கடைசி காலத்தை கழிக்க ஏற்ற இடம் காசி; மோடி வருகை குறித்து அகிலேஷ் கிண்டல்

Updated : டிச 14, 2021 | Added : டிச 14, 2021 | கருத்துகள் (92)
Advertisement
காசி: கடைசி காலத்தை கழிக்க ஏற்ற இடம் காசி என மோடியின் காசி வருகை குறித்து சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கிண்டலாக விமர்சித்துள்ளார்.அடுத்த ஆண்டு மார்ச் மாதம் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 7 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனை அடுத்து தற்போது முதல் இந்தியாவின் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் தேர்தல் பிரசாரம் களைகட்டத்
Akhilesh Yadav, Sneers, PM Modi, Varanasi Gala, When End Is Near, அகிலேஷ் யாதவ், பிரதமர் மோடி, வாரணாசி,

காசி: கடைசி காலத்தை கழிக்க ஏற்ற இடம் காசி என மோடியின் காசி வருகை குறித்து சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கிண்டலாக விமர்சித்துள்ளார்.அடுத்த ஆண்டு மார்ச் மாதம் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 7 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனை அடுத்து தற்போது முதல் இந்தியாவின் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் தேர்தல் பிரசாரம் களைகட்டத் தொடங்கிவிட்டது. இந்த தேர்தலில் காங்கிரஸ், சமாஜ்வாடி, பா.ஜ., உள்ளிட்ட மூன்று கட்சிகள் மும்முனைப் போட்டியில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் நேற்று (டிச.,13) காலை பிரதமர் மோடி தனது சொந்த தொகுதியான வாரணாசியில் காசி விஸ்வநாதர் ஆலயம் திறப்பு விழாவில் பங்கேற்றார். பின்னர் அவர் கங்கை ஆற்றில் நீராடினார்.


latest tamil news


இதுகுறித்து உத்தரப்பிரதேசத்தில் பிரசாரம் மேற்கொண்டு வந்த சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், 'பிரதமர் மோடி உங்களிடமும் என்னிடமும் பொய் கூறலாம், ஆனால் கடவுளிடம் கூற இயலாது' என விமர்சித்தார்.

பிரதமர் மோடியின் காசி வருகை குறித்து அகிலேஷ் யாதவிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பிய போது, 'மோடி மற்றும் அவரது சக ஆதரவாளர்கள் காசியில் ஒரு மாதம் மட்டும் அல்ல இரண்டு மூன்று மாதங்கள் கூட தங்கலாம். அவர்கள் தங்க ஏற்ற இடம் அது. பொதுவாக ஹிந்துக்கள் தங்களது கடைசி காலத்தை காசியில் கழிக்கவே விரும்புவர்'. இவ்வாறு அகிலேஷ் மறைமுகமாக விமர்சித்திருந்தார். இது தற்போது சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. இதற்கு பா.ஜ., உறுப்பினர்கள் பலர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (92)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
15-டிச-202105:31:34 IST Report Abuse
meenakshisundaram இப்போதே அகிலேஷ் தனது 'கடைசி காலத்தை தனது ஊரிலேயே கழித்துக் கொண்டிருப்பதாலேயே இந்த எண்ணம் அவருக்கு தோன்றி உள்ளது .ஆனா இவரும் இவன் அப்பனும் செஞ்ச பாவம் காசிக்கு போனாலும் தொலையாது
Rate this:
தாமரை செல்வன்-பழநி - பழநி,இந்தியா
18-பிப்-202220:49:01 IST Report Abuse
தாமரை செல்வன்-பழநி இவனெல்லாம் பிறந்தது நாம் செய்த பாவம். பதவிக்காக நாட்டையும் இந்த மக்களையும் பாகிஸ்தானுக்கு கூட்டிக் கொடுக்காத தயங்காதவங்கள் இவங்கள்....
Rate this:
Cancel
15-டிச-202104:59:13 IST Report Abuse
ராஜா இங்க ரெண்டு மார்கதானுவழுக்கு காசின்னா பின்னாடி பிச்சுகிட்டு போவுது... ஏன்னா காசியின் வரலாறு அப்பிடி. ராஜா அரிச்சந்தரன் ஊரு. வாடகைக்கு சாமிய எடுத்துவச்சிருகிறவங்களுக்கு பயமாதான் இருக்கும்.
Rate this:
Cancel
Susil Kumar - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
15-டிச-202100:10:31 IST Report Abuse
Susil Kumar என்னுடைய தலைவன் ஆள்வான் , நீயும் உன் வாரிசு குடும்பமும் ஒட்டு பிச்சை எடுக்கும் , மதிகெட்டவனே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X