வேடந்தாங்கல் சரணாலயத்திற்கு படையெடுக்கும் பறவைகள்: குடும்பத்துடன் கண்டுகளிக்கும் சுற்றுலா பயணிகள்

Updated : டிச 14, 2021 | Added : டிச 14, 2021 | கருத்துகள் (5) | |
Advertisement
மதுராந்தகம்: வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு, இந்த ஆண்டு சீசனில் 16 ஆயிரம் பறவைகள் வந்துள்ளதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. பறவைகளை காண, சுற்றுலா பயணியர் வரத்தும் அதிகரித்துள்ளது.செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த வேடந்தாங்கலில் பறவைகள் சரணாலயம் உள்ளது. ஆண்டுதோறும் அக்டோபர், நவம்பர் மாதங்களில், ஆஸ்திரேலியா, பர்மா, மியான்மர், பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை,


மதுராந்தகம்: வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு, இந்த ஆண்டு சீசனில் 16 ஆயிரம் பறவைகள் வந்துள்ளதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. பறவைகளை காண, சுற்றுலா பயணியர் வரத்தும் அதிகரித்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த வேடந்தாங்கலில் பறவைகள் சரணாலயம் உள்ளது. ஆண்டுதோறும் அக்டோபர், நவம்பர் மாதங்களில், ஆஸ்திரேலியா, பர்மா, மியான்மர், பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, ஐரோப்பா உள்ளிட்ட வெளி நாடுகளில் இருந்து, 26 வகைகளில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் வலசை வருவது வழக்கம்.
இனப்பெருக்கத்திற்கு பின், மே, ஜூன் மாதங்களில், சொந்த நாட்டிற்கு குஞ்சுகளோடு திரும்பும். இந்த ஆண்டுக்கான பருவ மழை துவங்கி, கடந்த மாதம் முழுதும் கன மழை பெய்ததால், வேடந்தாங்கல் ஏரி, அதன் முழு கொள்ளளவான 16 அடியை எட்டியுள்ளது.latest tamil news
கடந்த மாத இறுதியில் 10 ஆயிரம் பறவைகள் வந்த நிலையில், இம்மாத துவக்கம் முதல் பறவைகள் வரத்து அதிகரித்துள்ளது. தற்போது, 15 வகைகளில் 16 ஆயிரம் பறவைகள் வந்துள்ளன.பறவைகள் வருகையால், சென்னை உள்ளிட்ட சுற்று வட்டார மாவட்டங்களில் இருந்து, சுற்றுலா பயணியரின் வருகையும் வேடந்தாங்கலுக்கு அதிகரித்துள்ளது.
வனச்சரக அலுவலர் ரூபஸ் லெஸ்லி கூறியதாவது:
வேடந்தாங்கல் சரணாலயத்திற்கு, ஆண்டுதோறும் டிசம்பரில் பறவைகள் வரத்து அதிகமாக இருக்கும். இந்த ஆண்டு இதுவரை, நத்தை குத்தி நாரை, சாம்பல் நாரை, உன்னிகொக்கு, வெள்ளை அரிவாள் மூக்கன் என, 15 வகைகளைச் சார்ந்த 16 ஆயிரம் பறவைகள் வந்துள்ளன.
வெளிநாட்டு பறவைகளுக்கு, ஜனவரி மாதம் இனப்பெருக்கத்திற்கான சீசன் என்பதால், அந்த மாதத்தில் 20 ஆயிரம் பறவைகள் வந்து சேரும் என, எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.கட்டணத்தை குறைங்க!பறவைகளை பார்வையிட உயர் கோபுரம், பார்வையாளர்கள் மடங்கள், கற்கள் பதித்த நடை பாதை, பயணியர் அமர ஆங்காங்கே இருக்கைகள், விலங்குகள் மற்றும் பறவைகள் வடிவில் குடிநீர் குழாய்கள் என, பல்வேறு வசதிகள் இருப்பது பயணியருக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.


latest tamil newsபறவைகளை, உயர் கோபுரம் மேல் நின்று, 'டெலஸ்கோப், பைனாகுலர்' வழியாக பயணியர் பார்வையிட ஒரு நபருக்கு 20 ரூபாய் வீதம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. குடும்பத்தோடு வரும் சிலர் அதிகம் பணம் கொடுக்க தயங்கி, உயர் கோபுரம் மேலே சென்று பார்வையிட தயங்குகின்றனர். அதனால் அக்கட்டணத்தை குறைக்க கோரிக்கை எழுந்துள்ளது. அதேபோல், சரணாலயத்திற்குள் செல்ல நுழைவு கட்டணம் 10 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. உள்ளே கழிப்பறைக்கு தனியாக கட்டணம் வசூலிக்கபடுவதை தவிர்த்து, இலவச கழிப்பறை வசதி ஏற்படுத்த வேண்டும் என, பயணியர் எதிர்பார்க்கின்றனர்.


குரங்குகளின் தொந்தரவு


பறவைகள் சரணாலயத்திற்கு பயணியர் செல்லும் வழியில், குரங்குகள் அதிகம் உள்ளன. பயணியர் எடுத்து வரும் தின்பண்டம் உள்ளிட்ட உணவுப் பொருட்களை, குரங்குகள் பிடுங்குவதால், குழந்தைகள் முதல் பெரியோர் வரை அச்சப்படுகின்றனர். குரங்குகள் கூட்டத்தை கட்டுப்படுத்த, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
14-டிச-202118:56:19 IST Report Abuse
Bhaskaran Kaliparaikali muthalil suththam aaga paraamarikavum
Rate this:
Cancel
KayD - Mississauga,கனடா
14-டிச-202117:34:01 IST Report Abuse
KayD சுட்டு தின்னாமல் இருந்தால் சரி
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
14-டிச-202110:50:53 IST Report Abuse
vbs manian intha paravaigal sollum paadam எவ்வளவு அழகு. சிபெரியாவிலிருந்து இங்குள்ள புலிகட் ஏரி வேடந்தாங்கல் ஏரிகளுக்கு ஐந்தாயிரம் ஆறாயிரம் மைல் தூரம் பரந்து வருடா வருடம் வருகின்றன. பறப்பதற்கு எந்த கல்லூரியிலும் படிக்கவில்லை. ரஷ்யா பறவை இந்தியாவுக்குள் எப்படி வரலாம் என்று யாரேனும் கேட்கமுடியுமா. இயற்கை எல்லாவற்றையும் எல்லாஇடத்திலும் அரவணைத்து செல்கிறது. நமது அரசியல்வாதி வெளி மாநிலக்காரன் இங்கு வரக்கூடாது. இங்கு எல்லா வேலைகளும் உள்ளூர் மக்களுக்கே கொடுக்க படவேண்டும் என்கிறார். ரஷ்யா பறவைக்கு இந்தியா மொழி தெரியாது.அவை உல்லாசமாக பறந்து வாழ்க்கையை அனுபவிக்கின்றன. ஏன் நம்மால் அதோ அந்த பறவை போல் இருக்க முடியவில்லை.
Rate this:
raja - Cotonou,பெனின்
14-டிச-202116:45:12 IST Report Abuse
rajaஎப்படிங்க இப்படி...மனுஷனும் பறவையும் ஒண்ணா? வெளிமாநிலத்துகாரங்க இங்க வந்து முதல்வரா, அமைச்சரா இருக்காங்களே நம்ப தமிழகத்தில்.. இங்கே இருக்க கூடாது இன்னு சொல்லலையே தமிழன்...வெளி மாநிலத்து காரங்கத்தான் இப்போ நடவு நடுவதிலிருந்து திருப்பூருள மிசின் ஓட்டுவது வரை செய்கிறான்... தமிழன் தடுக்களையே...பீடா வாயன் திருட்டு திராவிடணுவோ சொன்ன பீஹாரித்தான் நம்ப திருட்டு தெலுங்கனுவொளுக்கு ஆலோசனை சொல்லி ஆட்சியில அமரவைக்க 380 கோடி கேட்டான்... அவங்களும் கொடுத்தாங்களே... இப்பவும் எல்லாரும் ஒண்ணுக்குள்ள ஒன்னாத்தான் இருக்கோமுன்னு சந்தோசப்படுங்க.......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X