சி.பி.ஐ., இயக்குனர் பதவி காலம் நீட்டிப்பு மசோதா நிறைவேறியது

Updated : டிச 14, 2021 | Added : டிச 14, 2021 | கருத்துகள் (4) | |
Advertisement
புதுடில்லி, :சி.பி.ஐ., இயக்குனரின் பதவி காலத்தை ஐந்து ஆண்டுகள் நீடிக்கும் சட்ட திருத்த மசோதா ராஜ்யசபாவில் இன்று (டிச.14)நிறைவேறியது.சி.பி.ஐ., இயக்குனராக பொறுப்பு வகிப்பவரின் பதவி காலம் தற்போது இரண்டு ஆண்டுகளாக உள்ளது; இதை ஐந்து ஆண்டுகளாக நீட்டிக்க மத்திய அரசு திட்டமிட்டது. இதற்காக டில்லி சிறப்பு போலீஸ் ஸ்தாபன சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளும் மசோதா லோக்சபாவில்
சி.பி.ஐ., இயக்குனர், காலம், மசோதா, நிறைவேறியது

புதுடில்லி, :சி.பி.ஐ., இயக்குனரின் பதவி காலத்தை ஐந்து ஆண்டுகள் நீடிக்கும் சட்ட திருத்த மசோதா ராஜ்யசபாவில் இன்று (டிச.14)நிறைவேறியது.


சி.பி.ஐ., இயக்குனராக பொறுப்பு வகிப்பவரின் பதவி காலம் தற்போது இரண்டு ஆண்டுகளாக உள்ளது; இதை ஐந்து ஆண்டுகளாக நீட்டிக்க மத்திய அரசு திட்டமிட்டது.
இதற்காக டில்லி சிறப்பு போலீஸ் ஸ்தாபன சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளும் மசோதா லோக்சபாவில் சமீபத்தில் நிறைவேறியது.மத்திய அரசு பணியாளர் நலத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திரா சிங் இந்த மசோதாவை ராஜ்யசபாவில் இன்று (டிச.14)தாக்கல் செய்தார்.


latest tamil news




இந்த மசோதா தொடர்பான விவாதத்தில் பங்கேற்கும்படி ராஜ்யசபா துணை தலைவர் ஹரிவன்ஷ் நாராயன் சிங் எதிர்கட்சியினருக்கு அழைப்பு விடுத்தார்.அப்போது சஸ்பெண்ட் செய்யப்பட்ட 12 எம்.பி.,க்களை சபை நடவடிக்கையில் பங்கேற்க அனுமதி அளிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து குரல்
ஓட்டெடுப்பு வாயிலாக சட்ட திருத்த மசோதா நிறைவேறியது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
15-டிச-202112:28:12 IST Report Abuse
ஆரூர் ரங் குறைவான பதவிக் காலம் கொடுத்தால் எந்த வழக்கையும் முழுமையாக😛 விசாரித்து தீர்ப்பு வாங்க முடியாது. ஒரே வழக்கை பல ஆண்டுகளாக 4 முதல் 7 சி பி ஐ இயக்குநர்கள் விசாரித்த😉 கொடுமையும் உண்டு.
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
15-டிச-202106:39:16 IST Report Abuse
Kasimani Baskaran சிபிஐயை கொலீஜியம் போன்ற ஒரு அமைப்பை வைத்து நிர்வகிப்பது என்று காங்கிரஸ் முடிவு செய்திருந்தது... மோடி ஆட்சிக்கு வந்ததால் அது முடியாமல்ப்போனது...
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
15-டிச-202106:14:49 IST Report Abuse
Mani . V ஏன் நாட்டில் திறமையான இளைஞர்களே இல்லையா? அது என்ன வாழ்நாள் பதவியா? ஒருவரின் ஓய்வுக்குப் பின் ஐந்து வருடம் நீட்டிப்பு என்பது அந்த துறையை தவறாக முன்நடத்த மேற்கொள்ளப்படும் முயற்சியாகவே தோன்றுகிறது. அதாவது காசுக்கேத்த தோசை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X