குடும்பத்தில் மனைவி வலுப்பெற்றால் குழந்தை கெட்டுப்போகும்!; சி.பி.எஸ்.இ கேள்வி, பதிலால் ஆரம்பித்தது சர்ச்சை

Updated : டிச 13, 2021 | Added : டிச 13, 2021 | கருத்துகள் (58) | |
Advertisement
புதுடில்லி: சி.பி.எஸ்.இ 10ம் வகுப்பு ஆங்கிலத் தேர்வில் குடும்பத்தில் மனைவி வலுப்பெறுவதினால் பெற்றோர் என்ற கட்டமைப்பு வலுவிழந்து போவதாகவும், அதனை காணும் குழந்தைகளிடம் ஒழுங்கீனம் ஏற்பட்டுள்ளதாகவும் கேட்கப்பட்ட கேள்வி, பதிலால் சர்ச்சை வெடித்துள்ளது.சி.பி.எஸ்.இ.,யின் 10ம் வகுப்பு ஆங்கிலத் தேர்வு நேற்று முன்தினம் (டிச.,11) நடைபெற்றது. இதில், ஏ பிரிவில் கேட்கப்பட்ட ஒரு கேள்வி
CBSE, Class 10, English Paper, Receives, Backlash, Alleged, Gender Stereotyping, சிபிஎஸ்இ, 10ம் வகுப்பு, ஆங்கிலத்தாள், சர்ச்சை கேள்வி

புதுடில்லி: சி.பி.எஸ்.இ 10ம் வகுப்பு ஆங்கிலத் தேர்வில் குடும்பத்தில் மனைவி வலுப்பெறுவதினால் பெற்றோர் என்ற கட்டமைப்பு வலுவிழந்து போவதாகவும், அதனை காணும் குழந்தைகளிடம் ஒழுங்கீனம் ஏற்பட்டுள்ளதாகவும் கேட்கப்பட்ட கேள்வி, பதிலால் சர்ச்சை வெடித்துள்ளது.

சி.பி.எஸ்.இ.,யின் 10ம் வகுப்பு ஆங்கிலத் தேர்வு நேற்று முன்தினம் (டிச.,11) நடைபெற்றது. இதில், ஏ பிரிவில் கேட்கப்பட்ட ஒரு கேள்வி பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, கீழ்கண்ட சிறுகுறிப்பை படித்துவிட்டு, குறிப்புக்கான சரியான தலைப்பை தேர்ந்தெடுக்க வேண்டும் என கேள்வி கேட்கப்பட்டிருந்தது. அந்த குறிப்பில், இல்வாழ்க்கையில் மனைவிமார்கள் வலுப்பெறுவதினால் பெற்றோர் என்ற கட்டமைப்பு வலுவிழந்து போகிறது. முன்பெல்லாம் கணவனுக்கு மனைவி கீழ்ப்படிந்து நடந்த நிலையில் தற்போது அவ்வாறு இல்லாததால் அதைக் காணும் குழந்தைகள் மற்றும் வீட்டுப் பணியாளர்களிடம் ஒழுங்கீனம் ஏற்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சர்ச்சை கேள்வி நீக்கப்பட்டது; மாணவர்களுக்கு முழு மதிப்பெண் CBSE Controversial Questions Remove

latest tamil newsஅதற்கான பதில்களாக 'குழந்தைகளின் ஒழுங்கீனத்திற்கு யார் காரணம்?, வீட்டில் ஒழுக்கம் சீர்கெட என்ன காரணம்?, வீட்டில் குழந்தைகள் பணியாளர்களுக்கான இடம், குழந்தைகள் உளவியல்,' என்ற தலைப்புகளுள் ஒன்றை தேர்ந்தெடுப்பது போல் கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காங்கிரஸ் எம்.பி., ராகுல் தெரிவித்துள்ளதாவது: இதுவரை பெரும்பாலான சி.பி.எஸ்.இ தாள்கள் கடினமாகவே இருந்துள்ளன. ஆங்கிலத் தாளில் உள்ள புரிதல் பத்தி அருவருக்கத்தக்கதாக உள்ளது. இளைஞர்களின் மன உறுதியையும் எதிர்காலத்தையும் அழிக்க ஆர்.எஸ்.எஸ்., -பா.ஜ., மேற்கொள்ளும் வழக்கமான உத்திதான் இது. குழந்தைகளே, உங்களுடைய சிறந்த பங்களிப்பைச் செய்யுங்கள். கடின உழைப்பே பலன் தரும். வெறுப்புணர்வு அல்ல. இவ்வாறு ராகுல் தெரிவித்துள்ளார்.


latest tamil news
சோனியா காட்டம்

இந்த விவகாரம் குறித்து லோக்சபாவில் காங்கிரஸ் தலைவர் சோனியா பேசுகையில், 'சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு ஆங்கிலத்தாளில் கேட்கப்பட்ட இந்த கேள்வியால் மாணவர், பெற்றோர், ஆசிரியர் ஆகியோர் கவலை தெரிவித்துள்ளனர். அவர்களின் குரலாக இதனை படிக்கிறேன். மத்திய கல்வி அமைச்சகமும், சிபிஎஸ்இ.,யும் உடனடியாக இந்த கேள்வியை வாபஸ் பெறுவதுடன், மன்னிப்பு கேட்க வேண்டும். மேலும் இது போன்ற தவறுகள் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதிசெய்ய முழுமையான மறுபரிசீலனை நடத்த வேண்டும்,' எனப் பேசினார்.


கேள்வி நீக்கம்:


இந்த கேள்விக்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்த நிலையில், கேள்வி நீக்கப்படுவதாகவும், அனைத்து மாணவர்களுக்கும் கேள்விக்குரிய முழு மதிப்பெண் வழங்கப்படும் எனவும் சி.பி.எஸ்.இ தெரிவித்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (58)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மிளிர்வன் - AKL,நியூ சிலாந்து
14-டிச-202111:26:56 IST Report Abuse
மிளிர்வன் சமுதாய..., குடும்ப அமைப்பு வெகுவாக மாறியுள்ளது.. ஆண்களும் பெண்களும் அதற்கேற்றாற்போல தகவமைத்துக்கொள்கிறார்கள்.. முந்தைய கால மனசெழுமை கொண்ட பெண்களும் ஆண்களும் இன்றைய காலத்தில் உருவாவதில்லை. அதற்கான சூழலும் இல்லை.. SUCH PEOPLE ARE NOT MADE ANYMORE.. அதையெல்லாம் யோசிப்பது பசித்தவன் பழங்கணக்கு பார்ப்பது போலத்தான்.. எது எப்படியோ.. இன்றைய கால குழந்தைகளுக்கு பழைய இனிய வாழ்க்கை கற்பனைக்கும் எட்டாததுதான்.. அசுர தொழில்நுட்ப வளர்ச்சி முக்கிய காரணமாக தோன்றுகிறது..
Rate this:
Cancel
Svs Yaadum oore - தொண்டை நாடு , தமிழக ஒன்றியம் , பாரதம் , ஹிந்துஸ்தான் .,இந்தியா
14-டிச-202106:28:37 IST Report Abuse
Svs Yaadum oore //...அடுப்பூதும் பெண்ணிற்கு படிப்பெதற்கென்று கூறியவர்கள் கையில் அதிகாரம் வந்தால் வேறென்ன செய்வார்கள் ...//...வேறென்ன செய்வாங்க? ராமசாமி சொன்ன மாதிரி மதுரையில் பெண்களுக்கு தனியாக பார் ஆரம்பித்து பெண்களுக்கு சம உரிமை கொடுப்பானுங்க .
Rate this:
periasamy - Doha,கத்தார்
14-டிச-202118:32:19 IST Report Abuse
periasamyஅதென்னென தனியாக ஏன் சமதர்மம் கூடாது?...
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
14-டிச-202106:03:28 IST Report Abuse
Mani . V இதெல்லாம் எங்கே கொண்டு போய் நிறுத்தும்? என்றே தெரியவில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X