‛புருஷர்'களை புலம்ப வைத்த ‛புஷ்பா': பதற வைத்த பாடல் வரிகள்

Updated : டிச 14, 2021 | Added : டிச 14, 2021 | கருத்துகள் (22)
Advertisement
சென்னை : புஷ்பா படத்தில் சமந்தா ஆடி உள்ள ஓ சொல்றியா பாடல் ஆண்களை தவறாக சித்தரிப்பதாக கூறி எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ஐதராபாத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழகத்திலும் ஆண்கள் பாதுகாப்பு சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் நடிப்பில் உருவாகி உள்ள ‛பான்' இந்தியா படம் புஷ்பா. டிசம்பர் 17ல்
OoSolriyaOoOoSolriya, Pushpa, Samantharuthprabhu,

சென்னை : புஷ்பா படத்தில் சமந்தா ஆடி உள்ள ஓ சொல்றியா பாடல் ஆண்களை தவறாக சித்தரிப்பதாக கூறி எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ஐதராபாத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழகத்திலும் ஆண்கள் பாதுகாப்பு சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் நடிப்பில் உருவாகி உள்ள ‛பான்' இந்தியா படம் புஷ்பா. டிசம்பர் 17ல் திரைக்கு வர உள்ள இப்படத்தின் பாடல்கள், டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. சில தினங்களுக்கு முன் இந்த படத்தில் நடிகை சமந்தா ஆடி உள்ள கவர்ச்சி குத்தாட்ட பாடலான ஓ சொல்றியா மாமா என்ற பாடலின் லிரிக் வீடியோவை வெளியிட்டனர்.


latest tamil news



தேவிஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் சந்திரபோஸ் (தெலுங்கு) மற்றும் விவேகா (தமிழ்) ஆகியோர் எழுதியுள்ள இந்த பாடலை தமிழில் ஆண்ட்ரியா பாடி உள்ளார். 20 மில்லியனுக்கு அதிகமான பார்வைகள் இந்த பாடலுக்கு கிடைத்துள்ளது. இந்தநிலையில் இந்தப்பாடலில் இடம்பெற்றுள்ள வரிகள் அனைத்தும் ஆண்கள் சமுதாயத்தையே மோசமாக சித்தரிக்கும் விதமாக இருப்பதாகவும், ஆண்கள் காம எண்ணம் கொண்டவர்களாக மட்டுமே சித்தரித்து எழுதப்பட்டதாக கூறி அதனை தடை செய்ய வேண்டும் என ஆந்திர நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதனிடையே தமிழகத்திலும் இந்த பாடலுக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. தமிழகத்தில் உள்ள ஆண்கள் பாதுகாப்பு சங்கம் இந்த பாடல் ஆண்களை தவறாக சித்தரிக்கிறது, இளஞர்களை தவறான பாதைக்கு அழைத்து செல்லும் வகையில் உள்ளது என கூறி இந்த பாடலை தடை செய்ய வேண்டும் இல்லையென்றால் பாடலை பாடிய ஆண்ட்ரியா, நடனம் ஆடிய சமந்தா, பாடலாசிரியர், இசையமைப்பாளர் உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரப்படும் என எச்சரித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ram - mayiladuthurai,இந்தியா
15-டிச-202113:39:27 IST Report Abuse
ram சூப்பர் விளம்பரம், நல்லவேளை மோடி ஒழிக அது இது என்று இல்லாமல்
Rate this:
Cancel
Mannandhai -  ( Posted via: Dinamalar Android App )
15-டிச-202110:30:02 IST Report Abuse
Mannandhai உங்க புண்ணியத்துல பாட்டை கேட்டேன். நல்லாத்தான் இருந்தது.
Rate this:
Cancel
g.kumaresan - Chennai,இந்தியா
15-டிச-202108:38:59 IST Report Abuse
g.kumaresan சினிமாக்காரர்களை தமிழ்நாட்டில் நம்புகின்றவர்கள் அதிகம். சமுதாயத்தை இன்று கெடுத்துக்கொண்டு இருப்பது சினிமா,சீரியல் தான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X