மல்லி ரூ.3,600; முல்லை ரூ.2,000... கிறுகிறுக்க வைக்கும் பூக்கள் விலை!

Updated : டிச 13, 2021 | Added : டிச 13, 2021 | கருத்துகள் (10) | |
Advertisement
சென்னை: பருவமழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக பூ விளைச்சல் பாதிக்கப்பட்டு, பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. நேற்று ஒரு கிலோ மல்லிகை பூ 3,600 ரூபாய்க்கும், முல்லை பூ 2,000 ரூபாய்க்கும் விற்பனைஆனது. சென்னை கோயம்பேடு சந்தைக்கு, திருவள்ளூர், ஓசூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, மதுரை, நிலக்கோட்டை, ஊட்டி, திண்டுக்கல், ஆந்திரா, பெங்களூரு ஆகிய இடங்களில் இருந்து பூக்கள்

சென்னை: பருவமழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக பூ விளைச்சல் பாதிக்கப்பட்டு, பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. நேற்று ஒரு கிலோ மல்லிகை பூ 3,600 ரூபாய்க்கும், முல்லை பூ 2,000 ரூபாய்க்கும் விற்பனைஆனது.



latest tamil news



சென்னை கோயம்பேடு சந்தைக்கு, திருவள்ளூர், ஓசூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, மதுரை, நிலக்கோட்டை, ஊட்டி, திண்டுக்கல், ஆந்திரா, பெங்களூரு ஆகிய இடங்களில் இருந்து பூக்கள் வரத்து உள்ளது.தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் நவம்பர் மாதம் பெய்த மழை மற்றும் தற்போதுள்ள பனிப்பொழிவு காரணமாக, பூக்கள் விளைச்சல் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது.இதனால் சந்தைக்கு பூக்கள் வரத்து குறைந்துள்ளது. நிலக்கோட்டை, அருப்புக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மல்லிகை பூ வரத்து உள்ளது.


latest tamil news



கார்த்திகை மாதம் அய்யப்ப பக்தர்கள் விரதம் மற்றும் முகூர்த்தங்கள், வீடு கிரஹபிரவேச நிகழ்ச்சிகள் அதிகளவில் நடத்தப்படும் என்பதால், எப்போதுமே இம்மாதம் காய்கறி, பூக்கள் விலை அதிகமாகவே இருக்கும்,ஆனால், இம்முறை மழையால் விளைச்சல் பாதிக்க, வரலாறு காணாத வகையில் விலை ஏற்றம் உள்ளது. நேற்று கோயம்பேடு பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகை பூ- 2,400 -- 3,600 ரூபாய்க்கு விற்பனையானது. முல்லை பூ- 2,000, கனகாம்பரம், 800 -- 1000, ஜாதி மல்லி 600, ரோஜா 200 -- 240 ரூபாய்க்கு விற்பனையானது.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
14-டிச-202106:44:40 IST Report Abuse
Kasimani Baskaran இனி மல்லிகைப்பூவை வாடகைக்கு எடுத்து மணந்துவிட்டு திரும்பக்கொடுக்கும் நிலை கூட வரலாம்.
Rate this:
Cancel
நந்தகோபால், நெல்லை, in பெங்களூரு அநியாய விலை
Rate this:
Cancel
நந்தகோபால், நெல்லை, in பெங்களூரு அநியாய விலை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X