காஞ்சிபுரம் : ''அறநிலையத் துறை கவர்ச்சிகரமான வேலையை விட்டு, அடிப்படை வேலையை செய்ய வேண்டும்,'' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறினார்.
உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில், காசி விஸ்வநாதர் கோவிலில் பிரதமர் மோடி வழிபடும் நிகழ்ச்சியை, காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் பக்தர்கள் நேரடியாக பார்க்க, நேற்று காலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது .பா.ஜ., சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சியில் அண்ணாமலை பங்கேற்றார்.

பின், நிருபர்களிடம் அவர் கூறியதாவது: ஹிந்து அறநிலையத் துறை, சினிமாவில் வருவது போல், 'மீடியா' வாயிலாக கவர்ச்சிகரமான வேலையை செய்கிறது. இதை விடுத்து, அடிப்படை வேலையை செய்ய வேண்டும். சேகர்பாபு குங்குமம், திருநீறும் வைத்து மக்களை ஏமாற்ற வேண்டாம். அவரது கடந்த காலம், அனைவருக்கும் தெரியும்.
நேர்மையாக பேசும்போது, பதிலும் நேர்மையாக கிடைக்கும். தி.மு.க., தொண்டர்கள் புகார் கொடுப்பர். அதை மாவட்ட செயலர்கள் வாயிலாக, போலீசார் வழக்கு பதிவு செய்வர். பா.ஜ., சார்பில், 300க்கும் மேற்பட்ட புகார் கொடுத்து உள்ளோம்.
மறைந்த தலைமை தளபதி பிபின் ராவத் பற்றி, மோசமான பதிவுகள் வெளியிட்ட தி.மு.க., வினரை பாரபட்சமின்றி கைது செய்ய வேண்டும். டி.ஜி.பி., என்பவரை வைத்து, வேறு யாரோ வேலையை செய்கின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.சென்னை உட்பட தமிழகம் முழுதும் உள்ள முக்கிய கோவில்களில் பா.ஜ., நிர்வாகிகள் தரிசனம் செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE