இன்றைய கிரைம் ரவுண்ட் அப்: சினிமா இயக்குனர் புளு சட்டை மாறன் போலீசில் புகார்| Dinamalar

இன்றைய கிரைம் ரவுண்ட் அப்: சினிமா இயக்குனர் 'புளு சட்டை' மாறன் போலீசில் புகார்

Updated : டிச 14, 2021 | Added : டிச 14, 2021 | கருத்துகள் (2) | |
தமிழக நிகழ்வுகள் மனநலம் பாதித்தவரை தாக்கிய பஸ் கண்டக்டர்விருத்தாசலம்-விருத்தாசலம் பஸ் நிலையத்தில் மனநலம் பாதித்த நபரை, தனியார் பஸ் டிரைவர், கண்டக்டர் கண் மூடித்தனமாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.கடலுார் மாவட்டம் விருத்தாசலம் பஸ் நிலையத்தில் நின்ற தனியார் பஸ்சில் நேற்று முன்தினம் இரவு 40 வயது மனநலம் பாதித்த நபர் ஏறியுள்ளார்.தமிழக நிகழ்வுகள்
மனநலம் பாதித்தவரை தாக்கிய பஸ் கண்டக்டர்விருத்தாசலம்-விருத்தாசலம் பஸ் நிலையத்தில் மனநலம் பாதித்த நபரை, தனியார் பஸ் டிரைவர், கண்டக்டர் கண் மூடித்தனமாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

கடலுார் மாவட்டம் விருத்தாசலம் பஸ் நிலையத்தில் நின்ற தனியார் பஸ்சில் நேற்று முன்தினம் இரவு 40 வயது மனநலம் பாதித்த நபர் ஏறியுள்ளார். அவரிடம் கண்டக்டர் டிக்கெட் கேட்டார். இதனால் அவர் கண்டக்டரை தாக்கியுள்ளார். ஆத்திர மடைந்த கண்டக்டர், டிரைவர் சேர்ந்து மன நலம் பாதித்தவரை சரமாரியாக தாக்கினர்.

மேலும், பஸ் நிலையத்தில் இருந்து இழுத்துச் சென்று புறக்காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில் அவர் மனநலம் பாதித்தவர் என உறுதியானது. அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் அனுப்பினர். மன நலம் பாதித்தவரை கண்டக்டர், டிரைவர் தாக்கி, இழுத்துச் செல்லும் வீடியோ சமூக வலை தளங்களில் பரவி வருகிறது.


டிரைவரை தாக்கிய தாய், மகன் கைதுபுவனகிரி -சேத்தியாத்தோப்பு அடுத்த தரசூர் கிராமத்தில் முன்விரோதம் காரணமாக டிரைவரை இரும்பு பைப்பால் தாக்கி கொலை செய்ய முயன்ற தாய், மகனை போலீசார் கைது செய்தனர்.கடலுார் மாவட்டம் , சேத்தியாத்தோப்பு அடுத்த தரசூர் வடக்குத்தெருவைச் சேர்ந்தவர் வீரபாண்டியன், 33; டிரைவர். இவர் வேலைக்கு செல்லாமல் வீட்டிலிருந்தார்.

அதே ஊரைச் சேர்ந்த 15 வயது சிறுமியை காதலித்தார். இது சிறுமியின் தாய், 17 வயது அண்ணணுக்கு பிடிக்கவில்லை. இதனால் இரு தரப்பினருக்கும் முன் விரோதம் இருந்தது. நேற்று முன்தினம் பாண்டியன் நடுத்தெருவில் உள்ள குளத்தருகே இருந்த போது அங்கு வந்த சிறுமியின் தாய் மற்றும் அண்ணன் ஆபாசமாக திட்டி இரும்பு பைப்பால் தாக்கினர்.படுகாயமடைந்த பாண்டியனை சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்ந்தனர்.

பின் மேல் சிகிச்சைக்கு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து பாண்டியன் சகோதரர் ரகுநாதன் கொடுத்த புகாரின் பேரில் ஒரத்துார் போலீசார் கொலை முயற்சி வழக்குப் பதிந்து சிறுமியின் தாய் மற்றும் அவரது அண்ணனை கைது செய்தனர்.


இருளர் பெண்ணுக்கு தொல்லை கொடுத்த காமுகன் கைதுமதுராந்தகம்--மதுராந்தகம் அருகே, இருளர் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்தவரை, போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

மதுராந்தகம் அடுத்த காவாதுார் கிராமத்தைச் சேர்ந்த முருகன் மனைவி தேவி, 35. ஒரு வாரத்திற்கு முன், இரவு நேரத்தில் தன் குடிசை வீட்டில் உறங்கினார்.நள்ளிரவு 12:00 மணிக்கு, தேவியின் வீட்டிற்குள், அதே பகுதியைச் சேர்ந்த சுந்தரேசன், 44, என்பவர் புகுந்து, அவரிடம் தகாத முறையில் நடந்து கொள்ள முயன்றுள்ளார்.

தேவியின் கூச்சலை கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், அவரை பிடித்தனர்.எனினும் அவர், 'இங்கு நடந்ததை யாரிடமாவது கூறினால், உங்களை தொலைத்து விடுவேன்' எனக்கூறி, அங்கிருந்து தப்பிச்சென்றார்.இது குறித்து, தேவி புகாரின்படி, தலைமறைவாக இருந்த சுந்தரேசனை, சித்தாமூர் போலீசார் கைது செய்து, மதுராந்தகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் நேற்று அடைத்தனர்.


சினிமா இயக்குனர் 'புளு சட்டை' மாறன் போலீசில் புகார்சென்னை : 'தியேட்டரில் ரகளை செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, ஆன்டி இண்டியன் பட இயக்குனர், போலீசில் புகார் அளித்து உள்ளார்.latest tamil news
சென்னை, திருமுல்லைவாயலைச் சேர்ந்தவர் இளமாறன், 53. சமூக வலைதளமான, 'யு டியூப்'பில், திரைப்படங்களை விமர்சனம் செய்வார். இதனால், 'புளு சட்டை' மாறன் என அழைக்கப்பட்டு வருகிறார். இவர், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று அளித்துள்ள புகார்:'மூன் பிக்சர்ஸ்' என்ற நிறுவனத்தை நடத்தி வரும் ஆதம்பாவா என்பவரின் தயாரிப்பில், ஆன்டி இண்டியன் என்ற படத்தை இயக்கி உள்ளேன்.

படம் வெளியாகி 240 தியேட்டர்களில் ஓடுகிறது. முறையாக தணிக்கை செய்து, படத்தை வெளியிட்டுள்ளோம். தேனி மாவட்டம், பெரியகுளத்தில் உள்ள தியேட்டர் ஒன்றில், ஆன்டி இண்டியன் படத்தை திரையிடக் கூடாது' என, 10க்கும் மேற்பட்ட நபர்கள் நேற்று முன்தினம் இரவு தகராறு செய்துள்ளனர். தங்களை தேசிய கட்சி பிரதிநிதிகள் என்றும் கூறியுள்ளனர்.

மலிவான விளம்பரம், சுய அரசியல் லாபத்திற்காக ரகளை செய்து, எங்களிடம் பணம் பறிக்கும் நோக்கில் செயல்படும் நபர்கள் மீது, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


ஆன்-லைனில் கமிஷன் ரூ.5.32 லட்சம் மோசடி; சைபர் கிரைம் போலீசார் வழக்குதேனி : தேனி மாவட்டம், போடி அம்மாபட்டி பிள்ளையார் கோயில் தெரு சங்கீதா. இவர் எம்.பி.ஏ., படித்துள்ளார்.

ஆன்-லைன் வியாபாரம் செய்ய 'யூ-டியூப்'பில் தேடி, இணைய தளத்தில் பதிவு செய்து அதில் கொடுக்கப்படும் பணியை செய்தால் கமிஷன் கிடைக்கும் என தெரிவித்திருந்தனர். இதில் கமிஷன் பெறுபவர் பணம் செலுத்தினால் தான் லாபம் கிடைக்கும் என கூறினர். அதை நம்பிய சங்கீதா பல தவணைகளில் ரூ.5.32 லட்சத்தை இணையதளத்தின் தனியார் வங்கிக்கணக்கில் செலுத்தியுள்ளார்.

உறுதியளித்தபடி கமிஷனும் தரவில்லை, கட்டிய பணமும் கிடைக்கவில்லை. சங்கீதா புகாரின்பேரில் தேனி சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் அரங்கநாயகி, எஸ்.ஐ., தாமரைக்கண்ணன் விசாரிக்கின்றனர்.


மோட்டார் அறையுடன் கிணற்றில் புதைந்த பெண் சடலமாக மீட்புசிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே மோட்டார் அறையோடு கிணற்றுக்குள் புதைந்த அஞ்சலை 42, உடல் பல மணி நேர போராட்டத்திற்குப்பின் மீட்கப்பட்டது.


latest tamil news
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே எஸ்.செவல்பட்டி ஊராட்சி சித்தபட்டியைச் சேர்ந்தவர் ராசு மனைவி அஞ்சலை. டிச.12 காலை எஸ்.செவல்பட்டியில் உள்ள சோமன் என்பவரின் தோட்டத்திற்கு கூலி வேலைக்கு சென்றுள்ளார்.

இரவு வரை வீடு திரும்பாததால் அஞ்சலையை தேடி தோட்டத்திற்கு ராசு சென்றார்.அங்கு கிணற்றின் ஓரத்தில் இருந்த மோட்டார் அறை இடிந்து கிணற்றுக்குள் விழுந்திருந்தது.

கிணற்று மேட்டில் அஞ்சலையின் சாப்பாட்டு கூடை இருந்தது. மோட்டார் அறையோடு அஞ்சலையும் கிணற்றுக்குள் புதைந்திருக்கலாம் என கருதப்பட்டதால் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.தீயணைப்பு வாகனங்கள் கிணறு அருகே செல்ல வழி இல்லாததாலும், தண்ணீரை வெளியேற்ற போதிய மோட்டார்கள் கிடைக்காததாலும் மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டது.

நேற்று முன்தினம் இரவு முதல் தண்ணீரை வெளியேற்றி மண்ணை அகற்றும் பணியில் சிங்கம்புணரி, திருப்புத்துார் தீயணைப்பு வீரர்கள், எஸ்.எஸ்.கோட்டை போலீசார் ஈடுபட்டனர்.மீட்புப் படையினருக்கு உரிய தளவாடங்கள் கிடைக்கவில்லை. பல மணி நேரத்திற்கு பிறகு 5 மோட்டார்கள் உதவியுடன் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. ஆனாலும் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்து தண்ணீர் ஊறிக்கொண்டு இருந்தது.

தேவகோட்டை ஆர்.டி.ஓ., பிரபாகரன், திருப்புத்துார் டி.எஸ்.பி., ஆத்மநாதன், தாசில்தார் கயல்விழி, சம்பவ இடத்திற்கு வந்தனர்.மண்ணை அகற்றும்போது அஞ்சலையின் கை மட்டும் தெரிந்தது. தொடர்ந்து மண்ணை அகற்றி 24 மணி நேர போராட்டத்திற்குப்பின் நேற்று மாலை 6:00 மணிக்கு உடலை மீட்டனர்.


பேருந்து படிக்கட்டில் பயணம் அடாவடி மாணவர்கள் மீது வழக்குஊத்துக்கோட்டை--பஸ் படிக்கட்டுகளில் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் மாணவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என, போலீசார் எச்சரித்தனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பயலும் மாணவர்கள் பஸ்களில் பயணம் செய்யும் போது, பஸ்சின் உள்ளே காலியாக இருக்கைகள் இருந்தாலும், படிக்கட்டுகளில் ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர்.

கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், மெய்யூர் உள்ளிட்ட பகுதிகளில் பஸ்களில் ஆபத்தான முறையில் தொங்கிக் கொண்டு பயணம் செய்யும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.மாவட்ட எஸ்.பி., வருண்குமார் உத்தரவின்படி, ஊத்துக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்,

இது குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.காவல் ஆய்வாளர் குமார் தலைமையில் நடந்த கூட்டத்தில், 'இனி வரும் காலங்களில் மாணவர்கள் பஸ்கள் உள்ளே அமர்ந்து பயணம் செய்யாமல், ஆபத்தான முறையில் படிக்கட்டுகளில் பயணம் செய்தால் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும்' என்றார்.


சிறுமியுடன் 4வது திருமணம் அரசு பஸ் கண்டக்டர் கைதுகும்பகோணம் சிறுமி கோயம்பேடில் மீட்பு

கோயம்பேடு-பெற்றோர் திட்டியதால், கோபித்து கும்பகோணத்தில் இருந்து சென்னை வந்த சிறுமி மீட்கப்பட்டார்.கோயம்பேடு பஸ் நிலையத்தில், நேற்று சிறுமி ஒருவர் கையில் துணிப் பையுடன் சுற்றி திரிந்தார்.

இதை கவனித்த பெண் பயணி ஒருவர், சிறுமியை கோயம்பேடு போலீசாரிடம் ஒப்படைத்தார்.விசாரணையில், அச்சிறுமி கும்பகோணத்தைச் சேர்ந்த பார்த்திபன் என்பவருடைய மகள் என்பதும், பிளஸ் 1 படித்து வருவதும் தெரிய வந்தது.

தாய் திட்டியதால், கோபித்து கும்பகோணத்திலிருந்து பஸ்சில் கோயம்பேடு பஸ் நிலையம் வந்து இறங்கியுள்ளார்.அங்கிருந்து, எங்கு செல்வது என தெரியாமல் நின்றது தெரிய வந்தது. போலீசார் சிறுமியின் பெற்றோரை வரவழைத்து, சிறுமியை ஒப்படைத்தனர்.


ஐ.டி., ஊழியர், சபலத்தால் 52 ஆயிரம் ரூபாயை இழந்தார்மயிலாப்பூர்--பணி நிமித்தமாக சென்னை வந்த டில்லியைச் சேர்ந்த ஐ.டி., ஊழியர், சபலத்தால் 52 ஆயிரம் ரூபாயை இழந்தார்.

டில்லியைச் சேர்ந்தவர் மன்பிரீத் சிங், 33; ஐ.டி., ஊழியர். பணி நிமித்தமாக நேற்று முன்தினம் சென்னைக்கு வந்தவர், மயிலாப்பூரில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கினார். அன்று இரவு, அவரது மொபைல் போனுக்கு குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது.

அதில், பெண்களை உல்லாசத்திற்கு அனுப்புவதாக குறிப்பிடப் பட்டிருந்தது. இதை பார்த்த மன்பிரீத் சிங்கிற்கு சபலம் ஏற்பட்டு, அதில் குறிப்பிட்டு இருந்த எண்ணில் தொடர்பு கொண்டு பேசினார்.அதில் பேசிய மர்ம நபர், 'ஆன்லைனில் பணம் செலுத்தியவுடன் இளம்பெண்ணை அனுப்புவோம்' எனக் கூறியுள்ளார்.

உடனே மர்மநபர் கூறியபடி, 52 ஆயிரம் ரூபாயை, மன்பிரீத் சிங் செலுத்தி உள்ளார்.பணம் அனுப்பி, வெகுநேரமாகியும் எந்த பெண்ணும் வரவில்லை. அதன் பின்னரே, தான் ஏமாற்றப்பட்டது அவருக்கு தெரிய வந்தது.இது குறித்து மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரிக்கின்றனர்.


இந்திய நிகழ்வுகள்
பயங்கரவாதிகள் தாக்குதல்: 3 வீரர்கள் வீர மரணம்ஸ்ரீநகர் : ஜம்மு - காஷ்மீரில் ஆயுதப்படை போலீசார் சென்ற பஸ் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் மூன்று போலீசார் வீர மரணம் அடைந்தனர்.


latest tamil news
ஜம்மு - காஷ்மீரில் ஸ்ரீநகரில் பந்த்ரா சவுக் அருகே உள்ள செவானில் ஆயுதப்படை போலீஸ் முகாம் அமைந்துள்ளது. இதற்கு அருகே நேற்று மாலை போலீசார் சென்ற பஸ் மீது பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கியால் சுட்டனர்.

இதில் மூன்று போலீசார் வீர மரணம் அடைந்தனர். காயமடைந்த 14 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். தாக்குதல் குறித்து தகவல் அறிந்த பாதுகாப்பு படையினர் அப்பகுதியை சுற்றி வளைத்தனர். தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை தேடி வருகின்றனர்.

இது குறித்த தகவல் அறிந்த பிரதமர் மோடி, இதுபற்றிய விரிவாக அறிக்கை தாக்கல் செய்யும்படி ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேச நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.


பயங்கரவாதிகள் பலிஇதற்கிடையே ஸ்ரீநகரின் ரங்கரேத் பகுதியில் லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதை அறிந்த பாதுகாப்பு படையினர், நேற்று அப்பகுதியை சுற்றி வளைத்தனர்.

இரு தரப்பினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சண்டையின் முடிவில் இரு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். விசாரணையில், இறந்தவர்களில் ஒருவர் ஷோபியான் மாவட்டம் தரம்துாராவைச் சேர்ந்த ஆதில் அகமது வானி என்பதும், பாகிஸ்தானில் பயிற்சி பெற்றவர் என்பதும் தெரியவந்தது.வெளிநாட்டை சேர்ந்த மற்றொருவரை அடையாளம் காணும் பணிகள் நடப்பதாக அதிகாரிகள் கூறினர்.


ஏ.டி.எம்., கார்டை திருடி நாடகமாடிய நண்பர் கைதுபுதுச்சேரி-புதுச்சேரி அண்ணா நகர், 3வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் பிந்தி ரவி, 50; தனியார் நிறுவன ஊழியர். இவரது வங்கி கணக்கில் இருந்து, கடந்த அக்டோபர் மாதம், பல தவணையாக ரூ. 72 ஆயிரம் பணம் மாயமானது. அவரது ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி பணம் எடுக்கப்பட்டதாக, குறுந்தகவல் வந்தது.


latest tamil news
அதிர்ச்சி அடைந்த பிந்தி ரவி, புதுச்சேரி சி.பி.சி.ஐ.டி., சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் கணேஷ் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினார்.பணம் எடுக்கப்பட்ட நேரத்தை வைத்து, ஏ.டி.எம்., மையத்தில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

அதில், முதலி யார்பேட்டை ஜான்சி நகரை சேர்ந்த நண்பர் வெங்கட்ராமன் என்கிற பாலாஜிசுந்தரம், 50; பிந்தி ரவியின் ஏ.டி.எம்., கார்டை திருடி, பணம் எடுத்துச் சென்றது தெரிய வந்தது.அத்துடன், பிந்தி ரவியுடன் சைபர் கிரைம் போலீஸ் நிலையத்திற்கு வந்து புகார் தெரிவித்து, நாடகமாடி உள்ளார்.சைபர் கிரைம் போலீசார் நேற்று வெங்கட்ராமனை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X