சமூக வலைதள கணக்குகள்: மாணவியர் வெளியேற அறிவுரை

Updated : டிச 14, 2021 | Added : டிச 14, 2021 | கருத்துகள் (6) | |
Advertisement
உடுமலை : 'சமூக வலைதள கணக்குகளில் இருந்து, அனைத்து மாணவியரும் வெளியேற வேண்டும்' என, திருப்பூர் மாவட்ட பள்ளிகளில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.சமீபகாலமாக, பள்ளி மாணவ - மாணவியர் இடையே 'ஸ்மார்ட் போன்' பயன்பாடு அதிகரித்துள்ளது. வீடுகளில் மட்டுமின்றி, பொது இடங்களிலும் தன்னையே அறியாத அளவிற்கு, இணையதளத்தில் மூழ்கி விடுகின்றனர். சிலர், கல்வி மற்றும் அறிவு சார்ந்த தேடல்கள்
Social Media, students,Facebook,fb

உடுமலை : 'சமூக வலைதள கணக்குகளில் இருந்து, அனைத்து மாணவியரும் வெளியேற வேண்டும்' என, திருப்பூர் மாவட்ட பள்ளிகளில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

சமீபகாலமாக, பள்ளி மாணவ - மாணவியர் இடையே 'ஸ்மார்ட் போன்' பயன்பாடு அதிகரித்துள்ளது. வீடுகளில் மட்டுமின்றி, பொது இடங்களிலும் தன்னையே அறியாத அளவிற்கு, இணையதளத்தில் மூழ்கி விடுகின்றனர். சிலர், கல்வி மற்றும் அறிவு சார்ந்த தேடல்கள் தவிர்த்து, தேவையற்ற விஷயங்களில் நேரத்தை செலவிடுகின்றனர்.


latest tamil news



இத்தகைய செயல்களுக்கு கடிவாளம் போடும் வகையில், திருப்பூர் மாவட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, '18 வயதுக்கு உட்பட்ட மாணவியர் எவருமே, சமூக வலைதள பக்கங்களில் புதிதாக கணக்கு துவங்கக் கூடாது. ஏற்கனவே துவங்கி இருந்தால், அதில் இருந்து உடனே வெளியேற வேண்டும்' என, எச்சரிக்கப்பட்டு வருகிறது.

கல்வித் துறை அதிகாரிகள் கூறுகையில், 'பள்ளிகளில் பாலியல் வன்முறை சம்பவங்களை தடுக்க, பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மாணவ - மாணவியர் சமூக வலைதள பயன்பாட்டை தவிர்க்க வேண்டும். தங்களது படங்களை பதிவிடக் கூடாது. சமூக வலைதளங்களில் இருந்து வெளியேற வேண்டும் என, தலைமை ஆசிரியர்கள் வாயிலாக அறிவுறுத்தப்பட்டு வருகிறது' என்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jaya K - Sathyamangalam,இந்தியா
14-டிச-202116:05:04 IST Report Abuse
Jaya K குறிப்பிட்ட வயதுக்கு கீழ் உள்ள மாணவர்களின் நலன் கருதி அவர்கள் சமூக வலைத்தளங்களில் கணக்கு வைத்துக்கொள்ள கூடாது என்று வலியுறுத்துவது சாத்தியமா என்று தெரியாவிட்டாலும் ஒருவகையில் நியாயமானதே ஆனால் குறிப்பாக மாணவிகள் மட்டுமே கணக்கு வைத்துக்கொள்ள கூடாது என்று வலியுறுத்துவது கற்கால மனநிலையை பிரதிபலிக்கிறது. ஆண்கள் மட்டுமே உயர்ந்தவர்கள் என்ற கருத்தை வலிந்து திணிக்கும் இச்செயல் சமூகத்தில் சமநிலை பாதிப்படைவதை ஊக்குவிக்கும். அதுவும் கல்வித்துறையே இச்செயலில் ஈடுபடுவது மிகுந்த மனவேதனை அளிக்கிறது.
Rate this:
Cancel
14-டிச-202112:31:36 IST Report Abuse
Ganesan Madurai 0 ….
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
14-டிச-202112:29:27 IST Report Abuse
raja good move...super
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X