குரூப் கேப்டன் வருண் சிங் சிகிச்சை பலனின்றி காலமானார்

Updated : டிச 15, 2021 | Added : டிச 15, 2021 | கருத்துகள் (32) | |
Advertisement
பெங்களூரு: ஹெலிகாப்டர் விபத்தில் 80 சதவீத தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விமானப்படை குரூப் கேப்டன் வருண் சிங், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த தகவலை இந்திய விமானப்படை வெளியிட்டுள்ளது.தமிழகத்தின் குன்னூர் அருகே கடந்த டிச.,8ம் தேதி நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி
TamilNaduChopperCrash, Group Captain, Varun Singh, Lone Survivor, Passes Away, Command Hospital, Bengaluru, ஹெலிகாப்டர் விபத்து, குரூப் கேப்டன், வருண் சிங், காலமானார், மறைவு, பிரதமர் மோடி, இரங்கல்

பெங்களூரு: ஹெலிகாப்டர் விபத்தில் 80 சதவீத தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விமானப்படை குரூப் கேப்டன் வருண் சிங், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த தகவலை இந்திய விமானப்படை வெளியிட்டுள்ளது.


தமிழகத்தின் குன்னூர் அருகே கடந்த டிச.,8ம் தேதி நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா மற்றும் ராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர். ஹெலிகாப்டரில் இருந்த குரூப் கேப்டன் வருண் சிங் மட்டும் 80 சதவீத தீக்காயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டார். அவர் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள விமானப்படை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தார்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே கடந்த 8 ம் தேதி நிகழ்ந்த விமானப்படை ஹெலிகாப்டர் விபத்தில், முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் இறந்தனர். 14 பேர் பயணம் செய்த நிலையில், குரூப் கேப்டன் வருண் சிங் மட்டும், 85 சதவீத தீக்காயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டார். வெலிங்டன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், பின்னர் மேல் சிகிச்சைக்காக, பெங்களூருவில் உள்ள கமாண்ட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருந்தார். மருத்துவ குழுவினர் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், வருண் சிங் இன்று இறந்தார்.


latest tamil news


வருண் சிங்குக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டு இருந்தாலும் அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (டிச.,15) அவர் உயிரிழந்ததாக இந்திய விமானப்படை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து கொள்வதாகவும், அவரின் குடும்பத்திற்கு விமானப்படை துணை நிற்கும் எனவும் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து ஹெலிகாப்டரில் பயணித்த 14 பேரும் உயிரிழந்துள்ளது, நாட்டு மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இறந்ததகவல் அறிந்த காட்டேரி கிராம மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

வருண் சிங் மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளனர்.


பிரதமர் இரங்கல்


latest tamil news


வருண் சிங்கின் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், 'குரூப் கேப்டன் வருண் சிங் பெருமை, வீரம் மற்றும் மிகுந்த தொழில்முறையுடன் தேசத்திற்கு சேவை செய்தார். அவரது மறைவால் நான் மிகவும் வேதனை அடைந்துள்ளேன். தேசத்திற்கு அவர் ஆற்றிய சேவை என்றும் மறக்க முடியாதது. குரூப் கேப்டன் வருண் சிங் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல். ஓம் சாந்தி,' என இரங்கல் தெரிவித்துள்ளார்.


பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், முதல்வர் ஸ்டாலின், ராணுவ அதிகாரிகள் மற்றும் பலர் வருண் சிங்கின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
16-டிச-202104:43:12 IST Report Abuse
J.V. Iyer அவர் குடும்ப உறுப்பினர்களுக்கு இதயப்பூர்வமான இரங்கல். அவர் ஆன்மா சாந்தி அடையட்டும். அவருக்கு நினைவு திரும்பியதா? ஏதாவது பேசினாரா? உண்மையை வெளியே கொண்டுவர ஒரே சாட்சி மறைந்துவிட்டார்.
Rate this:
Cancel
RAMAKRISHNAN NATESAN - LAKE VIEW DR, TROY 48084,யூ.எஸ்.ஏ
15-டிச-202123:07:57 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN ஆழ்ந்த இரங்கல்கள் நற்கதி அடையட்டும்
Rate this:
Cancel
padma rajan -  ( Posted via: Dinamalar Android App )
15-டிச-202120:22:37 IST Report Abuse
padma rajan சோகமான முடிவு. குடும்பத்தாருக்கு ஆறுதல் கூற வார்த்தைகள் இல்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X