புதுடில்லி : பொதுத் துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் திட்டத்தை எதிர்த்து வரும், 16 மற்றும் 17ல் நாடு தழுவிய போராட்டம் நடத்த வங்கிகள் கூட்டமைப்பு திட்டமிட்டு உள்ளது.

யு.எப்.பி.யு., எனப்படும் வங்கி சங்கங்களின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பு என்ற அமைப்பு வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: பொதுத் துறை வங்கிகள் மூலம், 13 தனியார் நிறுவனங்களுக்கு, 4.86 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டு உள்ளது. அந்தக் கடன் முறையாக செலுத்தப்படாததால், இந்த வங்கிகளுக்கு, 2.85 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஆனால், நஷ்டத்தில் இயங்கும் தனியார் வங்கி சாரா நிதி நிறுவனங்களை மீட்க அரசு முயற்சித்து வருகிறது.அரசின் பல்வேறு திட்டங்களில் பங்கேற்று, பொதுத் துறை வங்கிகள் ஆதரவு அளித்து வருகின்றன. ஆனால், பொதுத் துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் முயற்சி நடக்கிறது.

இது தொடர்பான மசோதாவை பார்லி., தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளனர். இதை எதிர்த்து, வரும், 16, 17ல் நாடு தழுவிய அளவில், 'ஸ்டிரைக்'கில் ஈடுபட உள்ளோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE