பணஜி :''கோவாவில் பா.ஜ.,வை வீழ்த்த வேண்டும் என விரும்புவோர் திரிணமுல் காங்., கட்சிக்கு ஆதரவளிக்க வேண்டும்,'' என, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வேண்டுகோள் வைத்தார்.
கோவாவில் முதல்வர் பிரமோத் சாவந்த் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இங்கு திரிணமுல் காங்., தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தலைநகர் பணஜியில் நேற்று திரிணமுல் காங்., கட்சியின் பொதுக்கூட்டம் நடந்தது. இதில், மேற்கு வங்க முதல்வரும், கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி பேசியதாவது:
கோவாவில் பா.ஜ.,வை வீழ்த்த வேண்டும் என விரும்புவோர் திரிணமுல் காங்., கட்சிக்கு ஆதரவளிக்க வேண்டும்.இங்கு ஆட்சி புரிந்தவர்கள் மக்களுக்காக எதையும் செய்யவில்லை என்பதை உணர்ந்தோம். பா.ஜ.,வுக்கு எதிராக இதுவரை யாரும் குரல் கொடுக்கவில்லை. எனவே அதற்காக நாங்கள் இப்போது வந்துள்ளோம்.இவ்வாறு அவர் பேசினார்.
விசாரிக்க மறுப்பு
மேற்கு வங்க தலைநகர் கோல்கட்டாவில் வரும் 19ல் மாநகராட்சித் தேர்தல் நடைபெற உள்ளது.
தேர்தல் முறையாக நடப்பதை உறுதிப்படுத்த மத்திய பாதுகாப்புப் படையினரை ஓட்டுச்சாவடிகளில் நிறுத்தக்கோரி, மாநில பா.ஜ., சார்பில், உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.
எனினும் இந்த மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் நேற்று மறுத்தது. கோல்கட்டா உயர் நீதிமன்றத்தில் முறையிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மம்தா உறவினர் போட்டி
கோல்கட்டா மாநகராட்சி தேர்தலில் மம்தா பானர்ஜி சகோதரர் கார்த்திக்கின் மனைவியான கஜாரி பானர்ஜி, திரிணமுல் காங்., சார்பில் போட்டியிட உள்ளார். 1993ம் ஆண்டு முதல் இக்கட்சியில் இருக்கும் இவர், தேர்தலில் போட்டியிடுவது இதுவே முதன்முறை.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE