'ராகிங்' தடுக்க உறுதிமொழி; அண்ணா பல்கலை நடவடிக்கை

Added : டிச 15, 2021 | |
Advertisement
சென்னை : 'கல்லுாரிகளில் ராகிங் குற்றங்களை அனுமதிக்க மாட்டோம் என மாணவர்கள் உறுதிமொழி பதிவு செய்ய வேண்டும்' என அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.இதுகுறித்து அண்ணா பல்கலை மாணவர் விவகார மையத்தில் இருந்து இன்ஜினியரிங் கல்லுாரி முதல்வர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: பல்கலை மானியக் குழுவான யு.ஜி.சி. மற்றும் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான ஏ.ஐ.சி.டி.இ.
Anna University, Rocking, ban

சென்னை : 'கல்லுாரிகளில் ராகிங் குற்றங்களை அனுமதிக்க மாட்டோம் என மாணவர்கள் உறுதிமொழி பதிவு செய்ய வேண்டும்' என அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.

இதுகுறித்து அண்ணா பல்கலை மாணவர் விவகார மையத்தில் இருந்து இன்ஜினியரிங் கல்லுாரி முதல்வர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: பல்கலை மானியக் குழுவான யு.ஜி.சி. மற்றும் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான ஏ.ஐ.சி.டி.இ. நடைமுறைகளின்படி மாணவர்கள் அனைவரும் 'ராகிங்'கில் ஈடுபட மாட்டோம் என 'ஆன்லைன்' வழியில் உறுதிமொழி பத்திரம் அளிக்க வேண்டும்.

மாணவர்கள் www.antiragging.in amanmovement.org என்ற இணையதளங்களில் இந்த பதிவுகளை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


சுய விபரங்கள் பாதுகாப்பானதா


சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ள இணையதளத்தில் மாணவர் பெயர், பெற்றோர் பெயர், முகவரி, அலைபேசி எண், இ -- மெயில், கல்லுாரி பாடப்பிரிவு உள்ளிட்ட ஏராளமான விபரங்கள் கேட்கப்பட்டுள்ளன.


latest tamil news



அதில் ராகிங் தொடர்பான 12 கேள்விகளும் இடம் பெற்றுள்ளன. அதற்கும் மாணவர்கள் பதில் அளிக்க வேண்டும். அதன்பின் மாணவர்களின் இ - -மெயில் முகவரிக்கு பதிவு செய்யப்பட்டது குறித்த ஒப்புதல் தகவல் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த இணையதளம் யு.ஜி.சி.யின் நேரடி இணையதளம் இல்லை என்றும் ராகிங் ஒழிப்பு விழிப்புணர்வு பணியில் ஈடுபடும் தனியார் தொண்டு அமைப்பின் இணையதளம் என்றும் தெரிய வந்துள்ளது. எனவே இதில் பதிவு செய்யப்படும் தனிப்பட்ட தகவல்கள் பாதுகாப்பாக இருக்குமா என மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு அச்சம் எழுந்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X