 என்பவரை ஊத்துக்குளி போலீசார் கைது செய்தனர். கடையில் இருந்து, 33 கிலோ எடையுள்ள, 6,670 போதை சாக்லேட் மற்றும் 67 கிலோ குட்கா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். இந்த சாக்லேட், மத்திய பிரதேச மாநிலம், இந்துாரில் தயாரிக்கப்பட்டது என தெரியவந்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
14-டிச-202105:55:22 IST Report Abuse
Mani . V யார் ஆட்சியில் இருந்தாலும் இது போன்ற அவலங்கள் (குட்கா, போதை சாக்லேட்,.....) தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. சட்டம் அதையெல்லாம் ஒன்றுமே செய்ய முடிவதில்லை.
Rate this:
Cancel
Pandi Muni - Johur,மலேஷியா
13-டிச-202120:59:24 IST Report Abuse
Pandi Muni நல்லாத்தான் விடியுது போ.
Rate this:
Cancel
13-டிச-202120:33:29 IST Report Abuse
குமார் போங்க பாஸ் எங்க ஆட்சியுயில் இதெல்லாம் சகஜம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X