நினைத்து பார்த்திராத வேகத்தில் பரவும் ஒமைக்ரான்: உலக சுகாதார அமைப்பு

Updated : டிச 15, 2021 | Added : டிச 15, 2021 | கருத்துகள் (15)
Advertisement
ஜெனிவா: உலகம் முழுவதும் பரவிவரும் ஒமைக்ரான் தொற்று, நினைத்து பார்த்திராத வேகத்தில் பரவுவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.ஒமைக்ரான் வைரஸ் அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் பரவி வருகின்றன. இது தொடர்பாக ஜெனிவாவில் உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ராஸ் அதானோம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தற்போதுவரை 77 நாடுகளில் ஒமைக்ரான் தொற்று
Omicron, Spreading, WHO, உலக சுகாதார அமைப்பு, ஒமைக்ரான், பரவும் வேகம்

ஜெனிவா: உலகம் முழுவதும் பரவிவரும் ஒமைக்ரான் தொற்று, நினைத்து பார்த்திராத வேகத்தில் பரவுவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.



ஒமைக்ரான் வைரஸ் அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் பரவி வருகின்றன. இது தொடர்பாக ஜெனிவாவில் உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ராஸ் அதானோம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தற்போதுவரை 77 நாடுகளில் ஒமைக்ரான் தொற்று பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் சில நாடுகளிலும் கண்டுபிடிக்கப்படாமல் ஒமைக்ரான் பரவியிருக்கலாம். இதற்கு முன்னர் கண்டறியப்பட்ட டெல்டா உட்பட எந்த உருமாற்ற வைரசும் இப்படி ஒரு வேகத்தில் பரவியதை நாங்கள் பார்க்கவில்லை. நினைத்து பார்த்திராத வேகத்தில் பரவும் ஒமைக்ரானை சில நாடுகள் குறைத்து மதிப்பிடுகின்றன.


77 நாடுகளில் ஒமிக்ரான் ஆட்டம்! | Omicron Virus | Tedros Adhanom Ghebreyesus | WHO | Dinamalar |

latest tamil news



ஒமைக்ரான் கடுமையான பாதிப்பை குறைந்த அளவில் ஏற்படுத்தினாலும், அதிக எண்ணிக்கையிலான பாதிப்புகள் மீண்டும் கையாள முடியாத வகையில் சுகாதார அமைப்புகளை மூழ்கடிக்கக்கூடும். தடுப்பூசியால் மட்டுமே ஒமைக்ரானை தடுக்க முடியாது. முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி, கைகளை அவ்வப்போது சுத்தம் செய்தல் போன்றவற்றை கடுமையாக பின்பற்ற வேண்டும். மேலும் தடுப்பூசி திறனை கணிசமான அளவில் ஒமைக்ரான் குறைப்பதாக சில தடுப்பூசி நிறுவனங்கள் கண்டறிந்துள்ளது, அதற்கான சான்றுகளும் கிடைத்துள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கவிஞன் பலா - Chennai,இந்தியா
16-டிச-202123:31:34 IST Report Abuse
கவிஞன் பலா வாழ்க வையகம்
Rate this:
Cancel
Sampath kumar Muthusamy - Sankagiri( tamilnad),இந்தியா
16-டிச-202108:52:26 IST Report Abuse
Sampath kumar Muthusamy உலக மக்களை பீதிக்குள்ளாக்குவதற்கு மட்டுமே இந்த மாபெரும் அறிவாளி இந்தப் பதவியில் இருக்கிறாரா அல்லது இந்த வைரஸ் பிரச்சினை தீரவே கூடாது என்று நினைக்கிறாரா?
Rate this:
Cancel
Raman - kottambatti,இந்தியா
16-டிச-202106:24:02 IST Report Abuse
Raman அடுத்த வியாபாரதுக்கு மருந்து ரெடி. இனிமே வருடா வருடம் ஒரு வைரஸ் (பெயர் மற்றம் செய்து) வந்துகொண்டே இருக்கும் போல.. மற்ற நோய்கள் எல்லாம் மக்கள் மறந்து விடலாம். மருந்து சாப்பிட தேவை இல்லை.. ஹி ஹி ஹி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X