புதிய வேலைவாய்ப்பு திட்டம்: தமிழகத்துக்கு இரண்டாம் இடம்

Updated : டிச 14, 2021 | Added : டிச 14, 2021 | கருத்துகள் (8)
Advertisement
புதுடில்லி : மத்திய அரசின் 'ஆத்ம நிர்பார் பாரத் ரோஜ்கர் யோஜனா' திட்டத்தின் கீழ் பலன் அடைந்த மாநிலங்களில் மஹாராஷ்டிரா முதல் இடத்திலும், தமிழகம் இரண்டாம் இடத்திலும் உள்ளன.ஆத்ம நிர்பார் பாரத் ரோஜர் யோஜனா திட்டத்தின் கீழ், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இதன்படி புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நிறுவனங்களுக்கு மானியம் அளிக்கப்
Aatmanirbhar Bharat Rojgar Yojana, ABRY, Tamil Nadu

புதுடில்லி : மத்திய அரசின் 'ஆத்ம நிர்பார் பாரத் ரோஜ்கர் யோஜனா' திட்டத்தின் கீழ் பலன் அடைந்த மாநிலங்களில் மஹாராஷ்டிரா முதல் இடத்திலும், தமிழகம் இரண்டாம் இடத்திலும் உள்ளன.



ஆத்ம நிர்பார் பாரத் ரோஜர் யோஜனா திட்டத்தின் கீழ், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இதன்படி புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நிறுவனங்களுக்கு மானியம் அளிக்கப் படுகின்றது. இந்த மானியம் ஓய்வூதிய பங்களிப்பில் பணியாளர்களுக்கும், வேலை வழங்கும் நிறுவனங்களுக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படுகின்றன.

இதன்படி இ.பி.எப்.ஓ., திட்டத்தில் பணியாளர்கள் பங்களிப்பாக 12 சதவீதம், நிறுவனத்தின் பங்களிப்பாக 12 சதவீதம் என 24 சதவீதம் இரண்டு ஆண்டு களுக்கு மானியமாக வழங்கப்படுகின்றது. இத்திட்டத்தின் கீழ் பலன் அடைந்த மாநிலங்கள் குறித்து, மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை இணை அமைச்சர் ராமேஸ்வர் தெலி நேற்று லோக்சபாவில் கூறியதாவது:


latest tamil news



ஆத்ம நிர்பார் பாரத் ரோஜர் யோஜனா திட்டத்தில், 2021 டிச., 4 வரையில் மஹாராஷ்டிராவில் ஆறு லட்சத்து 49 ஆயிரத்து 560 பேர் பலன் அடைந்து உள்ளனர். தமிழகத்தில் ஐந்து லட்சத்து 35 ஆயிரத்து 615 பேரும், குஜராத்தில் நான்கு லட்சத்து 44 ஆயிரத்து 741 பேரும் பலன் அடைந்துள்ளனர். தமிழகத்தில் 12 ஆயிரத்து 803 நிறுவனங்களின் புதிய ஊழியர்களுக்கு, 300.46 கோடி ரூபாய் நிதி அளிக்கப்பட்டுள்ளது. பயனடைந்தோரில் மஹாராஷ்டிரா மற்றும் தமிழகம் முறையே முதல் மற்றும் இரண்டாம் இடம் வகிக்கின்றன.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
14-டிச-202112:22:01 IST Report Abuse
ஆரூர் ரங் மத்திய அரசின் இந்த நிதி உதவியையும் வாங்கித் தின்றுவிட்டு மோடி ஒழிக என்று கோஷம் போடும் நன்றி 😝கெட்ட இளைஞர்கள் அதிகம் உள்ளது தமிழகத்தில்தான். 2 தமிழ்நாட்டை விட மூன்றில் ஒரு பங்கு சிறிய குஜராத் கூட அதிக பலன் பெற்றுள்ளது . ஆனால் அது நம்🤔 கண்ணில்படாது. ஏனெனில் இங்கு மூளை வளர்ச்சி இல்லாத பாமரர்கள் தான் அதிகம்
Rate this:
Cancel
Apposthalan samlin - sulaymaniyah,ஈராக்
14-டிச-202110:38:47 IST Report Abuse
Apposthalan samlin உள்ளே கிளறினால் ஊழல் தான் மிஞ்சும் . டோல் கேட் ஊழல் புதுசா இருக்கிறது .
Rate this:
Cancel
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
14-டிச-202109:04:53 IST Report Abuse
பாமரன் அய்யய்யோ... பூலோக சொர்க்கம் ஒன்னு குசராத்து அப்புறம் தேர்தல் வைபவத்தை நோக்கி இருக்கும் ரெண்டு உபி லிஸ்டில் டாப்ல தானே இருந்திருக்கனும்...??? எல்லாத்துக்கும் காரணம் காங் நேரு டீம்காதான்... கமான் உண்ட வீட்டுக்கு ரெண்டகம் பார்ட்டீஸ்....🙄
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X