டலுார்-வடகிழக்கு பருவமழை தீவிரம் மற்றும் வெள்ளத்தால் பயிர்கள் நஷ்டமானதற்கு இழப்பீடு வழங்குவது குறித்து தமிழக அரசின் அறிவிப்பு வெளியாகுமா என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
இதனால் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு படையெடுத்து மனு அளித்தனர். நடப்பு ஆண்டு வடகிழக்குப் பருவ மழை அக்டோபர் கடைசி வாரம் துவங்கியது. வங்கக் கடலில் அடுத்தடுத்த காற்றழுத்த தாழ்வு நிலையால் மழை வெளுத்து வாங்கியது. விவசாய நிலத்தில் 3 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கி பயிர்கள் அழுகின. வடகிழக்கு பருவ காற்றின் மூலம் நமக்கு இயல்பாக கிடைக்க வேண்டிய மழைக்கு 80 சதவீதத்திற்கு மேல் கூடுதலாக பெய்தது. கன மழையாலும், பெண்ணையாற்றில் வெள்ளப் பெருக்காலும் பல இடங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. நடவு செய்த சம்பா நெற் பயிர்கள் நீரில் மூழ்கி சேதமாகின. 10 ஆயிரம் வீடுகளில் தண்ணீர் புகுந்தது. பல இடங்களில் வீடுகள் இடிந்து விழுந்தன. கிராம சாலைகளில் ஜல்லிகள் பெயர்ந்து போக்குவரத்திற்கு லாயக்கற்றவையாக மாறியுள்ளன.மத்திய குழு பார்வை கடலுார் அருகே உள்ள பெரிய கங்கணாங்குப்பம், பெரியப்பட்டு அருகே உள்ள பூவாலை ஆகிய இடங்களை மத்திய குழு பார்வையிட்டது. வெள்ள பாதிப்புகள் குறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் மத்திய குழுவிடம் அறிக்கை சமர்ப்பித்தனர். கடலுார் மாவட்டத்தில் மொத்தமுள்ள 8800 கி.மீ., சாலைகளில் மழை, வெள்ளத்தால் 350 கி.மீ., பாதிக்கப்பட்டன. கன மழை காரணமாக 62 கட்டடங்கள் இடிந்துள்ளன. மாவட்டத்தில் 3 பாலங்கள் சேதமடைந்துள்ளன.
சாகுபடி செய்திருந்த 4300 ஏக்கர் சம்பா நெல் தண்ணீரில் மூழ்கி முழுவதும் அழுகின. வெள்ளத்தால் 3000 ஏக்கர் விளை நிலங்கள் குண்டும் குழியுமாக பாதித்தன. மேலும் 3,000 குடிசைகள் முழுவதும் சேதமாகின. நகரம் மற்றும் கிராமங்களில் 950 கால்நடைகள் இறந்துள்ளன. விவசாயிகள் வாக்குவாதம் வெள்ள நிவாரணம் குறித்து தமிழக அரசிடம் இருந்து இது வரை அறிவிப்பு ஏதும் வராததால் விவசாயிகள் கவலையுடன் எதிர்பார்த்துள்ளனர்.
நேற்று கடலுாரில் நடந்த பொது மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் காட்டுக்கூடலுார் பகுதி விவசாயிகள் பாதித்த பயிர்களின் போட்டோவை எடுத்து வந்து பயிர் காப்பீட்டு தொகை மற்றும் இழப்பீடு கேட்டு கலெக்டர் பாலசுப்ரமணியத்திடம் மனு கொடுத்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதற்கு கலெக்டர் விரைவில் இழப்பீடு தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement