வாரணாசி: சுயராஜ்ஜியம் போல், இந்தியாவிற்கு நல்லாட்சியும் மிகவும் முக்கியம் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
சத்குரு சதாபால்தேவ் விஹாங்கமின் 98 வது பிறந்த நாளை முன்னிட்டு நடந்த விழாவில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: காசியின் ஆற்றல் அப்படியே உள்ளது. அது விரிவடைந்து வருகிறது. பிரம்மாண்ட விஸ்வநாதர் கோயில் வளாகம் நேற்று அர்ப்பணிக்கப்பட்டது. வாரணாசியில் சாலைகள் அகலப்படுத்தப்பட்டுள்ளன. இன்று காசியின் பிம்பம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. நகரம் மருத்துவ மையமாக மாறி வருகிறது. வாரணாசியின் பலம் வெளிப்படையாக தெரிகிறது. நகரின் வளர்ச்சியை சாலைகள் வழியாக வரும் மக்கள் தெரிந்து கொள்ளலாம்.
முன்பை விட சுற்றுலா பயணிகளின் வருகை 2 மடங்கு அதிகரித்து உள்ளது. உண்மையான நோக்கம் இருந்தால், மாற்றம் ஏற்படுத்த முடியும் என்பதை வாரணாசி நகரம் நிருபணம் ஆக்கி உள்ளது. கேதர்நாத்திலும் வளர்ச்சி பணிகளும், அதிக வேலைவாய்ப்புகளும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.

சுய ராஜ்ஜியம்போல், இந்தியாவிற்கு நல்லாட்சியும் மிகவும் முக்கியம். சுதந்திர போராட்ட காலத்தில், நாட்டிற்கு சுதேசி என்ற தாரக மந்திரத்தை சத்குரு சத்குரு சதாபால்தேவ் விஹாங்கம் வழங்கினார். தற்போது, தன்னிறைவு இந்தியா திட்டம் துவங்கி உள்ளது. இதன் மூலம், உள்ளூர் வணிகம், வர்த்தகம், தயாரிப்புகள் பலப்படுத்தப்படுவதுடன், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் உலகளவில் விற்கப்படுகிறது.
நாடு 75 வது ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாட உள்ள நிலையில், சுயராஜ்ஜியம் போல், இந்தியாவிற்கு சுய ஆட்சியும் மிகவும் முக்கியம். ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயமானது, மிகப்பெரிய இயக்கமாக மாற வேண்டும். ஜீரோ பட்ஜெட் விவசாயம் மூலம் விவசாயிகளுக்கு செலவு குறைவதுடன், மண்வளமும் பெருகும்.
நமது தேசம் அற்புதமானது. சோதனை வரும் காலங்களில், சில துறவிகள், தங்களை மாற்றி கொள்வார்கள். ஆனால், இந்தியாவில் மிக மூத்த தலைவரை மஹாத்மா என உலகம் என அழைக்கும். இந்தியாவிற்கு புதிய பாதையை வாரணாசி காட்டி வருகிறது. யோகாவின் பலத்தை உலகம் இன்று அறிந்து வைத்துள்ளது. கங்கை நதியை தூய்மையாக வைத்து கொள்வது முக்கியம். பெண்களின் தனித்திறனை அதிகரிப்பதற்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE