திருநெல்வேலி: திமுக ஆட்சியை 6 மாதங்களுக்கு முன்பு காரம், இனிப்பு, கசப்பு எனக் கூறியதாகவும் ஆனால் தற்போது கமிஷன், கரப்ஷன் தலை தூக்கி வருவதாகவும் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை திருநெல்வேலியில் புதிதாக திறக்கப்பட்டுள்ள பா.ஜ., கட்சியின் மாவட்ட அலுவலகத்தை பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நன்றாக இருந்தால்தான் தமிழகம் அமைதியாக இருக்கும். தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அடிப்படைவாதிகள் அதிகரித்திருப்பதாக தகவல்கள் வந்தது. அவர்களுக்கும் இலங்கை கொழும்பு குண்டுவெடிப்புக்கும் சம்பந்தம் இருப்பதாக தமிழகத்தை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போதும் தமிழகத்தில் அடிப்படைவாதிகள் இயங்கி வருகின்றனர். இதுவரை பார்த்திராத பல்வேறு வழக்குகளை தற்போது தமிழகம் சந்தித்து வருகிறது.

தமிழகத்தில் பயங்கரவாதம் தலைதூக்க எல்லாவிதமான சூழ்நிலையும் இருக்கிறது. அதனால் தமிழக அரசு அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திமுக ஆட்சியை 6 மாதங்களுக்கு முன்பு காரம், இனிப்பு, கசப்பு என கூறினேன். ஆனால் இப்போது திமுக அடுத்த கட்டத்திற்கு வந்துவிட்டது. திமுக ஆட்சியில் கமிஷன், கரப்ஷன் ஆகியவை தலை தூக்கி வருகிறது. அதிமுக - பா.ஜ., கூட்டணி ஒரே கப்பலில் பயணம் செய்கிறது. கப்பல் நன்றாக நேராக போய் கொண்டிருக்கிறது. இந்த கூட்டணி, திமுக - காங்., கூட்டணி போன்று இல்லை. திமுக.,வின் பி டீமாக தான் தமிழக காங்கிரஸ் கட்சி செயல்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE