தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் படம்; ஆட்சேபித்தவருக்கு கோர்ட் 'குட்டு'

Updated : டிச 13, 2021 | Added : டிச 13, 2021 | கருத்துகள் (39) | |
Advertisement
கொச்சி: கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் படம் இடம்பெற்றதற்கு எதிராக ஆட்சேபனைத் தெரிவித்து வழக்கு தொடர்ந்த மனுதாரருக்கு கொச்சி நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது.கேரளா மாநிலத்தைச் சேர்ந்த மூத்த குடிமகன் பீட்டர் மயிலிபரம்பில் இரு 'டோஸ்' கொரோனா தடுப்பூசி செலுத்தி உள்ளார். அதற்கான சான்றிதழில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் இடம் பெற்றுள்ளது. இதை
Vaccine Certificate, KeralaHC, Modi Image, Why Are You, Ashamed, PM, கேரளா, கொச்சி, உயர்நீதிமன்றம், கொரோனா, கோவிட், தடுப்பூசி, சான்றிதழ், பிரதமர், மோடி, படம்

கொச்சி: கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் படம் இடம்பெற்றதற்கு எதிராக ஆட்சேபனைத் தெரிவித்து வழக்கு தொடர்ந்த மனுதாரருக்கு கொச்சி நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது.

கேரளா மாநிலத்தைச் சேர்ந்த மூத்த குடிமகன் பீட்டர் மயிலிபரம்பில் இரு 'டோஸ்' கொரோனா தடுப்பூசி செலுத்தி உள்ளார். அதற்கான சான்றிதழில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் இடம் பெற்றுள்ளது. இதை எதிர்த்து கொச்சி உயர் நீதிமன்றத்தில் அவர் வழக்கு தாக்கல் செய்தார். மனுவில், 'நான் பணம் செலுத்தி தடுப்பூசி போட்டுக் கொண்டேன். அதற்கான சான்றிதழில் என் தனிப்பட்ட விபரங்கள் மட்டுமே இருக்கலாம். பிரதமர் மோடியின் புகைப்படம் இருப்பது தனிநபரின் உரிமைகளுக்குள் தலையிடுவதாக உள்ளது' எனக் கூறியிருந்தார். இந்த மனு தொடர்பாக மத்திய, மாநில அரசுகளின் நிலைப்பாடு என்ன என்பதை தெரிவிக்க வேண்டும் எனக் கூறி 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டது.


latest tamil news


இன்று (டிச.,13) கொச்சி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையின் போது நீதிபதி பிவி.குன்ஹிகிருஷ்ணன் கூறியதாவது: அவர் நமது நாட்டு பிரதமர், அமெரிக்க பிரதமர் அல்ல. மக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால் மோடி ஆட்சிக்கு வந்துள்ளார், குறுக்குவழிகள் மூலம் அல்ல. நீங்கள் ஏன் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பெயரில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரிகிறீர்கள்?. அந்த நிறுவனத்தில் இருந்து நேருவின் பெயரை நீக்க வேண்டும் என்ற நிலைபாட்டை நீங்கள் ஏன் எடுக்கவில்லை?.

மோடி நமது பிரதமர். உங்களுக்கு அரசியல் வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், சான்றிதழில் பிரதமரின் புகைப்படத்தில் என்ன பிரச்னை இருக்கிறது என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை? சான்றிதழில் உங்கள் பிரதமரை பற்றி நீங்கள் ஏன் வெட்கப்படுகிறீர்கள்? சுமார் 150 கோடி மக்களும் இது தொடர்பாக எந்தக் குரலும் எழுப்பாத நிலையில் ஏன் இப்படிப் புகார் கூறுகிறீர்கள்?. இவ்வாறு மனுதாரரிடம் நீதிபதி சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M Ramachandran - Chennai,இந்தியா
13-டிச-202123:14:20 IST Report Abuse
M  Ramachandran கேரள கம்யூனிஸ்டு படம் இருந்தால் தேவலை அல்லது அவர் வனஙகு யேஆசு கிருஸ்து படம் ஓட்டவேண்டுமென்ற அவர் அவருக்கு.
Rate this:
Cancel
RAJ - dammam,சவுதி அரேபியா
13-டிச-202123:09:08 IST Report Abuse
RAJ peter, shame on you.
Rate this:
Cancel
morlot - Paris,பிரான்ஸ்
13-டிச-202122:55:57 IST Report Abuse
morlot In foreign countries like france,there is no photo at all. It is better to prin the photo of concerne person,to check on case if there is any fraud.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X