மூன்றாண்டுக்கு தேவையான குடிநீர் வீணாக கடலில் கலப்பு; சென்னையில் புதிய நீர்த்தேக்கங்கள் உருவாக்குவது அவசியம்!

Updated : டிச 14, 2021 | Added : டிச 14, 2021 | கருத்துகள் (26)
Advertisement
சென்னை: சென்னையின் ஒரு மாத குடிநீர் தேவை, 1 டி.எம்.சி., என்ற நிலையில், வடகிழக்கு பருவ மழையால் கிடைத்த உபரி நீர், இதுவரை 36 டி.எம்.சி., வீணாக கடலில் கலந்தது தெரியவந்துள்ளது. இதை புதிய நீர்த்தேக்கங்கள் கட்டமைத்து சேமித்திருந்தால், கோடையில் குடிநீர் தட்டுப்பாட்டையும், தற்போதைய வெள்ள பாதிப்புக்களையும் தடுத்திருக்கலாம். இதனால் புதிய நீர்த்தேக்கங்கள் அமைக்கும் முயற்சியை அரசு


சென்னை: சென்னையின் ஒரு மாத குடிநீர் தேவை, 1 டி.எம்.சி., என்ற நிலையில், வடகிழக்கு பருவ மழையால் கிடைத்த உபரி நீர், இதுவரை 36 டி.எம்.சி., வீணாக கடலில் கலந்தது தெரியவந்துள்ளது.

இதை புதிய நீர்த்தேக்கங்கள் கட்டமைத்து சேமித்திருந்தால், கோடையில் குடிநீர் தட்டுப்பாட்டையும், தற்போதைய வெள்ள பாதிப்புக்களையும் தடுத்திருக்கலாம். இதனால் புதிய நீர்த்தேக்கங்கள் அமைக்கும் முயற்சியை அரசு உடனடியாக துவங்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.

வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே கணித்ததை போல, நடப்பாண்டில் வடகிழக்கு பருவமழை வழக்கத்தை காட்டிலும் கூடுதலாக கொட்டித் தீர்த்தது.சென்னையில் அக்.,25 முதல் தொடர் கன மழை பெய்தது.

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்டங்களில் பெய்த கன மழையில், 90 சதவீத நீர்நிலைகள் நிரம்பி, உபரி நீர் வெளியேறியதாலும், நீர்பிடிப்பு பகுதகளில் இருந்து வெளியேறிய மழைநீராலும் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் முழுவதுமாக நிரம்பின.

மழை தொடர்ந்து நீடித்ததால், குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல், சோழவரம், பூண்டி ஏரிகள் நிரம்பி, உபரி நீர் திறக்கப்பட்டது.latest tamil newsஇந்த வகையில், அக்டோபர் முதல் தற்போது வரை, நான்கு குடிநீர் ஏரிகளிலும் சேர்த்து 35.72 டி.எம்.சி., உபரி நீர் வீணாக வெளியேற்றப்பட்டு கடலில் கலந்துள்ளது. புழல் 3.3; செம்பரம்பாக்கம் 3.64; சோழவரம் 1.08; பூண்டி 3.23 டி.எம்.சி., என, நான்கு ஏரிகளிலும் சேர்த்து, 11 டி.எம்.சி., அளவிற்கு மட்டுமே நீரை தேக்கி வைக்க முடியும்.

ஆந்திர அரசு, தெலுங்கு கங்கை ஒப்பந்தப்படி வழங்கும் 12 டி.எம்.சி., நீரையும், இந்த நீர்த்தேக்கங்களில் தான் சேமித்து வைக்க வேண்டும். இந்த நீர், இரு தவணையாக பகிர்ந்து அளிக்கப்படுவதால், வறட்சி காலங்களில் சேமிக்க முடிகிறது.

சென்னையின் ஒரு மாத குடிநீர் தேவை, 1 டி.எம்.சி., என்ற நிலையில், நான்கு ஏரிகளின் நீரை வைத்து, 11 மாத தேவையை மட்டுமே பூர்த்தி செய்ய முடியும். குடிநீர் பற்றாக்குறையை தீர்ப்பதற்கா, கடல் நீரை குடிநீராக்கும் திட்டம், வீராணம், போரூர் ஏரி நீர் ஆகியவை, பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

கடந்த 10 ஆண்டு அ.தி.மு.க., ஆட்சியில், திருவள்ளூர் மாவட்டம், கண்ணன்கோட்டை, தேர்வாய்கண்டிகை ஏரிகளை இணைத்து, 0.5 டி.எம்.சி., கொள்ளளவு உடைய தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கம் உருவாக்கப்பட்டது. தற்போது, இந்த நீர்த்தேக்கமும் முழு கொள்ளளவில் நிரம்பி உள்ளது.


latest tamil newsஅரசு முன்வரவில்லைகாஞ்சிபுரம் மாவட்டம், ஒரத்துார் அருகே, புதிய நீர்த்தேக்கம் அமைக்கும் பணி சமீபத்தில் துவங்கப்பட்டு, ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. ஏற்கெனவே நீர்த்தேக்கங்கள் உள்ள பகுதிகளுக்கு அருகாமை யிலும், உபரிநீர் செல்லும் பாதையை ஒட்டிய தடங்களிலும், பெரிய அளவிலான புதிய நீர்த்தேக்கங்களை கட்டமைக்க அரசு முன்வரவில்லை.

இதன் காரணமாகவே, சென்னையின் மூன்றாண்டு குடிநீர், ஒரே மாதத்தில் கடலில் கலந்துள்ள வேதனையான சம்பவம் நடப்பாண்டு நிகழ்ந்துள்ளது.அவசியத்தை உணர்ந்து, இனியாவது புதிய நீர்த்தேக்கங்கள் உருவாக்க, அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

பூண்டி தான் டாப்!ஏரி உபரிநீர் அளவுபூண்டி- 27.40 டி.எம்.சி.,செம்பரம்பாக்கம்- 3.70 டி.எம்.சி.,சோழவரம்- 1.55 டி.எம்.சி.,புழல்- 3.07 டி.எம்.சி.,

Advertisement
வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R chandar - chennai,இந்தியா
15-டிச-202112:38:16 IST Report Abuse
R chandar All memorial hall and sping money for statues r waster court should stop those activity and do construct of dam, construct of hydro energy ,and solar plant and name them by leaders name for whom memorial propose to build
Rate this:
Cancel
14-டிச-202119:44:21 IST Report Abuse
விடியலை தேடி அலையும் தமிழன் அப்புறம் எங்க அரவி பிராண்டு வாட்டர் baatillgalai எப்படி விற்பது என்று கழக அமைச்சர் யோசித்தது தான் மிச்சம்
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
14-டிச-202119:02:48 IST Report Abuse
Bhaskaran Paaladaintha kuvaarikalil malaineerai semikalaam .aanaal kudineer laarikaarargalidam kaasai vangi seyalpadum athigaarikal irukumvarai athellam kanavu thaan
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X